வரும் மாதங்களில் மிளகாய் வற்றல் விலை அதிகரிக்க வாய்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி!!



வரும் மாதங்களில் மிளகாய் வற்றல் விலை அதிகரிக்க வாய்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி!!


இந்தியாவில், வாசனை மற்றும் நறுமணப் பயிர் வகைகளின் மொத்தப் பரப்பளவில் மிளகாய் வற்றல் கிட்டத்தட்ட 26% சதவீதம் பங்களிக்கின்றது. தேசிய தோட்டக்கலை வாரியம் 2017-18ம் ஆண்டின் முதல் முன்கூட்டிய மதிப்பீட்டின் படி, மிளகாய் வற்றல் 8.44 இலட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 21.06 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுவதாக அறியப்படுகிறது. 


ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடகா, ஒடிசா, குஜராத் மற்றும் தமிழ்நாடு போன்றவை மிளகாய் பயிரிடும் முக்கிய மாநிலங்களாக கருதப்படுகிறது. இந்த மாநிலங்கள் ஒன்றிணைந்து மொத்த மிளகாய் வற்றல் உற்பத்தியில் 89% சதவீதம் பங்களிக்கின்றன. மொத்த மிளகாய் வற்றல் உற்பத்தியில் ஆந்திரபிரதேசம் இந்த ஒரு மாநிலம் மட்டுமே 53% சதவீதம் பங்களிக்கின்றது.

 


இந்தியாவின் ஒட்டு மொத்த மிளகாய் வற்றல் உற்பத்தியில் 75% சதவீதம் நம் நாட்டிலேயே பயன்படுத்தப்படுகிறது. மிளகாயின் ஆக்ஸிஜனேற்றம் மற்றும் மருத்துவ குணங்கள் காரணமாக ஊட்டச்சத்து மருந்து தொழிற்சாலைகளில் மிளகாய்க்கு எப்போதும் நல்ல வரவேறப்பு உள்ளது.


சீனா, இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து அதிக ஏற்றுமதி தேவைகள் இருந்து வருகிறது. மேலும் ஆந்திரபிரதேசத்தில் வைரஸ் நோய் தாக்கத்தால் உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் மிளகாய் பயிர் உற்பத்தி செய்யும் நிலங்களில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டதாலும் மற்றும் முன் பேர சந்தையில் மிளகாய் வர்த்தகத்திற்கான தற்காலிக தடை ஆகியவற்றின் காரணமாக வரும் மாதங்களில் மிளகாய் வற்றல் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 

தமிழ்நாட்டில், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் மிளகாய் பயிரிடப் படுகின்றது. சம்பா, தேஜா மற்றும் முண்டு (புல்லட்) வகை இரகங்கள் தற்போது அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிளகாய் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது



உள்ளூர் வரத்து ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் விருதுநகர், இராமநாதபுரம், பரமக்குடி, கமுதி மற்றும் விளாத்திகுளம் ஆகிய 35 கிலோ மீட்டருக்கு உட்பட்ட பகுதியிலிருந்து சந்தைக்கு மிளகாய் வரத்து உள்ளது.

 

இந்த நிலையில், விவசாயிகள் அறுவடை முடிவுகளை முடிக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 19 ஆண்டுகளாக இராமநாதபுரம் சந்தையில் நிலவிய மிளகாய் விலையை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. 


ஆய்வுகளின் அறிவிப்பின் அடிப்படையில், அறுவடையின் போது தரமான (சம்பா) மிளகாய் வற்றலில் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ.110/- முதல் ரூ.120/- வரை இருக்க கூடும்  என கணிக்கப்பட்டுள்ளது. 



ஏப்ரல் முதல் ஜுலை வரை வரும் மிளகாய் வற்றலின் வரத்தைப் பொருத்து விலையில் மாற்றங்கள் இருந்த வண்ணம் இருக்கும். எனவே, விவசாயிகள் சந்தை ஆலோசனை அடிப்படையில், விற்பனைக்கான முடிவுகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

கூடுதல் விவரங்களுக்கு, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003, தொலைபேசி -0422-2431405 அணுகலாம்.


மேலும் படிக்க....


மருதாம்பு கரும்பில் கையாள வேண்டிய தொழில்நுட்பங்கள் மற்றும் சாகுபடி குறிப்புகள்!!


ரூ.2 லட்சம் வருமானம் குறைந்த முதலீட்டில் வியாபாரம் 85% அரசு மானியம்!


வாழையில் ஏற்படும் பாக்டீரியா வாடல் நோயும் விவசாயிகள் பின்பற்ற வேண்டிய மேலாண்மை முறைகளும்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments