தமிழகம் முழுவதும் பயிர் கடன் பெற இனி இந்த ஆவணம் கட்டாயம்! பயிர் கடன் பெறுவதில் வெளியான அதிரடி அறிவிப்பு!!
கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வரும் சென்னை தவிர்த்த, 22 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் 4,451 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுகிறது. அதற்கு 7% வட்டி செலுத்த வேண்டும்.
விவசாயிகள் கடன் வாங்கிய தொகையை ஒரு வருடத்திற்குள் வட்டி
மற்றும் அசல் செலுத்தினால் வட்டி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சியின் போது
கூட்டுறவு சங்கங்களில் 16 லட்சம் விவசாயிகள் பெற்ற 12,110 கோடி ரூபாய் பயிர்
கடனை 2021 பிப்ரவரி மாதம் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன்பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில்
பயிர் கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்திருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன.
இதனை தொடந்து பயிர் கடன் தள்ளுபடி குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு, அதில் முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இதனால் இனிமேல் முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதற்கு தற்போது எல்லா கூட்டுறவு வங்கிகளிலும் பயிர்கடன் வழங்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறை தொடர்பாக ஒரே மாதிரியான ஒழுங்குமுறை விதிகளை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது.
இது
தொடர்பாக கூட்டுறவு துறை அதிகாரிகள் கூறியதாவது, கட்டாயம் பயிர் கடன் வழங்க இதுவரையிலும்
ஒவ்வொரு சங்கமும் வெவ்வேறு விதிகளை பின்பற்றி பட்டா, சிட்டா ஆகிய ஆவணங்களை பெற்று வருகின்றனர்.
இதில் பயிர் சாகுபடி செய்வோருக்கு மட்டுமே கடனை வழங்க வேண்டும். ஆனால் சொந்தமாக நிலம் வைத்திருந்து சாகுபடி செய்யாமல் பயிர் கடன் வாங்கி, அத்தொகையில் அதிக வட்டிக்கு கடன் கொடுப்பது ஆகிய முறைகேடுகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன.
இதுபோன்ற செயல்களை தடுக்க வரும் ஏப்ரல் முதல் அனைத்து சங்கங்களும்
கட்டாயம் பின்பற்றும் வகையில், ஒரே மாதிரியான ஒழுங்குமுறை விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி இனிமேல் பயிர் கடன் பெறுவோர் பட்டா, சிட்டா மட்டும் இல்லாமல், சாகுபடி செய்ய உள்ள பயிரை குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்றும் வழங்க வேண்டும். இவையே பயிர் சாகுபடி செய்வதற்கான ஆதாரமாக இருக்கும்.
அடங்கல் சான்று கிடைக்காத பட்சத்தில், கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து, முந்தைய பயிர் சாகுபடி செய்ததற்கான அடங்கல் சான்று மற்றும் நடப்பாண்டில் சாகுபடி செய்ய உள்ள பயிர் விபரம் தொடர்பாக சுய உறுதிமொழி சான்று போன்றவற்றை பெற்று கடன் வழங்கலாம்.
இது போன்ற பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி கடன் வழங்குமாறு உத்தரவிடப்பட்டு இருக்கிறது
என்று அவர் கூறினார்.
மேலும்
படிக்க....
அடுத்த 24 மணி நேரத்தில் குறைத்த காற்றழுத்த தாழ்வு பகுதி 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!
விவசாயிகளுக்கு 75% - 90% மானிய விலையில் பண்ணைக் கருவிகள் பயன்பெற அழைப்பு!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...