Random Posts

Header Ads

மரபணு மாற்று பயிர்களால் உற்பத்தி இழப்புகள்! பருவ மாற்று பிரச்சனைகளுக்கு தீர்வுகள்!!



மரபணு மாற்று பயிர்களால் உற்பத்தி இழப்புகள்! பருவ மாற்று பிரச்சனைகளுக்கு தீர்வுகள்!!


கடந்த பல ஆண்டுகளாக பருவமாற்றுப் பிரச்சனைகள் காரணமாக உலகம் முழுவதும் விவசாயிகள் கடுமையான உற்பத்தி இழப்புகள், பொருளாதார இன்னல்களை சந்தித்து வருகின்றனர். 


குறிப்பாக இந்தியாவை போன்ற பெருவாரியான மக்கள் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட நாட்டில், விவசாயிகளின் தனிநபர் சாகுபடி செய்யும் அளவும் வெகுவாகக் குறைந்து வரும் சூழலில் இந்தியாவில் விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வுரிமைகளை பாதுகாப்பது ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

 

நமது வேளாண் சாகுபடி புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது கடந்த 2015­ 2016 காலகட்டத்தில் இருந்து சிறு மற்றும் குறு விவசாயிகளின் நில சாகுபடி பரப்பளவு 47.41 என்றளவில் இருந்து வெகுவாக கடந்த 2000-2001 ஆண்டின் அளவான 38.9% என்ற அளவில் உயர்ந்து காணப்படுகிறது. 



இதன் வாயிலாக சிறு மற்றும் குறு விவசாயிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் சாகுபடி பரப்பளவும் குறைந்தும் காணப்படுகிறது. மேற்கண்ட காலத்தில் பெரும் விவசாயிகளின் சாகுபடி பரப்பளவும் 20% வரை குறைந்துள்ளது என்பதே புள்ளி விபரங்கள் காட்டும் உண்மை. 


இத்தகைய சூழலில் விவசாயிகளை முறையே ஒன்றிணைத்து அவர்களை உழவர் உற்பத்தியாளர் சங்கங்கள் வாயிலாக உற்பத்திப் பெருக்கம், சந்தைப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் பணிகள் வாயிலாக அவர்களுக்கு அதிகளவு லாபம் மற்றும் வருமானம் பெற்றுத்தரும் பல ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், நடைமுறை கிராமப்புற சூழலில் வெகு சில உழவர் உற்பத்தியாளர் சங்கங்களே தங்களுக்குத் தேவைப்படும் போதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி செயல்பட முடிகிறது. 


இத்தகைய நடைமுறை சூழலில் விவசாயிகளிடம் உற்பத்தி பெருக்கத்தை ஏற்படுத்தவும், நமது எதிர்கால உணவு தேவைகளை, சவால்களை சந்திக்கவும், பருவமாற்றுப் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகள் பெறவும் மரபண மாற்று தொழில்நுட்பத்தை (BT Technology) பயன்படுத்தும் தேவை, முக்கியத்துவம் பெறுகிறது.

 


மரபணு மாற்றுப் பயிர்களும், பருவமாற்றுப் பிரச்சனைகளுக்கு தீர்வுகளும்

 

உலகம் முழுவதும் மரபணு மாற்று சாகுபடி கடந்த 35 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் குறைந்தளவு தண்ணீர் மற்றும் உழவியல் முறைகளை பின்பற்றி விவசாயிகளால் சாகுபடி பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள முடிகிறது. 


பல பசுமை இல்ல வாயுக்களை வெகுவாகக் குறைக்கவும் முடிகிறது. நமது பாரம்பரிய ரகங்களில் உள்ள ஊட்டச்சத்துக்களை கொண்டதாக உள்ளது, தற்போது ராக் பெல்லர் அறக்கட்டளையின் நிதி உதவியுடன் உருவாக்கப்பட்ட தங்க அரிசி விவசாயிகளால் பயிரிடப்பட்டு பல நாடுகளில் ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் ஏற்பட்ட பார்வை குறைபாடுகளைத் தீர்க்க பெரிதும் துணைபுரிந்து வருகிறது. 


இதுவும் மரபணு மாற்று தொழில்நுட்பங்களை கொண்டு விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு பல லட்சம் ஏழை, எளிய மக்களின் ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கவும், அவர்கள் பார்வைக் குறைபாடு அடைவதை தடுக்கவும் பெரிதும் உதவி வருகிறது. 



இது ஒருபுறம் இருக்க நமது விவசாயிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஐஆர் 64 ரகத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு தமிழகத்தில் அதிகளவில் பருவமாற்றுப் பிரச்சனைகளால் தொடர்ச்சியாக பாதிக்கப்படும் கிழக்கு கடற்கரை மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டால் கடுமையான மழை, பெருவெள்ளம் மற்றும் பிற இயற்கை சீற்ற பாதிப்புகளை சந்திக்கும் வண்ணம் மரபணு மாற்றம் செய்து உருவாக்கப்பட்டு, இரண்டு வார கால அளவில் மழை நீரை தாங்கி வளரும்போது விவசாயிகளின் இழப்புகள் தவிர்க்கப்பட்டு, அவர்களின் வாழ்வுரிமைகள் பாதுகாக்கப்படுகிறது. 


இது போன்ற மரபுணு மாற்று எதிர்ப்பு திறன் கொண்ட பப்பாளி சாகுபடி “ரிங்கல் ஸ்பாட் வைரஸ் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. கடந்த சில ஆண்டுகளாக நமது நாட்டிற்கு மிகவும் அருகில் உள்ள வங்காள தேசத்தில் மரபணு மாற்று கத்திரி வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டு, சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 


இதனால் கத்தரி சாகுபடியில் அதிகளவு பயன்படுத்தப்பட்ட பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு வெகவாகக் குறைந்துவிட்டது. மேலும் தற்போது பல வருட தொடர் வேளாண் ஆராய்ச்சிகள் மற்றும் விரிவாக்கப் பணிகள் வாயிலாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி ரகங்கள் நெல்லைத் தாக்கி விவசாயிகளுக்கு கடுமையான பொருளாதார இழப்புகளை ஏற்படச் செய்யும் பாக்டீரியா நோய்களை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.



தற்போது நம்மைவிட அதிகளவு மக்கள் கொண்ட சீனாவில் கடந்த பல ஆண்டுகளாக மரபணு மாற்று பயிர்கள் சாகுபடி மற்றும் இறக்குமதிகள், ஏற்றுமதிகள் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில், உலகில் அதிகளவில் மரபணு மாற்றப் பயிர்களை சாகுபடியில் கொண்டுள்ள அமெரிக்கா, பிரேசில், கனடா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் பல ஆண்டுகள் சாகுபடி அனுபவத்தைக் கருத்தில் கொண்டு நமது நாட்டின் பெருகிவரும் பருவ மாற்று பிரச்சனைகளுக்கு தீர்வுகளை தந்தும், 


நமது நாட்டின் நிகழ் மற்றும் எதிர்கால உணவு தேவைகளை குறைந்தளவு சாகுபடி பரப்பளவு நிலத்தின் வளங்கள் அடிப்படையில் மேற்கொள்ள மரபணு மாற்று தொழில்நுட்பங்களை நமது பொதுத்துறை கட்டமைப்புகளை, வேளாண் மற்றும் தோட்டக்கலை துறைகள் வாயிலாக அறிமுகம் செய்து, வெற்றிகரமாக நமது சாகுபடிப் பணிகளைத் தொடரும் போது நம்மால் நமது தேசம் சந்தித்து வரும் பருவமாற்றுப் பிரச்சனைகள், ஊட்டச்சத்துக் குறைபாடுகள் மற்றும் பூச்சி, நோய்த்தாக்குதல்களின் இழப்புகளை வெகுவாகக் குறைத்து, 



நமது வேளாண் உற்பத்தியை பெருக்கி ஒரு இரண்டாம் பசுமைப் புரட்சி நமது நாட்டில் உருவாகச் செய்ய முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. இத்தகைய புதிய வேளாண் புரட்சி இயற்கை விவசாயத்தை சார்ந்தும், துல்லியமான வேளாண் தொழில்நுட்பங்களை கொண்டதாக இருக்கும்.


இதன் வாயிலாக பல படித்த கிராமப்புற இளைஞர்களுக்கு புதிய தொழில்கள் துவங்கவும், பல வேலை வாய்ப்புகள் உருவாகவும் பெரிதும் துணை புரியும் என்பதே நடைமுறை உண்மை. 


நமது நாடு 5 டிரில்லியன் அளவிற்கு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள சூழலில் நமது வேளாண் சார்ந்த துறைகளின் பங்களிப்பு இதில் முக்கியத்துவம் பெறுகிறது. 


எனவே நமது பருவமாற்று சவால்கள், ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் உற்பத்தி இழப்பு பிரச்சனைகளை சந்தித்தும், ஆக்கப்பூர்வமான இந்த சவால்களை வாய்ப்புகளாக உருமாற்றினால் நம்மால் நிச்சயம் உலக அரங்கில் குறுகிய காலத்தில் ஒரு பொருளாதார சக்தியாக உயர முடியும் என்பதில் சந்தேகமில்லை. 



இத்தகைய வளர்ச்சியை குறுகிய காலத்தில் எட்ட நமக்கு மரபணு மாற்று தொழில்நுட்பங்கள் வேளாண் துறையில் பெரிதும் துணை புரியும்.

 

தகவல் வெளியீடு


முனைவர் தி.ராஜ்பிரவின், இணைப்பேராசிரியர், வேளாண் விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.


மேலும் படிக்க....


தரமான நெல் விதைகள் உற்பத்தி செய்திட வயல்களில் உள்ள கலவன்களை அகற்றுங்கள்!!


18 லட்சம் கோடி விவசாயக் கடன் அறிவிப்பு! உத்தரவாதமில்லாத விவசாயக் கடன் ரூ.1.6 லட்சம்!!


பயிர்கள் அறுவடை செய்ய மிக குறைந்த வாடகை நிர்ணயம்! வேளாண்துறை அறிவிப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments