விவசாயிகளுக்கு 75% - 90% மானிய விலையில் பண்ணைக் கருவிகள் பயன்பெற அழைப்பு!!
பண்ணைக்
கருவிகள் தொகுப்பு மானிய விலையில்
செங்கல்பட்டு மாவட்டத்தில், இம்மாவட்டத்தைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் பண்ணைக் கருவிகள் தொகுப்பு மானிய விலையில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டமானது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர். 14.08.2021 அன்று சட்டசபையில் ஆற்றிய உரையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் 1384 சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டும், பண்ணைப் பணிகளை காலதாமதமின்றி முடித்திடவும், பொருளாதாரத் தேவைகளுக்கு உதவிடும் பொருட்டும் இந்த திட்டம் செயல்ப்படுத்தப்படுகிறது.
பண்ணைக் கருவிகள்
கடப்பாரை, இரும்புச் சட்டி, மண்வெட்டி, களைக்கொத்து தலா ஒன்றும், கதிர் அரிவாள் 2 எண்கள்
கொண்ட ரூ.3,000/- மதிப்பிலான வேளாண் பண்ணைக் கருவிகளின் தொகுப்பு 2 எண்கள், சிறு மற்றும்
குறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
75% - 90% மானியம் யார்? யாருக்கு?
பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு 75 % மானிய விலையிலும், பட்டியலின வகுப்பு விவசாயிகளுக்கு 90 % மானிய விலையிலும் பயன்படுத்தி கொள்ளலாம்.
மேற்கண்ட பண்ணைக் கருவிகள் பெற விரும்பும் சிறு / குறு விவசாயிகள்
- நிலத்திற்கான பட்டா,
- குடும்ப அட்டை,
- ஆதார் அட்டை,
- பாஸ்போட் அளவலான புகைப்படம்.
ஆகிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் (அல்லது) வட்டாரத்தின் வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி பலன் பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முனைவர் எல்.சுரேஷ் தெரிவித்தார்.
முன்னுரிமை உண்டு
மேலும் இத்திட்டத்தில் மகளிர் குடும்பத் தலைவர்களுக்கும், விதவை பெண்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுத்து தொகுப்புகள் வழங்கப்படும் எனவும் முன் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும், ஒரு குடும்பத்தினருக்கு ஒரு வேளாண் பண்ணைக் கருவிகள் தொகுப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்தார்.
இந்த வாய்ப்பினை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிறு/குறு விவசாயிகள் பயன்படுத்தி
பலன் பெறுமாறு வேளாண்மை இணை இயக்குநர் முனைவர் எல்.சுரேஷ் தெரிவித்தார்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும்
படிக்க....
கன்று பிறந்தவுடன் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் நல்ல திடமான கன்றை உருவாக்குதல் எப்படி?
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...