வேளாண்
துறையில் மத்திய பட்ஜெட் 2022ன் ஆக்கப்பூர்வ தாக்கம் குறித்த இணையவழி கருத்தரங்கு!!
பிரதமர் மோடி உரை
வேளாண் துறையில் மத்திய பட்ஜெட் 2022ன் ஆக்கப்பூர்வ தாக்கம் குறித்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். வேளாண் துறையை உறுதிபடுத்துவதற்கு பட்ஜெட்டின் பங்களிப்பு குறித்த வழிமுறைகளை அவர் விவாதித்தார்.
நவீன வேளாண்மை செயலாக்கத்திற்கான உத்திகள் என்பது இந்த
இணையவழி கருத்தரங்கின் நோக்கமாக அமைந்தது. இணைப்பிலுள்ள மத்திய அமைச்சர்கள், மாநில
அரசுகளின் பிரதிநிதிகள், தொழில் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள், கல்வியாளர்கள் பல்வேறு
வேளாண் அறிவியல் நிறுவனங்களை சேர்ந்த விவசாயிகள் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.
பிரதமரின் விவசாயி கௌரவிப்பு நிதி திட்டம் தொடங்கி தற்போது 3 ஆண்டுகள் நிறைவடைவதை பிரதமர் அவர்கள் குறிப்பிட்டார். நாட்டின் சிறு விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் பேருதவியாக இருக்கிறது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் 11 கோடி விவசாயிகளுக்கு சுமார் ரூ. 1.75 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
விதைத்தல் முதல் சந்தை வரையிலான பலபுதிய நடைமுறைகள் பற்றி பேசிய பிரதமர், வேளாண் துறையில் பழைய நடைமுறைகளில் சீர்திருத்த அமைப்புகள் பற்றியும் பேசினார். ஆறு ஆண்டுகளில் வேளாண்துறை பட்ஜெட் பலமடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் விவசாயிகளுக்கான வேளாண் கடன்களும் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறினார்.
பெருந்தொற்று ஏற்பட்ட சிரமமான காலத்தில் சிறப்பு இயக்கத்தின் ஒருபகுதியாக 3 கோடி விவசாயிகளுக்கு
கிசான் கடன் அட்டைகள் (கேசிசி) வழங்கப்பட்டது மேலும் கேசிசியின் பயன்கள் கால்நடை
பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் நீடிக்கப்பட்டது
என்பதையும் அவர் குறிப்பிட்டார். சிறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறிய வகை
நீர்ப்பாசன திட்டமும் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த முயற்சிகள் காரணமாக விவசாய உற்பத்தியில் சாதனை படைத்துள்ளனர் என்றும் MSP கொள்முதலிலும் கூட சாதனைகள் படைக்கப்பட்டன என்றும் அவர் கூறினார். இயற்கை வேளாண்மை சலுகைகள் மூலமாக இயற்கை வேளாண்மை பொருட்களுக்கான சந்தை மதிப்பு ரூ.11,000 கோடியை எட்டியது என்றார், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ரூ.2,000 கோடியாக இருந்த ஏற்றுமதி ரூ.7,000 கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது என்றார்.
வேளாண் துறையை துரிதப்படுத்தவும், திறன்மிக்கதாகவும் மாற்றுவதற்கான பட்ஜெட் ஆலோசனைகளின் ஏழு வழிமுறைகளை பற்றி பிரதமர் விவரித்தார். முதலாவதாக கங்கை நதியின் இருகரைகளிலும், 5 கிலோ மீட்டருக்குள் இயற்கை வேளாண்மையை மேற்கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, விவசாயம் மற்றும் தோட்டக்கலை விவசாயிகளுக்கு புதிய நவீன தொழில்நுட்பம் கிடைக்கும். மூன்றாவதாக, சமையல் எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கு எண்ணெய்ப் பனை இயக்கம் உறுதி செய்யப்படும். நான்காவதாக, வேளாண் உற்பத்தி பொருட்களின் போக்குவரத்திற்கு பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தின் வாயிலாக புதிய ஏற்பாடுகள் செய்யப்படும்.
பட்ஜெட்டில் ஐந்தாவது கருத்துகளாக, வேளாண் கழிவுகளை நிர்வாகிக்க துரித அமைப்புமுறை மற்றும் கழிவுகளை எரிசக்தி ஆதாரங்களாக மாற்றுவதன் மூலம் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் திட்டம். ஆறாவதாக, தற்போதுள்ள வங்கி முறையைப்போல் 1.5 லட்சத்திற்கும் அதிகமான அஞ்சலக சேவைகள் வழங்குவதால் விவசாயிகளுக்கு சிரமங்கள் குறையும்.
ஏழாவதாக, திறன்மேம்பாடு மற்றும் மனிதவள மேம்பாடு ஆகியவற்றை பயன்படுத்தி
நவீனகால தேவைக்கு ஏற்றவாறு வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விப் பாடத்திட்டங்களில் புதிய மாற்றங்கள்
செய்யப்படும்.
2023 சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் பெருநிறுவன உலக இந்திய சிறுதானியங்களுக்கு குறியீடு அளித்து மேம்படுத்த முன்வர வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
இந்திய சிறுதானியங்களின் தரம் மற்றும் பயன்களைப் பிரபலப்படுத்த கருத்தரங்குகளுக்கும், இதர ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களை அவர் வலியுறுத்தினார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை விழிப்புணர்வை உருவாக்குவதன் மூலம் இயற்கை வேளாண் பொருட்கள் சந்தை அதிகரிக்கும் என பிரதமர் கூறினார். இயற்கை வேளாண்மையை துரிதப்படுத்த விவசாய அறிவியல் மையங்கள் ஒவ்வொன்றும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில்
மண்வளப் பரிசோதனை கலாச்சாரம் அதிகரிக்க வேண்டிய தேவையை பிரதமர் வலியுறுத்தினார்.
மண்வள அட்டைகள் மீதான அரசின் கவனத்தை எடுத்துரைத்த அவர், தொடர்ச்சியான இடைவெளியில்
மண் பரிசோதனை செய்யும் நடைமுறைக்கு முன்வருமாறு புதிய தொழில்களுக்கு விவசாயிகளுக்கு அழைப்புவிடுத்தார்.
பாசனத்துறையில் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி விவரித்த பிரதமர், ஒவ்வொரு சொட்டுக்கும், அதிக சாகுபடி என்பதில் அரசின் கவனத்தைக் சுட்டிக்காட்டினார். இதிலும் கூட பெரு நிறுவன உலகத்திற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் மாற்றத்தின் பகுதியாக வேளாண்மையில் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது எனவும், வேளாண்துறை சார்ந்த புதிய தொழில்களை நாம் அதிகரிக்கும் போதுதான் ட்ரோன் தொழில்நுட்பம் கிடைப்பது அதிகரிக்கும் என்றார்.
நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 700-க்கும் அதிகமான வேளாண்மை சார்ந்த புதிய தொழில்கள் புதியதாக தொடங்கப்பட்டுள்ளன என்று கூறினார். பதப்படுத்தப்பட்ட உணவுக்கான வாய்ப்பை அதிகரிக்கவும், சர்வதேச தரத்தை வலிமைப்படுத்தவும் அரசு முயற்சிக்கிறது என்றார்.
பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலப்பதை அரசு இலக்காகக் கொண்டுள்ளது இந்த நிலையில் எத்தனால் தயாரிப்பு திறன் பற்றியும் பிரதமர் தொடர்ந்து பேசினார். 2014-ல் 1 முதல் 2 சதவீதமாக இருந்ததோடு ஒப்பிட்டு பார்க்கையில் தற்போது சுமார் 8 சதவீதத்தை எட்டியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும்
படிக்க....
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்!!
அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை வேளாண் துணை இயக்குனர் வழங்கினார்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...