PM Kisan விவசாயிகளுக்கு 11- வது தவணை எப்போது? FTO is Generated உங்களின் நிலை என்ன?
பிஎம்
கிசான் திட்டத்தின் 11-வது தவணைத் தொகை, அடுத்த மாதம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில்
செலுத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விவசாயிகள் இதனால் மார்ச் மாதம் அந்தத் தொகையை
எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.
பிஎம்
கிசான் திட்டம்
இந்தியாவில் உள்ள நலிவடைந்த விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கத்தில் மத்திய மோடி அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-kisan) என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தத்
திட்டத்தின் மூலமாக தகுதி உடைய விவசாயிகளுக்கு மட்டுமே ஆண்டுதோறும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.
ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என ஒரு ஆண்டில் மொத்தமாக 3 தவணைகள் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப்
பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக வரவும் வைக்கப்படுகிறது.
11-வது
தவணை
பிஎம்
கிசான் திட்டத்தில் இதுவரையில் 10 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டன. இப்போது 11ஆவது தவணைக்காக
விவசாயிகள் காத்திருக்கிறார்கள். 11வது தவணையானது அடுத்த மாதம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில்
வரவு வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இருப்பினும் ஏப்ரல் மாத இறுதிக்குள்
பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிடும் என்று உறுதியாகத் கூறப்பட்டுள்ளது.
புதிய
விதி
பல விவசாயிகளின் கணக்குகளில், FTO உருவாக்கப்பட்டு, பணம் செலுத்துவதற்கான நிலை நிலுவையில் உள்ளது. FTO என்பது Fund Transfer Order. உங்களுடைய பயனாளர் கணக்கிலும் இப்படி சரியாக உள்ளதா என்பதை உடனடியாக உறுதி செய்துகொள்ளுங்கள். ஒரு வேலை சரியாக இல்லையெனில் அடுத்த மாதம் உங்கள் கணக்கில் பணம் வராமல் போக வாய்ப்புள்ளது.
மேலும்
பிஎம் கிசான் திட்டத்தின் பயனாளிகள் இ-கேஒய்சி செய்வது 10 வது தவணை முதலே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
PM Kisan வெப்சைட்டில் சென்று, எந்தவொரு விவசாயியும் தனது ஆதார் எண், மொபைல் நம்பர்
அல்லது வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிட்டு தங்களுடைய பயனாளர் பட்டியல் விவரத்தினை சரிபார்த்துக் கொள்ளலாம்.
மேலும்
படிக்க....
விவசாயிகளே!! உர விலையை உயர்த்தத் திட்டம்! விவசாயிகளுக்கு எச்சரிக்கை!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...