சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு! வரும் 10ந் தேதி வரையிலான வானிலை அறிவிப்பு!!
வடகிழக்கு பருவமழை விலகிய நிலையிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அங்காங்கே லேசான மழை பெய்து வந்தது. சென்ற வாரம், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி மாதம் 30 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்தது வந்தது.
மேலும் பல மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்பட்டன. இந்த நிலையில் வரவிருக்கும் நாட்களில், பெரும்பாலான மாவட்டங்களில், வரும் பிப்ரவரி 10ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் அறிவிப்புவிடுத்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்னவென்றால், தமிழக உள் மாவட்டங்களில், இன்று முற்பகல் வரையிலான காலத்தில், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.
அதே நேரம் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்து இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், வரும் 10ம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்பது குறிப்பிடதக்கது.
சென்னையில் இன்று அதிகபட்சமாக, 32 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. கடந்த, 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் எங்கும் மழை பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மீனவர்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் விடுக்கவில்லை, மேலும் அவர்கள் எந்த வித தடையும் இன்றி வழக்கம் போல் மீன்பிடிக்கச் செல்லலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, கோடைக் காலத்தின் தொடக்கம் ஆரம்பம் ஆகிவிட்டது போல் தோன்றுகிறது. மக்களே விரைவில் கொலுத்த இருக்கும், வெயிலை எதிர்பார்த்து இருங்கள். இனி மழைக்கான வாய்ப்பு குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாட்களாக நிலவி வந்த வானிலை, மக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏனேனில் மழை அனைவரையும், வீட்டிலையே சிறைப்பிடித்து வைத்திருந்தது. மேலும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் ஏற்கனவே, சிறைவாசத்தில் இருந்தனர், என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றே.
இந்நிலையில், அடுத்து வரவிருக்கும் நாட்களில் வறண்ட வானிலை மட்டுமே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கும், இந்த செய்தி மனதிற்கு நிம்மதி அளிப்பதாக தோன்றுகிறது.
மேலும் படிக்க....
தமிழகத்தில் மீண்டும் மழைக்கான வாய்ப்பு! வானிலை மையம் புதிய அறிவிப்பு!
குறைவான நீரில் உளுந்து சாகுபடி நிறைவான மகசூல் பெற வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...