வாழையில் ஏற்படும் பாக்டீரியா வாடல் நோயும் விவசாயிகள் பின்பற்ற வேண்டிய மேலாண்மை முறைகளும்!!



வாழையில் ஏற்படும் பாக்டீரியா வாடல் நோயும் விவசாயிகள் பின்பற்ற வேண்டிய மேலாண்மை முறைகளும்!!


வாழையில் இந்நோய் மோக்கோ வாடல் நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் இது பரவலாகக் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக திருநெல்வேலி, வேலூர் போன்ற மாவட்டங்களில் இது அதிகளவில் வாழையை தாக்குகிறதாக கூறப்படுகிறது

 

நோய்க்காரணி


இந்நோயானது ரால்ஸ்டோனியா சோலனேசியேரம் என்ற பாக்டீரியாவால் தோற்றுவிக்கப்படுகிறது. இவை குட்டையான, உருளை வடிவில், ஒற்றைத் திசுவைக் கொண்டும், நிற மற்றும் ஒரு நுனிப்பாகத்தில் ஒற்றை நகரிழையைக் கொண்டும் இருக்கும். இவை வாழ காற்று தேவை.

 


நோயின் அறிகுறிகள்


இந்நோயின் அறிகுறிகள் பெரும்பாலும் ஃபியூசேரியம் வாடல் நோய் அறிகுறிகளைப் போன்றே தென்படும். முதலில் மரத்தின் வெளிப் புறமாக உள்ள இலைகளின் காம்பை அடுத்துள்ள இலைப்பகுதி மஞ்சள் நிறமாக மாறி இருக்கும்.


இதைத்தொடர்ந்து இலைக் காம்பிலிருந்து, இலைகள் முறிந்து தொங்கும். குறிப்பிட்ட ஒரு வாரக் காலத்திற்குள் அநேகமாக எல்லா இலைகளிலும் இந்நோயின் அறிகுறிகள் தோன்றி, அவை முறிந்துத் தொங்கி விடும். சில நேரங்களில் குருத்து இலையும் கூட முறிந்துத் தொங்கி விடும். 



இளம் பக்கக் கன்றுகளின் குருத்து இழைகள் மஞ்சள் நிறமாக மாறிக் கருத்து போய்விடும்பக்கக் கன்றுகளின் மேற்ப்பாகத்தை வெட்டி விடும்போது, அவற்றிலிருந்து புதிதாகத் வளரும் குருத்து இலைகள் சிறியதாகவும் கருமை நிறத்திலும், நெளிந்தும், சுருக்கங்களுடனும் காணப்படும். 

 

நோய்த் தாக்கப்பட்ட வயலின் தோற்றம்

 

இலைக் காம்பிலிருந்து இலைகள்முறிந்து தொங்குதல், தாக்கப்பட்ட மரத்தின் தண்டுப்பாகத்தை வெட்டிப்பார்த்தல், சாற்றுக் குழாய்த் தொகுதிகள் மஞ்சள் அல்லது கரும்பழுப்பு நிறமாக மாறியிருக்கும். சாற்றுக் குழாயில் இருந்து சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் பாக்டீரியா கசிவு, துளித்துளியாக வெளியே வரும். 


சில நேரங்களில் பூ மொட்டுகளும், குலையின் தண்டுப்பாகமும் கருமை நிறமடைந்து சுருங்கிக் காணப்படும். குலையின் தண்டுப் பகுதியிலும், காய்கள் குலையின் தண்டுப் பகுதியில் சேரும் பகுதியிலும், வெண்மை நிற பாக்டீரியாகசிவு வெளியே வரும். 


சாற்றுக்குழாய்ப் பகுதிகள் பழுப்பு நிறமாக மாறல், தண்டுப் பகுதியில் பாக்டீரியா கசிவு தென்படல், நோய்ப் பரவும் விதமும் பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்:


இந்நோய் பெரும்பாலும் மண் மூலம் பரவக்கூடியது. நிலத்தில் தென்படும் நோய் தாக்கியச் செடிகளின் பாகங்கள், கிழங்குகள், வேர்கள் போன்றவற்றில் பாக்டீரியா நீண்ட காலம் உயிர் வாழும். மேலும் நோய்த் தாக்கியக் கன்றுகள் மூலமாக அதிக அளவில் நோய் பரவுகிறது. 



பக்கக் கன்றுகளை வெட்டி விடும் போது கத்தியில் ஒட்டிக் கொண்டிருக்கும் சாற்றில் கலந்திருக்கும் பாக்டீரியா மூலமும் நோய் பரவக்கூடிய தன்மை உடையது. நிலத்தின் மேலுள்ள பாகங்கள் குறிப்பாக தண்டுப்பகுதியில் ஏற்படும் சிறு காயங்கள் மற்றும் சில பூச்சிகள், நூற்புழுக்கள் போன்றவை ஏற்படுத்தும் காயங்கள் வழியாக நோய்க்காரணி, ஊன் வழங்கியின் உட்சென்று நோய்க்கான காரணத்தை தோற்றுவிக்கிறது.

 

வெப்பநிலை 370 செ.கி.-ம், மண்ணில் தேவைக்கு அதிகமான ஈரப்பதம் இருக்கும் போது நோய் அதிகமாகத் தோன்றி பரவக்கூடியது. தாக்கப்பட்ட மரங்களின் சாற்றுக்குழாய்த் தொகுதிகளில் பாக்டீரியா அதிகளவில் தேக்கமடைந்து, திசுக்களைச் சிதைத்து சேதம் உண்டாக்குவதால், குழாய்கள் அடைக்கப்படுகிறது.


நிலத்திலிருந்து எடுக்கப்படும் நீரும் ஊட்டச்சத்து பொருட்களும் மேற்ப்பகுதிகளுக்கு செல்வது தடைபடுவதால் வாடல் அறிகுறித் தோன்றுகிறது. பாக்டீரியா உற்பத்தி செய்யும் எத்திலீன் என்னும் நச்சுப் பொருளால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுகிறது. 

 

நோய்க் கட்டுப்பாடு


உழவியல் முறைகள்: நோய் அறிகுறி தென்பட்ட மரங்களை, கிழங்கோடும், வேர்களோடும், பக்கக் கன்றுகளோடும் தோண்டி எடுத்து எரித்து விட வேண்டும். 


வயலுக்கு தேவையான நல்ல வடிகால் வசதி அமைப்பதோடு, நோய்த் தாக்கிய மரங்களிலிருந்து பாசன நீர் மற்ற மரங்களுக்குப் பாய்வதை தடுக்க வேண்டும். நோய்த் தாக்கிய நிலத்திலிருந்து எடுத்தக் கன்றுகளை நடவுக்குப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.



வறட்சியான நிலையில் இந்நோயக் காரணி எளிதில் அழிக்கப்பட்டு விடுகின்றன. எனவே பயிர் இல்லாத கோடைக் காலங்களில் நிலத்தை நன்கு உழுது முற்றிலும் காய விட வேண்டும்.


வாழைத்தாரில் கடைசியாகக் காய்கள் வந்தப் பின்னர் பூவை பரித்து, எடுத்து விடுவதால் பூக்களிலுள்ள தேனை நாடிவரும் பூச்சிகளால் பாக்டீரியா பரப்பப்படுவதைத் தவிர்க்க முடியும்


இலைகளை அறுத்தல், பக்கக்கன்றுகளை வெட்டுதல், தார்களை வெட்டுதல் போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தும் கத்திகளை ஃபீனால், லைசால் போன்ற தொற்று நீக்கியை 1:3 என்ற விகிதத்தில் தண்ணீருடன் கலந்து, அந்தக் கலவையில் அடிக்கடி நனைத்துப் உபயோகிக்க வேண்டும்.

 

மருந்து சிகிச்சை


காப்பர் ஆக்சிகுளோரைடை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 கிராம் வீதம் அல்லது ஸ்ட்ரேப்டோசைக்லின் 0.5 கிராம் வீதம் கலந்து தெளிக்கலாம்.

 

உயிரியல் முறைகள்


உயிரி உரங்களான சூடோமோனஸ் போன்றவற்றையும் உபயோகிக்கலாம்.

 


நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்கள்


ராபஸ்டா, கிராண்ட் 9, ராட்சச கேவன்டிஸ், லகாடன், வாலரி போன்ற இரகங்களை இந்நோய் அதிகம் தாக்குவதில்லை.

 

தகவல் வெளியீடு


பட்டப்படிப்பு மாணவர் முனைவர் கு.விக்னேஷ், தாவர நோயியல் துறை, கைபேசி எண்: 82488 33079, மின்னஞ்சல்: lakshmikumar5472@gmail.com


உதவிப் பேராசிரியர் முனைவர் த.சுதின் ராஜ், தாவர நோயியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் 608 002, கைபேசி எண்: 94420 29913, மின்னஞ்சல்: suthinagri@gmail.com


மேலும் படிக்க....


84 ஆண்டுகளுக்கு பின் கோடையில் புயல் சின்னம் உருவாகியுள்ளது!! வானிலை மையம் தகவல்!!


மருதாம்பு கரும்பில் கையாள வேண்டிய தொழில்நுட்பங்கள் மற்றும் சாகுபடி குறிப்புகள்!!


திறன் வேளாண் தொழில்நுட்பங்கள் வாயிலாக வளங்குன்றா வேளாண்மையின் பங்கு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments