தற்போது உரத்திற்கு தட்டுப்பாடு! ஒரு மூட்டை விலை ரூ.1,000 வரை உயரும் என தகவல்!!

 


தற்போது உரத்திற்கு தட்டுப்பாடு! ஒரு மூட்டை விலை ரூ.1,000 வரை உயரும் என தகவல்!!


உரம் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கி வந்த மானியம் நிறுத்தப்பட்டதால் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தமிழகத்தின் பிரதான தொழில்களில் ஒன்றாக விவசாயம் இருந்து வருகிறது. 


குறிப்பாக, கோடிக்கணக்கான விவசாயிகள், நெல், கரும்பு, வாழை, மரவள்ளி கிழங்கு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு அறுவடை செய்து வருகின்றனர். இதில் பயிர்களின் நல்ல வளர்ச்சிக்கும், மகசூல் அதிகரிக்கவும் டிஏபி, காம்ப்ளக்ஸ், பொட்டாஷ், யூரியா போன்ற பல்வேறு வகையான உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 



ஒன்றிய அரசு நேரடியாக, தனியார் நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்கி, விவசாயிகளுக்கான உரத்தினை தயாரித்து வழங்கி வருகிறது.

 

 வேளாண் துறையால் உர மானியம்


தமிழகத்தை பொறுத்தவரை வேளாண் துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கடைகளிலும், கூட்டுறவு வங்கிகள் மூலமாகவும் விவசாயிகள் உரங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். 


இதற்கிடையே தனியார் உர நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கி வந்த மானியம் தற்பொழுது நிறுத்தப்பட்டுவிட்டது. மேலும் அந்நிறுவனங்களின் உரம் வரத்து குறைந்து கடும் தட்டுப்பாடு நிலவியுள்ளது. இதனால், விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

 


இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்தது: தமிழகத்தில் ஒன்றிய அரசின் மானியத்துடன் பிரதானமாக இரண்டு நிறுவனங்களின் உரம் விற்பனையில் இருந்து. தற்போது ஒன்றிய அரசின் மானியம் நிறுத்தப்பட்டதால், ஒரு நிறுவனத்தின் உரம் வரத்து நின்று, இதனால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


ஏற்கனவே, 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை உரம் கூட்டுறவு சங்கங்களில் ரூ.283-க்கும், தனியார் கடைகளில் ரூ.310-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போதைய சூழலில் நிலவி வரும் தட்டுப்பாட்டால் வரும் நாட்களில், ஒரு மூட்டை விலை ரூ.1,000 வரை உயரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


விவசாய உரத்தின் மானியத்தை பயன்படுத்தி, ஒரு சில நிறுவனங்கள் சோப் தயாரிப்பு, பால் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு கெமிக்கல் போன்றவற்றை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

 


உர மானியம் நிறுத்தத்தால் விலை உயர்வு 


இதன் காரணமாக ஒன்றிய அரசு மானியத்தை நிறுத்தியது. அதேவேளையில், உர நிறுவனங்களும் பாதிக்கப்பட்டதால், தற்போது உரத்திற்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலைமையை சரிசெய்யக்கோரி வேளாண் அதிகாரிகளிடம் கேட்டபோது, திரவ மருந்துகளை வாங்கி வயல்களில் தெளிக்கும்படி அறிவுறுத்தினர். 


இவற்றில், 250 மில்லி கொண்ட ஒரு திரவ மருந்து பாட்டிலின் விலை ரூ.350 ஆக இருக்கும் நிலையில், அதனை தெளிக்க ரூ.500 வரை கூடுதல் செலவும் ஆகிறது. இதனால், விவசாயிகளுக்கு பலமடங்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. மேலும் உரம் மூட்டைகள் விரைவில் பலமடங்கு விலை உயர வாய்ப்புள்ளதால், ஒருசில இடங்களில் வேண்டு மென்றே உரங்களை பதுக்கி வைத்து தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறார்கள்.

 

ஒருசிலர் குருணை மருந்து உள்ளிட்ட தேவையற்ற சிலவற்றை வாங்கினால் மட்டுமே, தேவையான உரம் விற்பனை செய்யப்படும் என விவசாயிகளை கட்டாயப்படுத்தி விற்பனை செய்கின்றனர். 



தற்போது பல ஆயிரம் ஏக்கரில் நெல், மரவள்ளி, மக்காச்சோளம் போன்றவை பயிரிடப்பட்டு, நன்கு விளைச்சல் நிலையை எட்டியுள்ளது. உரிய காலத்தில் அதற்கு தகுந்த உரமிட்டால் தான், எதிர்பார்த்த மகசூலை விவசாயிகள் பெறமுடியும். ஆனால், இந்த இக்கட்டான சூழ்நிலையில் உரம் தட்டுப்பாடு நிலவியுள்ளது.

 

மேலும் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, அனைத்து விவசாயிகளுக்கும் தட்டுப்பாடின்றி உரம் கிடைக்கச் செய்ய வேண்டும்.


மேலும் படிக்க....


இந்திய வானிலைத் துறை இணைந்து வழங்கும் வேளாண் சார்ந்த வானிலை முன்னறிவிப்பு!!


விதை நெல் வாங்கும் போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை!!


தரமான நிலக்கடலை விதை உற்பத்திக்கு பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு முறைகள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Post a Comment

0 Comments