கறவை மாடுகளில் மடிநோய் சிகிச்சை! மடி வீக்க நோய், மடிக்காம்பு அடைப்பு, மடி நீர்வீக்கம்!!
மடி
வீக்க நோய் (அனைத்து வகை) தண்ணீர் அடிப்படையிலான தயாரிப்பு
இந்த முறையில் சிகிச்சை அளிக்க 250 கிராம் கற்றாழை, மஞ்சள் தூள் (50 கிராம்) மற்றும் சுண்ணாம்பு (15 கிராம்) வேண்டும். 50 கிராம் மஞ்சள் தூள், 15 கிராம் சுண்ணாம்பு, 250 கிராம் கற்றாழை ஆகியவற்றை நன்றாக 200 மிலி தண்ணீருடன் கலந்து அரைத்து சிவப்பு பசை போல் தயாரித்துக் கொள்ளவும்.
மடியை நன்றாக கழுவி பாதிக்கப்பட்ட மடியின் பகுதியில் வெளிப்புறமாகப் ஒரு நாளைக்கு 10 முறை 5 நாட்கள் வரை பசையை தொடர்ச்சியாக தேய்த்தால் நோய் குணமடையும். இறுதி நாளில் எண்ணெய் அடிப்படையிலான தயாரிப்பை பூச வேண்டும்.
மூன்று நாட்களுக்கு தினமும்
இரண்டு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி 3 முறை சாப்பிட கொடுத்தால் நோய் குணமடையும்
எண்ணெய்
அடிப்படையிலான தயாரிப்பு
இந்த முறையில் சிகிச்சை அளிக்க 250 கிராம் கற்றாழை, மஞ்சள் தூள் (50 கிராம்), சுண்ணாம்பு (15 கிராம்) மற்றும் கடுகு அல்லது நல்லெண்ணை- 600 மிலி வேண்டும். 50 கிராம் மஞ்சள் தூள், 15 கிராம் சுண்ணாம்பு, 250 கிராம் கற்றாழை ஆகியவற்றை 600 மிலி நல்லெண்ணையுடன் கலந்து பசை போல் தயாரித்துக் கொள்ளவும்.
மடியை நன்றாக கழுவி பாதிக்கப்பட்ட மடியின்
பகுதியில் வெளிப்புறமாகப் ஒரு நாளைக்கு 3 முறை 5 நாட்கள் வரை பசையை தொடர்ச்சியாக தேய்த்தால்
நோய் குணமடையும். மூன்று நாட்களுக்கு தினமும் இரண்டு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி
3 முறை சாப்பிட கொடுத்தால் நோய் குணமடையும்.
மடிக்காம்பு
அடைப்பு
இதற்கு சிகிச்சை அளிக்க புதிதாகப் பறித்து சுத்தம் செய்யப்பட்ட வேப்பம் தண்டு-1, மஞ்சள் தூள், வெண்ணெய் அல்லது நெய் வேண்டும். பாதிக்கப்பட்ட மடிக்காம்பின் நீளத்தின் அடிப்படையில் தேவையான நீளத்திற்கு வேப்பம் தண்டை நசுக்கவும்.
மஞ்சள் தூள், வெண்ணெய் மற்றும் நெய்
கலவையை வேப்பம் தண்டின் மீது நன்கு பூசவும். மருந்து கலவை பூசப்பட்ட வேப்பம் தண்டினை
பாதிக்கப்பட்ட மடிக்காம்புக்குள் எதிர் கடிகார திசையில் செருகவும். ஒவ்வொரு முறை பால்
கறந்த பிறகும் புதிய தண்டினை மாற்றவும்.
மடி
நீர்வீக்கம்
இதற்கு சிகிச்சை அளிக்க எள் அல்லது கடுகு எண்ணெய்–200 மில்லி, மஞ்சள் தூள் 1 கைப்பிடி, பூண்டு – 2 முத்துக்கள் வேண்டும். எண்ணெயைச் சூடாக்கி, மஞ்சள் தூள் மற்றும் நறுக்கிய பூண்டு சேர்க்கவும். நன்றாக கலந்து, கொதிக்க தொடங்கும் முன்பு தீயிலிருந்து அகற்றி குளிர்விக்கவும்.
ஒரு நாளைக்கு
4 முறை வீதம் 3 நாட்களுக்கு மடி நீர்வீக்கம் உள்ள பகுதி மற்றும் மடி மீது வட்ட முறையில்
விண்ணப்பிக்கவும்.
தகவல் வெளியீடு
முனைவர் க. அருணாசலம், பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப்
பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கருர்-6.
மேலும்
படிக்க....
18 லட்சம் கோடி விவசாயக் கடன் அறிவிப்பு! உத்தரவாதமில்லாத விவசாயக் கடன் ரூ.1.6 லட்சம்!!
தரமான நெல் விதைகள் உற்பத்தி செய்திட வயல்களில் உள்ள கலவன்களை அகற்றுங்கள்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...