PM Kisan பயனாளிகளுக்கான, ஒரு நற்செய்தி! PM கிசான் மந்தன் யோஜனாவின் முக்கிய அம்சங்கள்!!
PM
Kisan பயனாளிகளுக்கான இரட்டிப்பு லாபம்
விவசாயிகளின்
நலனுக்காக மத்திய அரசு பல வகையான ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, அதில்
ஒன்று பிரதமர் கிசான் மன்தன் யோஜனா. இந்த ஆண்டு பட்ஜெட்டில் (பட்ஜெட் 2022), பி.எம்
கிசானுக்கான ஒதுக்கீடு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு
லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, கீழே படியுங்கள்.
பிரதமர்
கிசான் மான் தன் யோஜனா எவ்வளவு அதிகரிப்பு
பிரதமர் கிசான் திட்டத்தில் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் முன்பு 50 கோடி இந்த திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் கூடுதலாக, பிரதான் மந்திரி கிசான் மான் தன் யோஜனா ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தின்
கீழ் நீங்கள் முதுமையின் போது வாழ்வாதாரத்தை பராமரிக்கவும் ஆதரிக்கவும், இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
PM
கிசான் மந்தன் யோஜனாவின் முக்கிய அம்சங்கள்
இத்திட்டத்தின்
கீழ், தகுதியுடைய சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 60 வயதை எட்டினால், சில விலக்கு
நிபந்தனைகளுக்கு உட்பட்டு, குறைந்தபட்ச நிலையான ஓய்வூதியமாக மாதம் 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
பயனாளி சராசரியாக 29 வயதில் நுழைகிறார் என்றால் மாதம் ரூ.100 மட்டுமே பங்களிக்க வேண்டும். இந்த திட்டத்தின் விதிகளின்படி, 18 முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இதில் மாதத் தொகை ரூ.55 முதல் ரூ.200 வரை இருக்கும்.
பிரதமர் கிசான் மந்தன் யோஜனாவின் விதிகளின்படி, விவசாய மக்களின் ஓய்வூதியக் கணக்கை எல்ஐசி (LIC) நிர்வகிக்கும். பயனாளி 60 வயதுக்கு முன் இறந்துவிட்டால், பயனாளியின் மனைவி அல்லது பரிந்துரைக்கப்பட்டவர் (Nominee) அந்தத் தொகையை டெபாசிட் செய்து திட்டத்தைத் தொடர முடியும்.
மேலும் ஒரு பயனாளி, இந்த PMKMY திட்டத்திலிருந்து வெளியேற விரும்பினால், அவர் டெபாசிட் செய்த தொகையை வட்டியுடன் திரும்பப் பெறவும் முடியும்.
60 வயதிற்குப் பிறகு பயனாளி இறந்தால், மனைவிக்கு மாதாந்திர ஓய்வூதியத் தொகையில் பாதி, அதாவது ரூபாய் 1,500 மட்டுமே கிடைக்கும்.
ஓய்வூதியம் பெறும் பயனாளி மற்றும் அவரது மனைவி இருவரும் இறந்துவிட்டால், அந்தத் தொகை ஓய்வூதிய நிதிக்கு திரும்பிவிடும். விதிகளின்படி, பயனாளி தனது பெயரை திட்டத்தில் இருந்து திரும்பப் பெறும் வசதியும் உள்ளது.
திட்டத்தில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பயனாளி தனது பெயரை திரும்பப் பெற்றுவிட்டால், எல்ஐசி (LIC) அனைத்து பணத்தையும் வட்டியுடன் பயனாளிக்கு தொகையை திருப்பித் தரும்.
PM கிசான்
மாந்தன் யோஜனாவின் பலன்கள்
ஒரு பயனாளி தனது ஓய்வூதிய பங்களிப்பை திட்டத்தில் இருந்து டெபிட் செய்ய விரும்பினால், அவர் அதை தேர்வு செய்யலாம். பிரதம மந்திரி கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் 5.89 கோடி விவசாயிகளுக்கு முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 41 கோடி விவசாயிகளுக்கு இரண்டாம் தவணை பணம் இன்னும் தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும்
படிக்க....
PM கிசான்: இந்த விவரங்களை வழங்காமல் விவசாயிகள் 11வது தவணையைப் பெற மாட்டார்கள்!!
பட்ஜெட் 2022-இல் விவசாயிகளுக்கான Kisan நிதி தொகை அதிகரிக்கவில்லை! எந்தெந்த பயிர்களுக்கு MSP சலுகை!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...