திறன் வேளாண் தொழில்நுட்பங்கள் வாயிலாக வளங்குன்றா வேளாண்மையின் பங்கு!!
கடந்த பல ஆண்டுகளாக நமது வேளாண் மற்றும் சார்ந்த துறைகள் பல்வேறு மிகப்பெரிய அளவிலான சவால்களை உலகமெங்கும் சந்தித்து வந்தாலும், அவற்றில் வாய்ப்புகளும் பெருகி வருகிறது என்பது மறுக்க முடியாத ஒன்று.
குறைந்து வரும் சாகுபடி நிலப்பரப்பளவு வேளாண் இயற்கை சார்ந்த வளங்கள், பெருகிவரும் நிதி தேவைகள் மற்றும் முதலீடுகள், உயர்ந்து வேளாண் சந்தை விலை, ஏற்ற இறக்கங்கள் போன்றவற்றை சந்தித்தும், சமாளித்தும் வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை பெருக்குவதில் திறன் வேளாண் தொழில் நுட்பங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
கிராமங்களில் துவங்கி இன்று உலக சந்தைகளை இணைக்கும் புதிய வேளாண் திறன் தொழில்நுட்பங்கள்
விவசாயிகளின் உற்பத்தி பெருக்கம், மதிப்பு கூட்டுதல், சந்தைப்படுத்துதல் போன்றவற்றில்
முக்கியப் பங்கு வகிக்கிறது.
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் தமிழகத்தில் உள்ள உழவன் செயலி (Uzhavan APP) தமிழகத்தின் விவசாயிகளுக்கு தகவல்கள் பெறவும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்கள், வளர்ச்சி துறைகள் வழங்கும் வேளாண் தேவைகள் நிதி உதவிகள், மானியங்கள், பண்ணை கருவிகள் பெற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் (Artificial intelligence technlogies) பயன்படுத்தி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
மறுபுறம் வானிலை தகவல்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால்
சிறு மற்றும் குறு விவசாயிகள் முதல் கிராமப்புற தொழில் முனைவோர் வரை தங்களது பணிகளை
திட்டமிட்டு செயல்படுத்தி இழப்புகளை குறைக்கவும், லாபங்களைப் பெருக்கவும் உதவி வருகிறது.
வருகின்ற 2030ம் ஆண்டில் உலகில் அதிகளவு மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளதாக நமது நாடு கணிக்கப்பட்டுள்ள சூழலில் மாற்று சிந்தனைகள், செயலாக்கம் வாயிலாக நாம் உற்பத்தி பெருக்கத்தை நமது நாட்டில் பெருகி வரும் மக்கள் வளத்தை இணைத்து மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
இத்தகைய புதிய வேளாண்
தொழில்நுட்பங்கள் தற்போதைய வேளாண் சூழல்களை அடிப்படையாகக் கொண்டும், நமது சிறு மற்றும்
குறு விவசாயிகளுக்கு பெரிதும் உதவுவதாக இருக்க வேண்டும்.
இதன்
வாயிலாக நமது வேளாண் உற்பத்தியில் பற்றாக்குறை சூழல் நிலவும் பயிர் வகைப் பயிர்கள்
(Pulse Crops), எண்ணெய் வித்து பயிர்கள் (Oil seed crops) போன்றவற்றில் உற்பத்தி பெருக்கத்தை
ஏற்படச் செய்ய முடியும்.
மேலும் துல்லிய விதை, நீர் பாசனம் மற்றும் உரமிடும் தொழில் நுட்பங்கள் (Seed, irrigation and fertlizer application Precision technologies) உருவாக்கம் மற்றும் கிராமப் புறங்களில் நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக உற்பத்தி பெருக்கம், வேளாண் தொழிலாளர் பற்றாக்குறைச் சூழல் பிரச்சனைகளுக்கும் உரிய தீர்வுகளைக் காணலாம்.
நமது நாட்டின் மற்றும் மாநிலத்தின்
நிகழ் மற்றும் எதிர்கால வளர்ச்சிகள், வாய்ப்புகள் மற்றும் சவால்கள் நாம் உருவாக்கப்போகும்
அல்லது பயன்படுத்தப் போகும் புதிய திறன் வேளாண் தொழில்நுட்பங்களை சார்ந்தே உள்ளது.
தற்போதைய
விஞ்ஞான சாகுபடிக்கு மாற்றாக ஒருங்கிணைந்த முறையில் நமது பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பங்களையும்
இணைத்து புதிய வேளாண் திறன் தொழில்நுட்பங்களைக் கொண்டு துல்லிய சாகுபடி பணிகளை மேற்கொள்ளும்
போது நம்மால் விரைவில் ஒரு வளங்குன்றா வேளாண்மையை நோக்கி நமது விவசாயிகளை அழைத்துச்
செல்ல முடியும் என்பதில் சந்தேகமில்லை.
கட்டுரை வெளியீடு
முனைவர் தி.ராஜ் பிரவின், இணைப் பேராசிரியர் (வேளாண் விரிவாக்கத்துறை) மற்றும் ஒருங்கிணைப்பாளர்,
விவசாயிகளுக்கான வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
மேலும்
படிக்க....
வேளாண் வானிலை மையத்தின் வரும் ஐந்து நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு!!
மாசி பட்டதிற்கு ஏற்ற எள் இரகங்களை தேர்வு செய்து அதிக மகசூல் பெற வேளாண்துறை அழைப்பு!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...