மழை வெள்ள நிவாரணமாக ரூ.6,230 கோடி! விரைவில் விடுவிக்க முதல்வர் ஸ்டாலின் கடிதம்!!
மழை வெள்ள நிவாரணமாக
ரூ.6,230 கோடியை தமிழகத்துக்கு விரைவில் விடுவிக்க வேண்டும் அமித்ஷாவுக்கு முதல்வர்
ஸ்டாலின் கடிதம் தமிழகத்துக்கு மழை நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக கோரப்பட்ட
ரூ.6,230.45 கோடியை விரைவாக விடுவிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து
மத்திய அமைச்சருக்கு அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
கடந்த 2021ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்து சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது குறித்து தங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக மத்திய அரசிடம் இருந்து ரூ.6230.45 கோடி நிதியுதவி
கோரி தமிழக அரசால் மூன்று முறை கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றின்
3ம் அலை ஏற்கெனவே பரவியுள்ள நிலையில், தொற்றை எதிர்த்து போராடுவதற்கான முயற்சிகளை மாநில
அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கான பெரும் நிதித்தேவை, மாநில நிதிநிலையில் கடும்
தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதே வேளையில்
கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு விதிமுறைகள் ஏற்கெனவே வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரத்தை மேலும் கூட்டுவதாக அமைந்துள்ளது. வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கும் மாநில நிதியில் இருந்து
இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, வெள்ளச்
சேதம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக
நிதி விடுவிக்கப்பட்டால், மாநில மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். தமிழகத்துக்கு
விரைவாக நிதியுதவி அளிக்க தாங்கள் உதவ வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர். தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
KCC வைத்திருக்கும் விவசாயிகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp
Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...