விவசாயிகள் வங்கிக் கணக்கில் பருவ மழை நிவாரணமாக ரூ.20,000 வரவு வைக்கப்படும்!!
விவசாயிகளுக்கான மழை நிவாரணம் அவர்களது வங்கிக்கணக்கில் இன்று முதல் செலுத்தப்பட உள்ளது. சென்ற ஆண்டு பெய்த கனமழையால் புதுவையில், சாகுபடி செய்யபட்டு இருந்த பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசமாயின. இதனை தொடர்ந்து புதுவை விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
விவசாயிகளுக்கு மழை
நிவாரணம்
விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையின் போது தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களுக்கான நிவாரணத் தொகை பயிர் சேதமடைந்த அனைவருக்கும் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் மாநில நிதியிலிருந்து வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை ரூ.7 கோடியே 10 லட்சத்து 57 ஆயிரத்து 600 வழங்கிட அரசாணை இப்பொழுது வெளியிடப்பட்டு உள்ளது.
புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த சிறு, குறு மற்றும் பெரு விவசாயிகளான 5 ஆயிரத்து 680 பொதுப் பிரிவினருக்கான 2 ஆயிரத்து 830 ஹெக்டேருக்கு ரூ.5 கோடியே 66 லட்சத்து 12 ஆயிரத்து 200 ரூபாய் வழங்கப்படுகிறது.
இதேபோல், 374 அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கு 154.95 ஹெக்டேருக்கு ரூ.30 லட்சத்து
99 ஆயிரம் என இரண்டையும் சேர்த்து மொத்தம் ரூ.5 கோடியே 97 லட்சத்து 11 ஆயிரத்து 200 க்கான காசோலையை இந்தியன்
வங்கி அதிகாரிகளிடம் சட்டசபை வளாகத்தில் வைத்து முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் வழங்கினார்.
அப்போது அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் அவர்கள், கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார் அவர்கள் , துணை இயக்குனர்கள் சிவசங்கர முருகன் அவர்கள் , சிவசுப்ரமணியன் அவர்கள் , வேளாண் அலுவலர் தேன்மொழி ஆகியோர் உடனிருந்தனர். இந்த நிவாரணத் தொகையானது விவசாயிகளின் வங்கிக்கணக்கில் மார்ச் 8-ம் தேதியான செவ்வாய்க்கிழமை இன்று முதல் செலுத்தப்படுகிறது.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும்
படிக்க....
PM KISAN பிரதமர் விவசாய நிதியுதவி திட்டத்தில் மோசடிகளை தவிர்க்க அதிரடி நடவடிக்கை!!
விவசாயிகளே!! உர விலையை உயர்த்தத் திட்டம்! விவசாயிகளுக்கு எச்சரிக்கை!!
நஞ்சையில் உளுந்து விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...