வேளாண் வானிலை மையத்தின் வரும் ஐந்து நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு!!



வேளாண் வானிலை மையத்தின் வரும் ஐந்து நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு!!


சேலம் மாவட்டத்தில், மாவட்ட வேளாண் வானிலை மையம் (DAMU), வானிலை அடிப்படையிலான வேளாண் ஆலோசனைகளை, சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையம், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். ஜெகதாம்பாள் மற்றும் செ. பிரபாகரன் – வானிலை பதிவாளர் பின்வருமாறு கூறினர்.

 

வரும் ஐந்து நாட்களுக்கு (02.03.2022 முதல் 06.02.2022 வரை) பின் வரும் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

 

சேலம் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களில் 5.3.22, 6.3.22 தேதிகளில் இலேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35oC ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20oC ஆகவும் இருக்கும். காற்றின் வேகமானது மணிக்கு 6 முதல் 8 கி.மீ ஆக வீசக்கடும்.

 


வரும் வாரங்களில் இலேசான முதல் மிதமான மழைக்கான வாய்ப்பு உள்ளதால் பூச்சி கொல்லி அல்லது களைக்கொல்லி மருந்துடன் ஒட்டும் திரவம் கலந்து தெளிக்கவும். மழை பொழிவின் போது பயிர்களுக்கு உரம் இடுவது மற்றும் பூச்சி மருந்து தெளிப்பினை தவிர்க்க வேண்டும். 


உழவர்கள் அனைவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பரிந்துரைக்கப்பட்ட வேளாண் சார்ந்த செயலிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. (த.வே.ப.கஏ.ஏ.எஸ், மேக்தூட்&தாமினி).

 

காற்றின் வேகம் அதிகமா வீசக்கூடும். விவசாயிகள் அனைவரும் வாழை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு முட்டுக் கொடுத்து பயிர்களை சேதத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.



சின்ன வெங்காயத்தில் இலைப்பேனின் நடவடிக்கைகள் பெரும்பாலும் காணப்படுவதால் வயலை சுத்தமாகவும் சீரான இடைவெளியில் களையெடுப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.


பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளில் தாக்குதல் தென்பட்டால் அசிட்டாமெப்ரிட் 50 கிராம் / ஹெக்டர் அல்லது இமிடேகுளோரோபிட் 17 @ 125 மில்லிலிட்டர் / ஹெக்டர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.


தென்னையில் குரும்பை கொட்டுதலை தவிர்ப்பதற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒரு பாக்கெட் தென்னை டானிக் 200 மி.லி வேர் மூலம் கொடுக்க வேண்டும்.


நிலவக்கூடிய வானிலையின் காரணமாக வாழையில் குருத்து சுருட்டு அழுகல் நோயின் தாக்கம் ஏற்படக்கூடும். எனவே, இதனை கட்டுப்படுத்த மென்கோஜேப் 75% 1.5 – 2.0 கிலோ எக்டர் / அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

 


கால்நடைகளைப் பொறுத்தமட்டில், பருவகால மேலாண்மையாக ஆடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யவும். நாட்டுக் கோழிகளை ஆழ்கூள முறையில் கொட்டகையில் வளர்க்கும் போது ஆழ்கூளம் (கடலைப் பொட்டு, நெல் உமி) போன்றவை நனைந்து கெட்டியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 


ஆழ்கூளம் அதிக ஈரப்பதத்துடன் காணப்பட்டால் சுண்ணாம்புத் தூளை தூவி கிளறிவிட வேண்டும். இதனால் ஆழ்கூளத்தின் ஈரப்பதம் குறைவதுடன், சுண்ணாம்புத் தூள் கிருமி நாசினியாகவும் செயல்பட்டு கோழிகளில் நோய் பரவுவதை தடுக்கிறது. 


நாட்டுக் கோழிகளுக்கு புரதச்சத்து மிக்க அசோலாவை தீவனமாக அளிப்பதின் மூலம் விரைவான உடல் வளர்ச்சி அடைவதுடன் குஞ்சு பொரிக்கும் திறனை அதிகரிக்க முடியும்.

 


மேலும் விவரங்களுக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம் – 636 203. 0427 242 2550, 90955 13102, 70109 00282.


மேலும் படிக்க....


தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலேர்ட்- குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக கொட்டப் போகிறது கனமழை!!


தமிழகம் முழுவதும் பயிர் கடன் பெற இனி இந்த ஆவணம் கட்டாயம்! பயிர் கடன் பெறுவதில் வெளியான அதிரடி அறிவிப்பு!!


கூடுதல் வருமானத்திற்கு 35% அரசு உதவியுடன், மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்க சூப்பர்ஹிட் பிசினஸ்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments