கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்!!

 



கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்!!


தமிழக பட்ஜெட்டு வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கு நடப்பாண்டில் தனி பட்ஜெட் உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களில் ஒன்றான இந்த திட்டம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது. 


வருகின்ற 5 ஆண்டுகளில், அனைத்து கிராமங்களிலும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படும். நடப்பாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2500 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

 

நீர் ஆதாரங்களை பெருக்கி, சாகுபடி பரப்பினை உயர்த்தி, விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்கு ஆக்கிட ஒன்றிய, மாநில அரசு திட்டங்களை ஒன்றிணைத்து 1245.45 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 


முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப் புறங்களில் தரிசாக உள்ள நில தொகுப்புகளை கண்டறிந்து அதை பயிர் சாகுபடிக்கு கொண்டு வர தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 


மேலும் முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தகுதியான நிலங்களில், சிறு தானியம் பயறு வகைகள், எண்ணெய வித்து பயிர்களின் விதைகள், திரவ உயிர் உரங்கள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

 

இதுமட்டுமின்றி புன்செய் நிலத்தில் கோடை உழவு செய்வதற்கு ஏக்கருக்கு ரூ.500 உழவு மானியமாக வழங்கப்படுகின்றன. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல் விளக்கத்திடல் அமைத்தல், உயிர் விளைச்சல் நெல் விதைகள், நுண்ணூட்ட உரங்கள் 50 சதவீ மானியத்தில் வழங்கப்படுகின்றன. 


மேலும் தேசிய நீடித்த நிலையான இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் செயல்படுத்த பட்டு வருகின்றன. மேற்கண்ட இந்த அனைத்து திட்டங்களும் இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தபட்டு வருகிறது. 



இதேபோல் வேளாண் துறையின் சகோதர துறைகளின் செயல்பாடுகள் அனைத்தும் இந்த கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

 



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS 


தகவல் வெளியீடு


அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை.


மேலும் படிக்க....


இனிமேல் எங்கும் அலைய வேண்டாம்! விவசாயிகளுக்கான சேவைகள் சேவைகள் அனைத்தும் ரேஷன் கடைகளில் கிடைக்கும்!!


விவசாயிகளுக்கான கிருஷி யந்த்ரா மானியத் திட்டம்! விவசாய உபகரணங்கள் பாதி விலையில்!!


விவசாயிகள் தங்கள் பயிரின் அதிக விளைச்சலுக்கு சொட்டு நீர் பாசனமுறை அமைப்பீர்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments