விவசாயிகள் தங்கள் பயிரின் அதிக விளைச்சலுக்கு சொட்டு நீர் பாசனமுறை அமைப்பீர்!!
சொட்டு நீர் பாசனம் விளைச்சலை அதிகரிப்பது மட்டும் இன்றி நீர் சிக்கனம் மற்றும் களைகளின் தோன்றுவதையும் குறைகிறது. மேலும் பயிருக்கு தேவையான ஊட்டச்சத்து உரங்கள், பயிர்ப் பாதுகாப்புப் பொருட்களையும் சொட்டுநீர் மூலம் பயிருக்கு சுலபமாக அளிக்க முடியும். சொட்டு நீர்ப்பாசனம் நீண்ட கால வயதுடைய பயிர்களுக்கும் காய்கறிப் பயிர்களுக்கும் பயன்படுத்த முடியும்.
மேற்பரப்பு நீர் பாசன முறைகளைக் ஒப்பிடும்போது சொட்டு நீர்ப்பாசன முறையைக் பயன்படுத்துவதால் பாசனநீர் சேகரிப்பு, உர பயன்பாட்டில் சிக்கனம், பாசனத்திற்கு உப்பு நீரை பயன்படுத்துதல், அனைத்து மண் வகைகளுக்கும் பயன் பெறுதல், களைகளின் வளர்ச்சி குறைதல், மனித சக்தி சேமிப்பு மற்றும் பூச்சி, பூஞ்சான தாக்குதல் குறைவு போன்ற பயன்களை விவசாயிகள் பெற்று பயனடைய முடியும்.
நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பரப்பளவில் 30 முதல் 40 சதவீதம் மட்டுமே பாசனம் பெறுவதின் மூலம், வாய்க்கால் உபரி நீர் வீணாவதை முற்றிலும் தவிர்க்கப்படுவதின் மூலம் சூழ்நிலை கசிவினை குறைப்பதன் மூலம் பாசன நீர் 50 முதல் 60 சதம் வரை சேமிக்கப்படுகிறது.
சொட்டு நீர்ப்பாசனம் மூலம் திரவஉரங்கள்
மற்றும் நீரில் கரையக்கூடிய உரங்களை வெஞ்சுரி மற்றும் பிளஞ்சர் நீரேற்றம் கருவிகளின்
உதவியுடன் பாசன நீரில் கலந்து உரங்களை பயிரின் வேர்ப்பாகத்தில் நேரடியாகக் கொடுக்கும்பொது
உரத்தேவை 25 சதவீதம் குறைவதுடன் உர உபயோகிப்புத் திறன் அதிகரித்து கூடுதல் விளைச்சல்
பெற முடியும்.
மணற்பாங்கான விவசாய பூமி, மழை அளவு குறைவான பகுதிகள், சரிவான பகுதி போன்ற நிலங்களுக்கு சொட்டு நீர் பாசனம் மிக சிறந்த முறையாகும். இதன் மூலம் பயிர் சாகுபடிப் பரப்பில் 30 முதல் 40 சதவீதம் மட்டுமே ஈரமாக்கப் படுவதால் களை வளர்ச்சி பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு களை எடுக்க ஆகும் கூலி ஆட்களின் தேவை மற்றும் செலவும் குறைகிறது.
சொட்டு நீர்ப்பாசனத்தின் மூலம் 25 முதல் 30 சதவீதம் வரையிலான மனித உழைப்பு சேமிக்கப்படுகின்றது. பூச்சி மற்றும் பூஞ்சானத் தாக்குதல் குறைவாக உள்ளது என கூறப்படுகிறது.
எனவே
விவசாயிகள் சொட்டுநீர் பாசன முறையைப் பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறுமாறு மதுரை வோளண்மை
அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா. ம. சுப்பிரமணியன், தொழில் நுட்ப
வல்லுநர்கள் முனைவர் கிருஷ்ணகுமார் மற்றும் முனைவர் வள்ளன் கண்ணன் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
மேலும்
படிக்க....
ஐந்து நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு! வானிலை சர்ந்த வேளாண் ஆலோசனைகள்!!
PMFBY திட்டம் காரீஃப் பருவத்தில் வீடு வீடாகச் சென்று பதிலளிக்கும் அரசு!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...