ரூ.2 லட்சம் வருமானம் குறைந்த முதலீட்டில் வியாபாரம் 85% அரசு மானியம்!

 


ரூ.2 லட்சம் வருமானம் குறைந்த முதலீட்டில் வியாபாரம் 85% அரசு மானியம்!!

 

குறைந்த முதலீடு செய்து மாதம் 2 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் பார்க்க விரும்புபவர்கள் இந்தத் தொழிலைத் தொடங்கலாம். அரசு சார்பில் இந்த த் தொழில் தொடங்க 85% வரை மானியம் கிடைக்கும். குறைந்த முதலீட்டில் நல்ல வருமானம் கிடைக்கும் தொழிலை தொடங்க யாருக்குத் தான் விருப்பம் இருக்காது. 


அதே சமயம் இந்த தொழிலுக்கு அரசின் மானியம் கிடைத்தால் கூடுதல் மகிழ்ச்சி தான். அப்படியான அருமை தொழில்தான் இங்கே சொல்ல வருவது. விவசாயத் தொழில் தொடங்குவதில் உள்ள சிறப்பு என்னவெனில், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறுவதுதான். 



பொதுவாக மத்திய அரசாங்கம் விவசாய வணிகத்திற்கு, பல்வேறு கடன் உதவிகள் மற்றும் மானியங்களை வழங்குவதன் மூலம் இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு ஆதரவுக் கரம் கொடுக்கிறது.

 

அப்படிப்பட்ட ஒரு சிறப்பான தொழில் வாய்ப்பு தான் தேனீ வளர்ப்பு குறைந்த முதலீட்டில் இதை தொடங்கி மாதந்தோறும் லட்சங்களில் சம்பாதிக்கவும் முடியும் மானியமும் பெற முடியும்.

 

தேனீ வளர்ப்பு


தேனீ வளர்ப்பு என்பது குறைந்த செலவில் உள்ள சிறந்த வணிக யோசனை. தேன் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை விற்பதன் மூலம் நம்மால் நிறைந்த வருமானமும் ஈட்ட முடியும். 



இதற்கு உங்களிடம் ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூட்டம் இருக்க வேண்டியதில்லை. இந்த தொழிலை தொடங்குவதற்கு, நீங்கள் குறைந்தது 50 தேனீக்கள் கூட்டத்திற்கு குறைவாக வைத்திருந்தாலே இது சாத்தியம்.

 

தேனீ வளர்ப்புக்கு அரசாங்க மானியம்


தேசிய தேனீ வாரியம் (NBB) NABARD உடன் இணைந்து இந்தியாவில் தேனீ வளர்ப்பவர் வணிகத்திற்கு நிதியளிப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளது. இத்துறையில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு திட்டத்தினை வழங்கவும் அவர்கள் உதவி செய்கிறார்கள். 


விருப்பம் உள்ளவர்கள் அருகில் உள்ள தேசிய தேனீ வாரிய அலுவலகத்திற்கு சென்று விவரங்களை அறியலாம் அல்லது இணையதளத்தில் இருந்து தகவல்களைப் பெற்று பயனடையலாம். தேனீ வளர்ப்புக்கு அரசாங்கம் 80% முதல் 85% வரை மானியம் அளிக்கிறது. இந்த சலுகையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 


எந்த ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு முன்பும், அந்த தொழில் குறித்த விபரங்களை ஆழமாக புரிந்து கொண்டால் மட்டுமே அதில் வெற்றி பெற முடியும். 


தேனீ வளர்ப்புத் தொழிலைத் தொடங்குவதற்கு அருகில் உள்ள (விவசாயிகள் சேவை மையம்) KVK அல்லது வேளாண்மைப் பல்கலைக் கழகங்களை தொடர்புகொண்டு, தேனீ வளர்ப்புப் பயிற்சியை வழங்குகிறார்களா என்று விசாரித்து பயிற்சி பெற்று பயனடையலாம்.

 

சந்தைப்படுத்துதல்


தேனீ வளர்ப்பில் தேனுடன் சேர்த்து தேன் மெழுகு, ராயல் ஜெல்லி, புரோபோலிஸ் அல்லது தேனீ பசை மற்றும் தேனீ மகரந்தம் போன்ற பல பொருட்கள் உள்ளன. இந்த தயாரிப்புகள் அனைத்தும் மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 




அதே நேரத்தில் சந்தையில் மிகவும் விலை உயர்ந்தவை. அதாவது, சந்தையில் இவற்றிற்கான தேவை அதிகம். தங்கள் தயாரிப்புகளின் சந்தை மதிப்பைப் பற்றி அறிந்து கொண்டால், எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்பதைக் கணக்கிட்டுக்கொள்ளலாம்.

 

தேனின் விலை 150-200 ரூபாய்


தற்போதைய சந்தையில் பச்சைத் தேனின் விலை 150-200 ரூபாய், சராசரியாக 1000 கிலோ தேன் உற்பத்தி செய்ய முடிந்தால், நீங்கள் எளிதாக 2 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.


மேலும் படிக்க....


திறன் வேளாண் தொழில்நுட்பங்கள் வாயிலாக வளங்குன்றா வேளாண்மையின் பங்கு!!


விவசாயிகளுக்கு PVC பைப் மற்றும் புதிய மின் மோட்டாா் வாங்க ரூ.15,000 மானியம் வேளாண்துறை அறிவிப்பு!!


மருதாம்பு கரும்பில் கையாள வேண்டிய தொழில்நுட்பங்கள் மற்றும் சாகுபடி குறிப்புகள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments