தரமான நிலக்கடலை விதை உற்பத்திக்கு பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு முறைகள்!!


தரமான நிலக்கடலை விதை உற்பத்திக்கு பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு முறைகள்!!


தரமான நிலக்கடலை விதை உற்பத்தியில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்துவதன் அவசியம் குறித்து அரியலூர் - பெரம்பலூர் விதைச்சான்று உதவி இயக்குநர் சீ.தெய்வீகன் விடுத்துள்ள செய்தி,

 

அரியலூர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் நிலக்கடலை விதைப்பண்ணை 110.00 எக்டேர் பரப்பளவில் GJG-9, GJG-31, VRI-8, ICGV00350 மற்றும் தரணி ஆகிய ரகங்களில் அனைத்து வட்டாரங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. தரமான நிலக்கடலை விதை உற்பத்தி செய்ய நிலக்கடலை பயிரை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்த வேண்டும். 



நிலக்கடலை பயிரை தாக்கும் பூச்சிகளான இலையை உண்ணும் சுருள்பூச்சி, அமெரிக்கன் காய்புழு, சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, இலைப்பேன், மற்றும் பூஞ்சை நோய்களான முன் பருவ இலைப்புள்ளி, பின்பருவ இலைப்புள்ளி ஆகியவை அதிச சேதத்தை ஏற்படுத்தி மகசூல் பாதிப்பையும் தரமற்ற காய்களையும் ஏற்படுத்திவிடும்.

 

சுருள் பூச்சியானது புழு பச்சை நிறமாகவும், கருமை நிறத்தலையையும் கொண்டிருக்கும். புழு தாக்குதலினால் இரண்டு அல்லது மூன்று இலைகளை ஒன்றாக பிணைத்துவிடும். மேலும் இலைகளின் பச்சையத்தைச் சுரண்டி காய்ந்து தீயினால் எரிக்கப்பட்டது போல் காணப்படும். 


இதனை கட்டுப்படுத்த விளக்குக் கவர்ச்சி பொறியினை ஒரு எக்டருக்கு 12 இடங்களில் வைத்து அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம். மேலும் புரோபனோபாஸ் 50 EC லிட்டருக்கு 2 மி.லி அல்லது ஸ்பினோசேட் 45 EC லிட்டருக்கு 0.2 மிலி அல்லது குயினால்பாஜ் 25 EC லிட்டருக்கு 2 மி.லி என்ற வீதத்தில் தண்ணீருடன் கலந்து தெளிக்கவும். 



புகையிலை வெட்டுப்புழு பழுப்பு கலந்த பச்சை நிறத்தில் இருக்கும் உடலின் மேற்பரப்பில் கருமை நிற கோடுகள் காணப்படும். முழுவதும் வளர்ச்சி அடைந்த புழு இரவு நேரங்களில் இலைகளை முழுவதுமாக உண்டு அதிக சேத நிலையை ஏற்படுத்தும். அமெரிக்கன் காய்ப்புழு இளம் பச்சை நிறத்தில் இருக்கும். இப்புழுவானது இலை, மொட்டு மற்றும் மலர்களை உண்டு சேதப்படுத்தும். 


இப்புழுக்கனை கட்டுப்படுத்த வேப்பம் எண்ணை 5 மி.லி மற்றும் ஒட்டும் கிரம் 1 கிராம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு என்ற வீதத்திலும் அல்லது வேப்பம் கொட்டை சாறு 5 சதம் என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு என்ற வீதத்திலும் தாக்குதலின் ஆரம்ப நிலையில் தெளிக்கவும் மேலும் உயிரியல் காரணிகளான பேசிலஸ் துரியன்ஜுஸிஸ் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு என்ற வீதத்திலும் அல்லது பவேரியா பேசியானா 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு என்ற வீதத்திலும் தெளிக்கவும். 


அல்லது இனக்கவர்ச்சிபொறி ஒரு எக்டருக்கு 5 இடங்களில் வைத்து ஆண் அந்துப்பூச்சியினை கவர்ந்து அழிக்கலாம். இராசயன மருந்துகளான பூச்சிகொல்லிகளான குளோரிபைரிபாஸ் 20 EC 2.5 மி.லி/லிட்டர் அல்லது குயினால்பாஸ் 25 EC 2 மி.லி/லிட்டர் அல்லது புரோபெனோபாஸ் 50 EC 2 மி.லி/லிட்டர் அல்லது நவலூரன் 10 EC 1 மி.லி/லிட்டர் என்ற வீதத்தில் தண்ணீருடன் கலந்து தெளிக்கவும். 



சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி இலைப்பேன் ஆகியவை இலையின் அடிப்புறத்திலிருந்து சாறை உறிஞ்சுவதால் இலைகள் மற்றும் தண்டுகள் வளர்ச்சி குன்றி காணப்படும். சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த உயிரியல் காரணியான வெர்டிசிலியம் லெகானி 5 கிராம் லிட்டருக்கு என்ற அளவில் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம். 


அல்லது இராசயன பூச்சிகொல்லிகளான டைமெத்தோயெட் 30 EC 2மிலி அல்லது இமிடாக்ளோபிரைடு 17.8 எஸ்.எஸ் 0.3மி.லி அல்லது தியோக்ளோமிரைடு 480 எஸ்சி 0.3மி.லி அல்லது அசிட்டமிபிரைடு 20 SP 0.2 கிராம் லிட்டருக்கு என்ற அளவில் தண்ணீருடன் கலந்து தெளிக்கவும்.

 

நிலக்கடலை பயிரில் பூஞ்சை நோயான முன்பருவ இலைப்புள்ளி நோய் விதைத்த ஒரு மாதத்திற்கு பிறகு இந்நோய் தோன்றும். இந்நோயினால் இலைகளின் இரண்டு பக்கங்களிலும் வட்டமான கரும் பழுப்பு அல்லது கருப்புப்புள்ளி இருக்கும். 


கரும்புள்ளியைச் சுற்றி மஞ்சள் நிற வளையங்கள் காணப்படும். இப்புள்ளிகள் காம்புகளிலும், தண்டுகளிலும் காணப்படும். இதே போல் பின்பருவ இலைப்புள்ளி நோய் (டிக்கா இலைப்புள்ளி நோய்) நோய் விதைத்த 55-60 நாட்களில் அறிகுறிகள் தென்படும். 



அறுவடை வரை இருக்கும். வட்டவடிவ கருப்பு நிறப்புள்ளிகள் இலையின் அடிப்பாகத்தில் காணப்படும். இப்புள்ளிகள் ஒழுங்கற்ற வடிவிலும், இப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலையின் காய்ந்த தோற்றத்தை கொடுக்கும். இறுதியில் இலைகள் உதிர்ந்துவிடும். 


இலைப்புள்ளி நோய்களை கட்டுப்படுத்த புரோமிகொனசோல் 25 EC 1 மி.லி அல்லது ஹெக்சாகொனசோல் 5 EC 1 மி.லி அல்லது டெமகொனசோல் 25.9 EC 1.5 மிலி லிட்டருக்கு என்ற அளவில் ஹெக்டருக்கு 500 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கவும்.

 


எனவே மேற்கூரிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் கடைபிடித்து நிலக்கடலையை சேதப்படுத்தும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தி அதிக மகசூல் மற்றும் தரமான நிலக்கடலை காய்களை பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க....


பருப்பு வகைகளுக்கான விலை முன்னறிவிப்பு! வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு!!


PM Kisan விவசாயிகளுக்கு 11- வது தவணை எப்போது? FTO is Generated உங்களின் நிலை என்ன?


விவசாயம் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க புதிய நடவடிக்கை!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments