Random Posts

Header Ads

விவசாயிகளே!! உர விலையை உயர்த்தத் திட்டம்! விவசாயிகளுக்கு எச்சரிக்கை!!



விவசாயிகளே!! உர விலையை உயர்த்தத் திட்டம்! விவசாயிகளுக்கு எச்சரிக்கை!!


ரஷ்யா உக்ரைன் மீது நடத்தியுள்ள போரின் காரணமாக, இந்தியாவில் உரங்கள் விலை கடுமையாக உயர்த்தப்பட உள்ளதாகக் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. 


உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்த போரின் காரணமாக, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஏற்கனவே பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உள்ளன. 



உக்ரைனில் ஏற்பட்டுள்ள மிக மோசமான சேதத்தை தொடர்ந்து அந்த நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பல ஆண்டுகள் வரை ஆகலாம் என்பதால், ஏற்றுமதி வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளன.


பொதுவாக இந்தியா விவசாயத்திற்கு தேவையான உரங்களின் மூலப்பொருள் பொட்டாஷை பெலாராஸ் மற்றும் ரஷ்யாவில் இருந்துதான் அதிகளவில் இறக்குமதி செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தது. ஆனால் தற்போது அங்கு மோசமாக நிலைமை மாறிவிட்டது.


மேலும், உக்ரைன், ரஷ்யா, பெலாரஷ் ஆகிய நாடுகள் இந்தியாவின் பொட்டாஷ் இறக்குமதியில் 12% சதவீதமாக செய்துள்ளன. 



இதற்கு முன்பாக ரஷ்யா துறைமுகங்கள் வாயிலாக பெலாரஸிலிருந்து பொட்டாஷை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய முடிந்தது. தற்போது இந்த நிலையில் ரஷ்யா மீது ஏற்பட்டுள்ள பொருளாதார தடை ஏற்பட்டுள்ளதால் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.


மெட்ரிக் டன்னுக்கு 500 முதல் 600 டாலர்


அதே நேரத்தில் பொட்டாஷ்யத்தை அதிகளவில் உற்பத்தி செய்யும் கனடா, அதனை வழங்க மறுத்துவிட்டதாகக் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, தற்போது நம்நாட்டில் பொட்டாஷ் இறக்குமதியில் தட்டுப்பாடு நிலவுகிறது. 




மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS 


இதனால் இறக்குமதி செலவு கூடுதலாக மெட்ரிக் டன்னுக்கு 500 முதல் 600 டாலர்களாக உயரும் என நம்பப்படுகிறது. அப்படி உரத்தின் விலை அதிகரித்தால், அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மானியத்தை வழங்கிய வேண்டிய நிலை ஏற்படும்.


இதனால், பட்ஜெட்டில் உரத்துக்காக ஒதுக்கப்பட்ட மானிய அளவைவிட அதிகமாக ஒதுக்க வேண்டிய நிபந்தனைக்கு அரசு தள்ளப்படும்.



விவசாயிகள் இந்தச் சூழ்நிலையில் தங்களுக்குத் தேவையான உரத்தை வாங்கி வைத்துக்கொள்வதன் மூலம் தங்களின் நிதிச் சுமையை  குறைத்துக் கொள்ள முடியும்.


மேலும் படிக்க....


நஞ்சையில் உளுந்து விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு!!


அதிக தழை சத்துக்கொண்ட பசுந்தாள் உர உற்பத்தி தொழில்நுட்ப முறைகள்!!


அதிக தழை சத்துக்கொண்ட பசுந்தாள் உர உற்பத்தி தொழில்நுட்ப முறைகள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Timeto Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

0 Comments