இயற்கை முறையில் காட்டு பன்றிககளை விரட்டி அடித்து பயிர்களை பாதுகாப்பது எப்படி?



இயற்கை முறையில் காட்டு பன்றிககளை விரட்டி அடித்து பயிர்களை பாதுகாப்பது எப்படி?


ஊரக வேளாண் பணி அனுபவ திட்டம்


விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் விவசாயிகள் வேளாண் செய்வதில் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். இந்த பெரும் சவால்களில் முக்கியமான ஒன்று விலங்குகளின் தாக்கம். குறிப்பாக காட்டு பன்றிகள் சேதம். 


மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக விவசாயிகளை சந்தித்து விவசாய முறைகளையும், விவசாயம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களையும் கேட்டு தெரிந்து கொண்டு வருகின்றனர்.



காட்டுப் பன்றிகளால் வருவாய் இழப்பு


விவசாயிகள் பெரும்பாலானோர் சமீப காலங்களில் காட்டுப் பன்றிகள் மக்கச்சோளம், சோளம், பயறு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்கள், பழ மரங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற பயிர்களைத் தாக்கி சேதம் ஏற்படுத்துவதால் மகசூல் குறைவதோடு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது என கூறினார்கள். 


விரிஞ்சிபுரம் இயற்கை விரட்டி


விவசாயிகள் பொதுவாக உயிர்வேலி அமைத்தும், பட்டாசு வெடித்தோ, சொக்கப்பனை நெருப்பு அமைத்தோ காட்டுப்பன்றிகள் வரவிடாமல் தடுத்து வருகின்றனர்.

 

மேலும் கீழ்கண்ட மேலாண்மை தொழில்நுட்பத்தை முறையாக கடைபிடித்தால் காட்டுப்பன்றிகள் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். காட்டுப்பன்றிகளை விளைநிலத்திற்குள் வராமல் விரட்டி அடிக்க தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்ட திரவம் தான் விரிஞ்சிபுரம் இயற்கை விரட்டி ஆகும். 



இந்த இயற்கை விரட்டி திரவத்தின் செயல்திறன் 3 மாதங்கள் வரை நீடித்து இருக்கும். இயற்கை விரட்டியை நம் நிலத்தில் அமைப்பதற்கு கட்டுக் கம்பி, இரண்டு அடி குச்சி (பத்துக்குபத்து இடைவெளியில் வயலைச்துற்றி நட வேண்டும்). சிறிய பிளாஸ்டிக் டப்பாக்கள் (ஒரு ஏக்கருக்கு 90 டப்பாக்கள் போதுமானது). ஒரு ஏக்கருக்கு 500 மில்லி லிட்டர் திரவம் போன்ற பொருட்கள் தேவைப்படும்.

 

பயிர் செய்துள்ள நிலத்தைச் சுற்றி வரப்புகளில் 2 அடி உயரம் உள்ள குச்சிகளை 10 அடி தூரத்திற்கு ஒன்று என்ற வீதம் ஊன்றி, பிறகு ஒன்றரை அடி உயரத்தில் சணல் அல்லது கம்பி கொண்டு இணைத்துக் கட்டிட வேண்டும். 


மேலும் இரண்டு குச்சிகளுக்கு நடுவில் ஒரு சிறிய டப்பாவைக் கட்டி, திரவத்தை 5 மில்லி லிட்டர் அளவில் ஊற்றி மூட வேண்டும். அவ்வாறு செய்வதால் மழைநீர் உட்புகுந்து மருந்தின் வீரியத்தை குறைக்காது.



தேவைப்படுவோர் பயன்பெறலாம்


டப்பாக்களில் பக்கவாட்டு துளைகள் இடுவதால், அந்த திரவத்தின் வாசனை காற்றில் வெளிவந்து காட்டுப்பன்றிகளை வரவிடாமல் செய்கின்றன. நாற்பது நாட்களுக்கு ஒரு முறை டப்பாவில் இருக்கும் மருந்தை மீண்டும் நிரப்ப வேண்டும். இயற்கை விரட்டி மருந்து தேவைப்படும் விவசாயிகள் விரிஞ்சிபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் பணம் செலுத்தி வாங்கி பயன்படுத்தலாம்.

 

இந்த இயற்கை விரட்டியை பயன்படுத்தும்போது மருந்தை தண்ணீருடன் கலக்கக் கூடாது. இந்த விரட்டியானது இயற்கை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால் வன விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காது.

 


தகவல் வெளியீடு


து.சத்யா, த.சவிதா, ம.சத்யா, மு.செல்வமனோ, ர.ஷாலினி, க.சண்முகி, நான்காம் ஆண்டு மாணவிகள், வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை மற்றும் முனைவர் ப.வேணுதேவன், உதவிப் பேராசிரியர் (விதை அறிவியல்), வேளாண்மை அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை.


மேலும் படிக்க....


ஒரு விவசாயிக்கு 75%-90% வரையில் மானியம்! அதிகபட்சமாக ரூ.2700 வரையில் பெறலாம்!!


தரமான விதை உற்பத்திக்கு அறுவடைக்குப்பின் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!!


தற்போது உரத்திற்கு தட்டுப்பாடு! ஒரு மூட்டை விலை ரூ.1,000 வரை உயரும் என தகவல்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments