தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் மண்நலம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி!!
மண் வளமே விவசாயிகளின் நலன்
மதுக்கூர் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் மண்வள அட்டை இயக்கத்தின் சார்பாக விக்ரமம் கிராமத்தில் 118 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சிக்கு தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி அவர்கள் தலைமை வகித்தார். விக்ரமம் ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன் முன்னிலையில் நடைபெற்ற பயிற்சியில் மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் மண்வளமே விவசாயிகளின் நலம் எனவே விவசாயிகள் மண்ணை பரிசோதனை செய்து மண்ணில் இருக்கும் சத்துக்களுக்கு தகுந்தவாறு தேவையான உரங்களை மட்டும் தேவையான நேரத்தில் இட்டு உரச் செலவை குறைக்கவும் மண் வளத்தை பெருக்கவும் கேட்டுக்கொண்டார்.
மண்நலம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
மதுக்கூர் கிராம முன்னோடி விவசாயி வித்யாசாகர் விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் மாடுகளைப் பராமரிப்பதன் மூலம் விவசாயிகள் தற் சார்பாக ஜீவாமிர்தம் மீன் அமினோ அமிலம் மற்றும் டீகம்போஸர் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் மூலம்
மண்ணின் வளத்தை மண்ணின் உயிர் சத்துக்களை மற்றும் நுண்ணுயிர்களின் பெருக்கத்தை அதிகரித்து இயற்கையான முறையில் மண்ணின் நலத்தை வரும் சந்ததிக்கு எவ்வாறு கொண்டு செல்லலாம் என தெளிவாக விளக்கியதோடு நெல் வயலில் அசோலா பயன்படுத்துவதன் மூலம் களைகளை கட்டுப்படுத்துவதோடு பயிருக்கு தேவையான தழைச்சத்தை காற்றில் இருந்து எவ்வாறு கிரகித்துக் கொடுக்கிறது.
இவற்றால் இயற்கையாக மண்ணின் வளமும் பயிரின் வளமும் எவ்வாறு செலவின்றி அதிகரிக்கிறது என்பதை விவசாயிகளுக்கு ஆலோசனை கொடுத்து விளக்கிக் கூறினார்.
வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் மண்வள அட்டையின் பயன்பாடு பயன்படுத்தும் முறைகள் மண்ணின் குறைகளை எவ்வாறு மண் வள அட்டை மூலம் கண்டறிந்து நிவர்த்தி செய்யலாம் என்பது பற்றி விவசாயிகளுக்கு தெளிவாக விளக்கிக் கூறினார்.
இப்கோ நிறுவன தஞ்சை மாவட்ட அலுவலர் சரவணன் அவர்கள் பயிருக்கு தேவையான தழை சத்தை வழங்கும் புதிய தொழில்நுட்பமான திரவ வடிவிலான நானோ யூரியாவை மேலுரமாக இடலாம் அதற்கு ஒரு லிட்டர் நீரில் 4 மிலி வீதம் நானும் யூரியா உரத்தை கலந்து பயிர்கள் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.
இதனால் பயிர்களுக்கு தேவையான தழைச்சத்து உடனடியாக கிடைக்கிறது ஒரு ஏக்கருக்கு 500 ml நானும் யூரியா உரத்தை தண்ணீர் கலந்து கைத்தெளிப்பானை பயன்படுத்தி இலைகள் மீது படும்படி தெளிக்கலாம் இதனால் ஒரு மூட்டை யூரியா உரம் இடுவதால் கிடைக்கும் பயன் 500 ml நானோ யூரியா பயன்படுத்துவதால் கிடைக்கும்.
மேலும் தொடர்ச்சியாக யூரியாவை அதிகளவில் பயன்படுத்துவதால் எவ்வாறு பூச்சி நோய்கள் அதிகரிக்கிறது என்பது பற்றியும் விளக்கிக் கூறினார் மேலும் வருங்காலங்களில் பொட்டாஷ் உரத்தையும் விவசாயிகளின் தேவைக்கேற்ப திரவ பொட்டாஸ் ஆக பயன்பாட்டுக்கு வர உள்ள நிலையைப் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
விக்ரமம் கிராம முன்னோடி விவசாயிகளான பழனியப்பன், பிரபாகர் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் வித்யாசாகர் மற்றும் இப்கோ அலுவலர் சரவணன் உடன் கலந்துரையாடி தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை முன்னோடி விவசாயி பிரபாகரன் செய்திருந்தார்.
வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் அட்மா திட்ட அலுவலர் மணி சிசி பணியாளர் பவித்ரா போன்றோர் மண்வள பயிற்சிக்கான கருத்து காட்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட விக்ரமம் கிராம செயலாக்க குழு கூட்டம் மற்றும் திட்ட விளக்க கூட்டம்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
மதுக்கூர் வட்டாரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விக்ரமம் மதுக்கூர் வடக்கு மற்றும் அத்திவெட்டி பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு அதன் கீழுள்ள விக்ரமம், வாடிய காடு, மதுக்கூர் வடக்கு அத்திவெட்டி கிழக்கு மேற்கு ஆகிய 5 வருவாய் கிராமங்களிலும் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் மற்றும் விவசாயிகளின் அடிப்படை விவரங்கள் சேகரிப்பு குறித்த கிராம அளவிலான செயலாக்க குழு கூட்டம் இன்றைய தினம் விக்ரமம் கிராமத்தில் நடைபெற்றது.
நாற்பத்தி ஆறு மகளிர் குழுக்களை சேர்ந்த குழு நிர்வாகிகள்
இக்கூட்டத்தில் நாற்பத்தி ஆறு மகளிர் குழுக்களை சேர்ந்த குழு நிர்வாகிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மற்றும் வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் விவசாயிகளுக்கு வேளாண் துறையின் திட்டங்கள் குறித்தும் அடிப்படை விபரங்கள் சேகரிப்பில் உள்ள சந்தேகங்கள் குறித்து தெளிவுபடுத்தினார்.
விக்ரமம் ஊராட்சி
விக்ரமம் ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன் விக்ரமம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட செயலாக்க குழு கூட்டத்திற்கு முன்னிலை வகித்தார்.
வேளாண் உதவி இயக்குனர் S.திலகவதி அவர்கள் வேளாண் துறை மூலம் வழங்கப்படும் திட்டங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களுக்கு வழங்கப்பட உள்ள முக்கியத்துவங்கள் குறித்து விவசாயிகளின் கிராம அளவிலான தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விக்ரமன் ஊராட்சி முன்னோடி விவசாயியான பிரபாகர் செய்திருந்தார்.
தகவல் வெளியீடு
S.திலகவதி
வேளாண்மை இணை இயக்குனர், மதுக்கூர்,
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும்
படிக்க....
18 லட்சம் கோடி விவசாயக் கடன் அறிவிப்பு! உத்தரவாதமில்லாத விவசாயக் கடன் ரூ.1.6 லட்சம்!!
பட்ஜெட் 2022-இல் விவசாயிகளுக்கான Kisan நிதி தொகை அதிகரிக்கவில்லை! எந்தெந்த பயிர்களுக்கு MSP சலுகை!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...