Random Posts

Header Ads

நெல்லில் குட்டைப்புல் நோய்ப் பரவும் விதமும், பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்!!


நெல்லில் குட்டைப்புல் நோய்ப் பரவும் விதமும், பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்!!


நெல் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் உணவுப் பயிராகும். நெல் பயிரானது பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் போன்ற பல்வேறு நோய்க் காரணிகளால் தாக்கப்பட்டு பல நோய்க்களுக்குள்ளாகி விளைச்சல் பாதிக்கப்படுகிறது. 


அவற்றுள் ஒன்று குட்டைப்புல் நோய். இதன் நோய்க் காரணிப் பற்றியும், கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் காண்போம்.



நோய்க்காரணி


இந்நோய் நெல் புல் தழைக்குட்டை நச்சுயிரியினால் தோற்றுவிக்கப்படுகிறது. இது உருளை வடிவில் காணப்படும்.

 

நோயின் அறிகுறிகள்


நோய்த் தாக்கியப் பயிர் வளர்சிக் குன்றி, குட்டையாகக் காணப்படும். இலைகள் மஞ்சள் அல்லது வெளிர் மஞ்சள் நிறமாகவும், மெல்லியதாகவும் இருக்கும். 


தண்டுகள் மிகவும் குட்டையாகவும், சிறுத்தும் ஒரே குத்தில் பலத் தூர்கள் தோன்றி, புல் போல அடர்த்தியாகத் தென்படும். இளம் தோகைகளில் சுருக்கங்களும், நெளிவுகளும் தோன்றும். 



முதிர்ந்த பழுப்பு நிற துருப் போன்ற புள்ளிகளும் தோன்றும். இந்நோய் நாற்றாங்காலிலும், இளம் பயிரிலும் அதிகமாகக் காணப்படும். 


தாக்கப்பட்ட செடிகளிலிருந்து பெரும்பாலும் கதிர்கள் வருவதில்லை. இலைகள் மஞ்சள் நிறத்தில் வளர்ச்சி குன்றி தென்படும்.

 

நோய்ப் பரவும் விதமும், பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்


இந்நோய் நிலப்பர்வதா லூகன்ஸ் என்னும் புகையான் தத்துப் பூச்சிகளால் தோற்றுவிக்கப்படுகிறது. இந்த பூச்சிகள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் போது இந்நோயும் அதிகளவில் தோன்றக் கூடும்.


நோய்க்கட்டுப்பாடு உழவியல் முறைகள்


புகையன்பூசிகல் மற்றும் நச்சுயிரிகள், பயிரில்லாத போது தங்கியிருக்கக் கூடிய சைப்பரஸ் ரோட்டான்டஸ் போன்ற புல் பூண்டுகள், வயல் வெளிகளிலும் சுற்றுப் புறங்களிலும் இல்லாமல் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.


வயலில் தேவைக்கு அதிகமாக நீர் தேக்கி வைக்கக் கூடாது. விளக்குப் பொறி வைத்து பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

 

மருந்து சிகிச்சை


ஏக்கருக்கு/பாஸ்போமிடான் –200 மில்லி – ஐ 200லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

 


நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்கள்


பி.ஒய் – 3 , கோ42 , ரோகிணி, ஜெயா போன்ற இரகங்கள் புகையான் தாக்குதலை எதிர்த்து வளரக் கூடியவை. ஆகவே இது போன்ற இரகங்களைப் பயிரிடுவதால் நோயிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும்.

 

தகவல் வெளியீடு


கு.விக்னேஷ், முனைவர் பட்டப்படிப்பு மாணவர் – தாவர நோயியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் – 608 002, தொடர்பு எண்: 82488 33079, மின்னஞ்சல் : lakshmikumar5472@gmail.com, B.தமிழ்செல்வன், Programme Assistant, ICAR – KVK – Karur.

 

மேலும் படிக்க....


தரமான நெல் விதைகள் உற்பத்தி செய்திட வயல்களில் உள்ள கலவன்களை அகற்றுங்கள்!!


PM கிசான்: இந்த விவரங்களை வழங்காமல் விவசாயிகள் 11வது தவணையைப் பெற மாட்டார்கள்!!


தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் மண்நலம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments