விவசாய பணிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வேளாண்துறை அழைப்பு!!
மாவட்ட ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி
மாவட்ட விவசாயிகள் விவசாய பணிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும்
கருவிகளை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழக அரசு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தற்போது இருக்கின்ற சூழலில்
வேலையாட்கள் பற்றாக்குறையினை சமாளித்து, வேளாண் பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிப்பதற்கு
தூத்துக்குடி மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்காக வேளாண் இயந்திரங்கள்
மற்றும் கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையில் மண் தள்ளும் இயந்திரங்கள், சக்கரவகை மண் அள்ளும் இயந்திரங்கள், ஜேசிபி இயந்திரங்கள், உழுவை இயந்திரங்கள் மற்றும் வாகனத்தடன் இயங்கக்கூடிய தேங்காய் பறிக்கும் இயந்திதிரங்கள் போன்றவை இருப்பு உள்ளன.
மேலும் வேளாண் கருவிகளும் உள்ளன, உழுவை இயந்திரத்துடன் இணைத்து இயக்கக்கூடிய கருவிகளான குழிதோண்டும் இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, சட்டிக் கலப்பை, சுழல் கலப்பை,கொத்துக் கலப்பை,தென்னை மரக்கிளைகளைத் துகளாக்கும் கருவி,
வாழை
மரத்தண்டு துகளாக்கும் கருவி, நிலக்கடலை செடிப்பிடுங்கும் கருவி, திருப்பும் வசதி கொண்ட
வார்ப்பு இறகுக் கலப்பை, விதைநடும் கருவி, சோளம் அறுவடை செய்யும் கருவி, கரும்பு மற்றும்
காய்கறி நாற்று நடும் கருவி மற்றும் பல்வகைக் கதிரடிக்கும் இயந்திரம் ஆகியவை உள்ளன.
ஒரு மணி நேரத்திற்கு உழுவை இயந்திரத்துடன் இயங்கக்கூடிய அனைத்துக் வேளாண் கருவிகளுக்கும் ரூ.400/-, மண் தள்ளும் இயந்திரம் ரூ.970/-, சக்கர வகை மண் அள்ளும் இயந்திரம் / ஜேசிபி இயந்திரம் ரூ.760/-, நெல் அறுவடை இயந்திரம் (டிராக் வகை) – ரூ.1630/-,
நெல் அறுவடை இயந்திரம்
(சக்கர வகை) – ரூ.1010/- மற்றும் வாகனத்தடன் இயங்க க்கூடிய தேங்காய் பறிக்கும் இயந்திரம்
ரூ.650/- என்று தமிழக அரசால் 23.10.2021 முதல் திருத்தப்பட்ட குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு
அளிக்கப்படுகிறது.
தொடர்பு
கொள்ள வேண்டிய அலுவலகம் மற்றும் கைபேசி எண்கள் வருமாறு
தூத்துக்குடி கோட்ட அலுவலக செயற்பொறியாளர் (வே.பொ.)
94431 72665
தூத்துக்குடி உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர் (வே.பொ.)
96557 08447
கோவில்பட்டி உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர் (வே.பொ.)
94432 76371
திருச்செந்தூர் உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர் (வே.பொ.) 94436 88032
இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும்
படிக்க....
PM KISAN பிரதமர் விவசாய நிதியுதவி திட்டத்தில் மோசடிகளை தவிர்க்க அதிரடி நடவடிக்கை!!
விவசாயிகளே!! உர விலையை உயர்த்தத் திட்டம்! விவசாயிகளுக்கு எச்சரிக்கை!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...