தரமான
நெல் விதைகள் உற்பத்தி செய்திட வயல்களில் உள்ள கலவன்களை அகற்றுங்கள்!!
விதைச்சான்றுத் துறை ஆலோசனை
விதை
உற்பத்தியில் கலவன்கள் எப்படி விதையின் தரத்தை பாதிக்கச் செய்கின்றன என்பதையும் அவற்றை
நீக்குவதால் விதையின் இனக்கலப்பு மற்றும் தரம் எப்படி பாதுகாக்கப்படுகின்றன என்பது
பற்றியும் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறை உதவி இயக்குநர் மே.ஷீபா
யோசனை தெரிவித்துள்ளார்.
நெல்
வயல்களில் கலவன் இருக்கும் போது பயிர்கள் ஒரே சீரான உயரம் இல்லாமல் படிக்கட்டுகள் போல
மேலும் கீழுமாய் தோன்றும். சில பயிர்கள் மிகவும் சீக்கிரமாகவே பூக்கும், வேறு சில பயிர்கள்
மிகவும் காலதாமதமாகி பூக்கும். இதனால் உற்பத்தி செய்யும் நெல் இரகத்தின் இனத்தூய்மை
வெகுவாக பாதிக்கப்பட்டு விதை தரமற்றதாக மாறி விடும்.
மேலும் ஒரு சில களைகள் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்து அறுவடையின் போது நெல் விதைகளுடன் கலந்து விடுகிறது. நெல் விதை உற்பத்தி வயலில் தோன்றும் சிவப்பு நெல்லின் விதையும் இவ்வாறு கலந்திடும் ஒரு விதையேயாகும்.
இதனால் விதையின் சுத்தத்தன்மை மிகவும் பாதிக்கப்பட்டு
விதைத்தரம் மிகவும் குறைந்து விடுகிறது. இதேபோல சில பூஞ்சாணங்கள் விதைகளைத் தாக்குவதால்
விதையின் தரம் வயல்வெளியிலேயே குறைந்து விட ஏதுவாகிறது.
கலவன்கள்
எவை?
விதைக்காக
நடவு செய்யப்பட்ட வயல்களில் அந்த குறிப்பிட்ட நெல் ரகத்தின் குணாதிசயங்களிலிருந்து
மாறுபட்டு தெரிகின்ற எல்லா பயிர்களையும் களை மற்றும் நோய் வாய்ப்பட்ட பயிர்களையும்
தக்க தருணத்தில் அதாவது அவைகள் பூக்கும் தருணத்திற்கு முன்னரே நீக்கி விடுதல் மூலம்
இனக்கலப்பில்லாத சுத்தமான நல்ல விதைகளை உற்பத்தி செய்யலாம்.
கலவன்கள்
நீக்குவது எப்போது?
பூக்கும் முன் அதிக உயரம் மற்றும் மிகவும் குட்டையான செடிகள் மற்றும் மிகவும் சீக்கிரமாக பூக்கும் செடிகளை அகற்ற வேண்டும். பூக்கும் தருணத்தில் மிகவும் காலதாமதமாக பூக்கும் செடிகள், பொட்டு நெல் ஆகியவற்றை நீக்க வேண்டும். அறுவடைக்கு முன் மீசை நெல் அகற்ற வேண்டும்.
அறுவடையின் போது விதை பயிர் மணியின் பருமனுக்கு ஒத்துப் பார்த்து சன்னம் மற்றும் குண்டு
நெல் ஆகியவற்றை நீக்க வேண்டும்.
கலவன்களை
நீக்குவதன் மூலம் தரமான விதை உற்பத்தி செய்வதுடன் விளைச்சலையும் அதிகரித்திட கன்னியாகுமரி
மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறை உதவி இயக்குநர் தெரிவித்தார்.
மேலும்
படிக்க....
18 லட்சம் கோடி விவசாயக் கடன் அறிவிப்பு! உத்தரவாதமில்லாத விவசாயக் கடன் ரூ.1.6 லட்சம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...