50% சதவீத மானியத்தில் நேரடி நெல் விதைப்பு கருவிகள்!! ரூ.2500 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்!!
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் நேரடி நெல் விதைப்பு கருவிகள் விவசாயிகளுக்கு 50% சதவீத மானியத்தில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது நெல் சாகுபடியில் நிலவி வரும் அதிக செலவினத்தையும் நேரடி நெல் விதைப்பில் உள்ள சாதகமான குறைந்த அளவு நீர் தேவையை மனதில் கொண்டு விவசாயிகள் தற்போது நேரடி விதைப்புக்கு அதிக அளவில் மாறிவருகின்றனர்.
அதிக லாபம் கிடைக்க நேரடி நெல் விதைப்பு கருவிகள்
நேரடி விதைப்பு கருவி மூலம் விதைப்பதால் நாற்றங்கால் செலவு நடவு செலவு குறைவதோடு நீர் தேவையும் குறைகிறது. இதனால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த விதை கருவியானது ஒரு கருவியின் விலை ரூபாய் 5,100 என்ற விலையில் மதுக்கூர் வேளாண் விரிவாக்க மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
பின்னேற்பு மானியமாக ரூ. 2500
இதில் ரூபாய் 2500 பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இக்கருவியானது விவசாயிகள் பயன்படுத்துவதற்கு மிக எளிதாகவும் எடை குறைவாகவும் இருப்பதால் நேரடி விதைப்பு பணியினை மிக எளிதாக மேற்கொள்ள இயலும்.
குறுகிய கால நெல் ரகங்களான ஏஎஸ்டி16 மற்றும் டிபஎஸ் 5 ஆகிய ரகங்கள் பயன்படுத்தி புழுதி விதைப்பாக தெளித்து கோடை சாகுபடியை மேற்கொள்ளலாம். இக்கருவி புழுதி விதைப்பு மற்றும் சேறு கலக்கப்பட்டு பரம்பு அடித்த வயல் ஆகிய இரு சூழல்களிலும் பயன்படும்.
இவ்வாறு செய்வதால் விதை அளவு குறைவதோடு நாற்றங்கால் தயாரிப்பு பணி நாத்து பரியல் மற்றும் நடவு பணி போன்றவைகளுக்கான தேவைகள் குறைந்து செலவு குறைகிறது. 10-15 நாட்களுக்கு முன்னதாகவே அறுவடைக்கு வந்துவிடும்.
ஒரே நாளில் விதைப்பு பணியை முடித்துக் கொள்ளலாம்
நீர் தேவையும் குறைந்து விடுகிறது எனவே விவசாயிகள் வீட்டுக்கு ஒரு நேரடி நெல் விதைப்புக் கருவியை வைத்துக் கொள்வதன் மூலம் இரண்டரை ஏக்கர் வரை தனி ஒருவரை பயன்படுத்தி ஒரே நாளில் விதைப்பு பணியை முடித்துக் கொள்ள இயலும் நேரடி விதைப்பு கருவியானது 4 விதை பெட்டிகளுடன் 25 சென்டி மீட்டர் இடைவெளியில் இணைக்கப்பட்டு ஒரு கைப்பிடி மூலம் இழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விதை பெட்டியிலும் 10 சென்டி மீட்டர் இடைவெளியில் துளையிடப்பட்டுள்ளது இரண்டு சக்கரங்களும் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டுள்ளது. உள்பகுதியில் உள்ள சூழலும் தண்டின் கீழ்ப்பகுதி வரை மட்டுமே விதை நெல்லை கொட்டவேண்டும்.
விதை பெட்டிமுழுவதும் நெல்லைக் கொட்டி மூடுவதால் விதைப்புக் கருவியை இழுப்பதில் சிரமம் ஏற்படும் எனவே அரைப்பெட்டி அளவுக்கு மட்டும் விதைகளை விதைத்து கிழக்கு மேற்காக இக் கருவியை இழுத்து செல்வதன் மூலம் ஒரே நேரத்தில் 8 வரிசைகளில் 25 சென்டி மீட்டர் இடைவெளியிலும் விதைக்கு விதை 10 சென்டி மீட்டர் இடைவெளியும் கொண்டு விதைக்கலாம்.
இதனால் பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்படுவதோடு 25 சென்டி மீட்டர் இடைவெளியில் கோனோவீடர் கொண்டு 20 ஆம் நாளில் இருந்து 10 நாட்களுக்கு ஒரு முறை இழுத்து களைகள் கட்டுப்படுத்துவதோடு புதிய வேர்கள் சிம்புகள் வெடித்து நிறைய கிளைகள் வைக்கும்.
இதனால் கதிர்களும் அதிகரிக்கிறது விதைப்புக் கருவி கொண்டு விதைத்த 10 ஆம் நாள் அவசியம் ஏதேனும் ஒரு களைக்கொல்லியை தெளித்து கட்டுப்படுத்துதல் அவசியம். கிழக்கு மேற்காக நெல் விதைப்பு செய்வதால் சூரிய ஒளி தேவையான அளவு கிடைப்பதோடு பூச்சி நோய்த் தாக்குதலும் குறைவாக இருக்கும்.
நெற்பயிருக்கு கதிர் பரியும் நேரத்தில் அவசியம் வயலில் நீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நேரடி விதைப்பு செய்த வயல்களில் கதிர் பரியும்வரை காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் கட்டுவதால் ஆரம்பகால நீர் தேவையை குறைத்து தேவையான நேரத்தில் பயிருக்கு நீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ள முடியும்.
35-லிருந்து 40 மூட்டை வரை மகசூல்
நேரடி விதைப்பு கருவி மூலம் விதைப்பு செய்த வயல்களில் சராசரியாக ஏக்கருக்கு 60 கிலோ மூட்டை 35-லிருந்து 40 வரை கிடைக்கிறது. இவ்வாறு நேரடி நெல் விதைப்புக் கருவி மூலம் விதைக்க முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் திலகவதி அவர்கள் நெல் விதைப்புக் கருவியை மானியத்தில் விக்ரமத்தை சேர்ந்த பழனியப்பன் மற்றும் காடந்தங்குடி துரையரசன் அவர்களுக்கு வழங்கினார்.
துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன் ஜெரால்டு ஆகியோர் விதைப்புக் கருவியின் பயன்பாட்டில் உள்ள சந்தேகங்களுக்கு விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
மேலும் இந்த கருவி மூலம் விதைப்பதால் ஏக்கருக்கு ரூபாய் 6 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் வரை செலவும் குறைகிறது என தெரிவித்துக் கொண்டார். எனவே விவசாயிகள் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் மானியத்தில் நேரடி நெல் விதைப்பு கருவி களை பெற்று பயன்பெற வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டார்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை இணை இயக்குனர், மதுக்கூர்,
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும்
படிக்க....
விவசாயிகளுக்கு PVC குழாய் பாசனத்திற்கு ரூ.15,000 அல்லது 50% சதவீதம் மானியம்! வேளாண்துறை அறிவிப்பு!!
விவசாய பணிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வேளாண்துறை அழைப்பு!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...