Random Posts

Header Ads

அதிக தழை சத்துக்கொண்ட பசுந்தாள் உர உற்பத்தி தொழில்நுட்ப முறைகள்!!

 


அதிக தழை சத்துக்கொண்ட பசுந்தாள் உர உற்பத்தி தொழில்நுட்ப முறைகள்!!

 

நெல் பயிரிடும் முன் பசுந்தாள் விதைகளை பயிரிட்டு பூப்பதற்கு முன் மடக்கி உழுதால் உரமாகி வளம் தரும். இதனை விதையாகவும் உற்பத்தி செய்து ஓராண்டு வரை சேமித்து வைக்க முடியும். 


விதை உற்பத்திக்கு ஒரு எக்டேருக்கு குறைந்தது 20 கிலோ விதை தேவைப்படும். விதையுடன் 5 பாக்கெட் ரைசோபியம் நுண்ணுயிர் கலவை, ஒன்றரை லிட்டர் ஆறிய கஞ்சி அல்லது மைதா கஞ்சியுடன் சேர்த்து அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி பின் விதைப்பு செய்ய வேண்டும்.



பசுந்தாள் உற்பத்தி


விதை உற்பத்திக்கு பயிர் இடைவெளி அதிகம் தேவை. 45க்கு 20 செ.மீ. இடைவெளி விட வேண்டும். கடைசி உழவின் போது ஒரு எக்டேருக்கு 12.5 டன் தொழுஉரம் இடுவதால் பயிரின் வளர்ச்சியும் விதைப் பிடிப்பும் அதிகரிக்கும்.  20 கிலோ தழை 40 கிலோ மணி, 20 கிலோ சாம்பல் சத்துக்களை இட வேண்டும்.

 

30 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். பூக்கும் தருணம் மற்றும் விதையின் முதிர்ச்சி பருவத்தில் நீர் மிக மிக அவசியம். ஒரு எக்டேருக்கு 2.5 லிட்டர் பென்டி மெத்தலின் பாசலின் களைக்கொல்லி தெளிக்க வேண்டும். 


விதைத்த 10 வது நாள் ஒரு களை எடுக்க வேண்டும். பூக்கும் பருவத்திற்கு முன், பூக்கும் பருவம், காய்பிடிப்பின் போது மற்றும் அறுவடைக்கு முன் விதைப் பயிரிலிருந்து வேறுபட்டிருக்கும் கலவன் செடிகளை நீக்க வேண்டும்.



விதைத்த 40 மற்றும் 60 வது நாட்களில் ஒரு சதவீத சல்பேட் ஆப் பொட்டாஷ் கரைசலை காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். பூக்கும் தருணத்தில், காய் புழுக்களின் சேதாரம் அதிக பொக்கு விதைகளை உருவாக்கி மகசூலை வீணாக்கும். 


இவற்றை கட்டுப்படுத்த 10 லிட்டர் தண்ணீரில் 20 மில்லி வேப்ப எண்ணெய் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும். விதைப் பயிரை 150 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும்.


காய்கள் முதிர்ந்தபின் காயுடன் கூடிய பாதி செடியை அறுவடை செய்து நிலத்தில் காய வைக்க வேண்டும். மூங்கில் குச்சியால் காய்ந்த செடிகளை அடித்து விதைகளைத் தூற்றி சுத்தம் செய்து 8% சதவீத ஈரப்பதத்திற்கு உலர்த்த வேண்டும். நிறம் மாறிய விதைகளை நீக்கிய பிறகு விதைக்காக இதை பயன்படுத்தலாம்.


எக்டேருக்கு 400 கிலோ விதை கிடைக்கும். பசுந்தாள் உர விதைகள் இந்திய விதைச்சான்று தரக்கட்டுப்பாட்டின் நெறிமுறை படி 98%  சதவீத துாய்மை, மற்றும் 80% சதவீத முளைப்புத்திறன் கொண்டிருக்க வேண்டியது அவசியம். 


பிற பயிர்களை போன்று பசுந்தாள் உரப்பயிர் விதைகளின் சேமிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சரியான முறையில் சாக்குப்பைகளில் பாதுகாத்தால் ஓரிரு ஆண்டுகள் சேமிக்கலாம்.



தகவல் வெளியீடு


சுஜாதா, பேராசிரியர்

நிலவரசி, ஆராய்ச்சியாளர் விதை அறிவியல் மற்றும் நுட்பவியல்துறை,

வேளாண்மைக் கல்லுாரி, மதுரை, 94437 90200.


மேலும் படிக்க....


வரும் மாதங்களில் மிளகாய் வற்றல் விலை அதிகரிக்க வாய்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி!!


உங்களிடம் 15,000 ரூபாய் இருந்தால் குறைந்த முதலீட்டில் விவசாயத்தில் 1 லட்சம் வருமானம்!


தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த விவசாயிகள் இதை பின்பற்றினாலே போதுமானது!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments