84 ஆண்டுகளுக்கு பின் கோடையில் புயல் சின்னம் உருவாகியுள்ளது!! வானிலை மையம் தகவல்!!
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இருப்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில், 6ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேளையில் அதி கன மழைக்கான, 'ரெட் அலெர்ட்' வாபஸ் பெறப்பட்டு உள்ளது. 84 ஆண்டுகளுக்கு பிறகு கோடை காலத்தில் புயல் சின்னம் உருவாகி உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கொடுத்த பேட்டியில் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, தற்பொழுது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
மேலும் இது வலுப்பெற்று உள்ளதாகவும் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கடற்கரையை நோக்கி நகரும் எனவும் அவர் கூறினார். இதன் காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கன மழையும், நாளை மிக கன மழையும் பெய்ய கூடும்.
சென்னையில் இன்று வானம் மேக மூட்டமாக காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலுார், பெரம்பலுார், திருச்சி மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் நாளை கனமழை பெய்யும். வருகின்ற 6ம் தேதி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிக கன மழைபெய்யும் மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன மழையும் பெய்ய கூடும்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு குறைவு எனவும், ஆழ்ந்த மண்டலமாக மாறி வலுவிழக்கும் எனவும், தமிழக பகுதிகளில் அதி கன மழைக்கான ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
84 ஆண்டுகளுக்கு பின்
பொதுவாக மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் நாடு முழுதும் கோடை காலம் என்பதால், இந்த கால கட்டத்தில் புயல் சின்னங்கள், காற்றழுத்த தாழ்வு பகுதிகள் ஏற்படுவது மிக அரிதாகவே ஏற்படும்.
கடந்த 1938ம் ஆண்டு இலங்கையை ஒட்டிய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 84 ஆண்டுகளுக்கு பிறகு தர்பொழுதும் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதே போலவே, 1994 மார்ச்சில் அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, தாழ்வு மண்டலமாக வலுப்பெறாமல் போனது.
நடப்பு ஆண்டு கோடை காலத்தை பொறுத்தவரை முந்தைய ஆண்டுகளை விடவும் வெப்பம் குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேபோல, தென் மாநிலங்களிலும் இந்த ஆண்டு கோடை வெயில் இயல்பை விட குறைய வாய்ப்புள்ளது என அவர் கூறினார்.
மீனவர்கள் கரை திரும்ப அறிவுரை
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, தமிழக வடக்கு கடலோரம், தெற்கு ஆந்திர கடலோரத்தில் இன்றும் மத்திய மேற்கு, தென் மேற்கு வங்கக்கடல், வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நாளையும், மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசலாம்.
வட மாவட்ட பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில், வரும் 6ம் தேதி அன்று மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, இந்த பகுதிகளுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் உள்ள மீனவர்களும் உடனே கரை திரும்ப வேண்டும் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க....
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் தகவல்!!
தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலேர்ட்- குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக கொட்டப் போகிறது கனமழை!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...