இயற்கை வேளாண்மை மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு 2 லட்சம் பரிசு!!
வேளாண்மை துறையில் புதிய உள்ளூர் தொழில்நுட்பம், புதிய இயந்திரங்கள் கண்டுபிடிப்பு, இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளை 2021-22 ஆம் ஆண்டிலிருந்து இனி ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு அரசு ஊக்குவித்து பரிசளிக்கும்.
இதன் தொடர்ச்சியாக விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 2021-2022 ஆம் ஆண்டில் உள்ளூர் புதிய விவசாய தொழில்நுட்பங்களையும், புதிய இயந்திரங்களையும் கண்டுபிடிக்கும் விவசாயிகளை ஊக்குவித்து ரூபாய் 2 லட்சம் பரிசு வழங்கப்படவுள்ளது.
இதுமட்டும் இல்லாமல் இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளையும் ஊக்குவிக்கும் வகையில் தலா ரூபாய் 2 லட்சம் பரிசு வழங்கப்படவுள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள், முதலில் கைபேசியில் உழவன் செயலி மூலமாகத் தனது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இப்போட்டியில் குத்தகைக்கு சாகுபடி செய்பவர்களும் கலந்து கொள்ளலாம்.
இதற்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொண்டு, உரிய விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நுழைவுக்கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். அதன் பின்பு கட்டணத்தொகை செலுத்திய ரசீதுடன் விண்ணப்ப படிவத்தை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியான விவசாயிகளின் கண்டுபிடிப்புகள் மாவட்ட தேர்வுக்குழுவால் ஆய்வு செய்யப்பட்டு தேர்வு செய்யப்படும், பின் மாநிலக் குழுவிற்குப் பரிந்துரை செய்யப்படும்.
அதன் பின்பு விண்ணப்பங்கள் மாநிலக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு புதிய உள்ளூர் வேளாண் தொழில்நுட்ப கண்டுபிடிப்பிற்கு ஒரு விவசாயியையும் புதிய வேளாண் இயந்திர கண்டுபிடிப்பிற்கு ஒரு விவசாயியையும் தேர்வு செய்து தலா ரூபாய் 1,00,000 வீதம் பரிசு வழங்கப்படும்.
இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும் எனவும், இரண்டாம், மூன்றாம் பரிசாக முறையே 60,000, 40,000 ரூபாயும் வழங்கப்படும் எனவும் அதேபோல் வேளாண் ஏற்றுமதியில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிக்கு பரிசாக ரூ.2 இலட்சமும் வழங்கப்படவுள்ளது.
விண்ணப்பத்திற்கான
கால அவகாசம், வருகின்ற மார்ச் 18ம் தேதியுடன் முடிவடைய இருப்பதால், தகுதியுள்ள விவசாயிகள் உடனடியாக
தங்கள் பகுதியிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், துணை இயக்குநர் (தோட்டக்கலைத்
துறை), வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) ஆகியோர்களைத் தொடர்பு கொண்டு பயனடையுமாறு
செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முனைவர் எல்.சுரேஷ் தெரிவித்தார்.
மேலும்
படிக்க....
விவசாயிகளுக்கு உத்திரவாதமில்லாமல் ரூ.1.60 லட்சம் கடன் பெற விண்ணப்பிப்பது எப்படி?
இயற்கை முறையில் காட்டு பன்றிககளை விரட்டி அடித்து பயிர்களை பாதுகாப்பது எப்படி?
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...