ஐந்து நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு! வானிலை சர்ந்த வேளாண் ஆலோசனைகள்!!


ஐந்து நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு! வானிலை சர்ந்த வேளாண் ஆலோசனைகள்!!


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வானிலைத் துறை இணைந்து வழங்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனைகளை காஞ்சிபுரம், வேளாண் அறிவியல் நிலையம் பின்வருமாறு தெரிவித்துள்ளது.

 

வானிலை முன்னறிவிப்பு (19.02.2022 முதல் 23.02.2022, 8.30 மணி வரை)


அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கும் மழைக்கு வாய்ப்பின்றி வறண்ட வானிலேயே நிலவ வாய்ப்புள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 32-34 டிகிரி செல்சியஸ் வரையும் குறைந்தபட்சமாக 23-24 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாக்கலாம். மேலும் காற்றானது மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் கிழக்கு வடகிழக்கு – கிழக்கு தென்கிழக்கு திசையில் வீசலாம். 



காற்றின் ஈரப்பதமானது 60-80% வரை பதிவாக்கலாம். வானம் பகலில் பெரும்பாலும் தெளிவாக காணப்படும் ஒரு சில நாட்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.


வானிலை சர்ந்த வேளாண் ஆலோசனைகள்


வரும் 23.02.2022 – 01.03.2022 தமிழ் நாடு மற்றும் புதுவையை பொறுத்தவரையில் மழையானது இயல்பை விட அதிகரித்தும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பாகவும் இருக்கலாம். மழைக்கு வாய்ப்பில்லை என்பதினால் விவசாயிகள் மண்ணின் ஈரப்பத்தினை அறிந்து பயிர்களுக்கு பாசனம் செய்யலாம்.

 

குறுந்செய்தி

 

விவசாயிகள் தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈயை கட்டுப்படுத்த வெப்ப எண்ணெய் 3% தண்ணிரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

இளம் வளர்ச்சி பருவ நெல் பயிர்கள்


நெல் வயலில் இலை சுருட்டுப்புழு தாக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் பூச்சி தாக்க அறிகுறிகள் தென்படுமாயின் ஹக்டருக்கு குளோரோடேரினிலிபுருள் 150 கிராம் அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.


 


இளம் வளர்ச்சி பருவ உளுந்து பயிர்கள்


உளுந்து பயிரில் இலைகளை தின்று அழிக்கும் பூச்சிகள் தாக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் பூச்சியை கட்டுப்படுத்த போதிய பயிர் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும். .

 

இளம் வளர்ச்சி பருவ மிளகாய் பயிர்கள்


மிளகாய் பயிரில் இலைபேன் தாக்க வாய்ப்புள்ளது. பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் இமிடாக்லோர்பிட் 3.0 மி / 10 லி தண்ணிரில் கலந்து தெளிக்கலாம்.

 

இளம் வளர்ச்சி பருவ கத்தரி பயிர்கள்


கத்தரி பயரில் காய் புழு தாக்க வாய்ப்புள்ளது. பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் இனக்கவர்ச்சிப்பொறி ஏக்கருக்கு 5 என்றளவில் வைத்து கட்டுப்படுத்தலாம்.

 


கால்நடை அறிவியல்

 

கறவை மாடுகள்


விவசாயிகள் கறவை மாடுகளுக்கு போதிய அளவு சுத்தமான குடிநீரை பருக அளிப்பதினால் மாடுகளில் ஏற்படும் நீரிழப்பினை குறைக்கலாம். விவசாயிகள் கால்நடைகளுக்கு 30-50 கிராம் தாதுப்பை அடர்த்தீவனத்துடன் கலந்தளிப்பதால் பாலில் கொழுப்பு சத்தினை அதிகரிக்கலாம்.

 

செம்மறி மற்றும் வெள்ளாடு


விவசாயிகள் ஆடுகளுக்கு கோடை தொடங்கும் முன் குடல்புழு நீக்கம் மற்றும் ஒட்டுண்ணி நீக்கம் செய்தல் அவசியம். விவசாயிகள் ஆட்டுக்கொட்டகையில் தாது உப்பு கட்டிகளை கட்டிவைப்பதன் ஆடுகளில் வளர்ச்சி விகிதத்தினை அதிகரிக்கலாம்.

 

கோழிகள்


விவசாயிகள் கோழிகளுக்கு கோடை தொடங்கும் முன் குடல்புழு நீக்கம் மற்றும் ஒட்டுண்ணி நீக்கம் செய்தல் அவசியம். கோழிகளுக்கு பி-காம்ப்லெக்ஸ் திரவத்தினை குடிநீருடன் கலந்து அளிப்பதால் வெப்ப தாக்க அழற்சியை குறைக்கலாம்.



மீன் வளர்ப்பு


எதிர்வரும் வானிலையால் மீன் வளர்ப்பு குளங்களில் ஏற்படவிருக்கும் கார – அமில தன்மை மாற்றத்தினை கணக்கிட்டு ஹெக்டருக்கு 100-200 கிலோ சுண்ணாம்பினை குளங்களில் தெளித்து கார – அமில தன்மையை நிலைநிறுத்தலாம். 


விவசாயிகள் மீன் குளங்களில் ஒட்டுண்ணி தொற்றை தவிர்க்க 1-2 வார இடைவெளியில் எக்டேருக்கு 100-200 கிலோ, சுட்ட /நீர்த்த சுண்ணாப்பினை நீரின் கார அமிலத்தன்மைக்கேற்றவாறு (pH) அளிக்கலாம். 


மீன்களில் ஏற்படும் நோய் தொற்றினை அறிய விவசாயிகள் காலை அல்லது மாலை நேரங்களில் மீன் குளங்களில் மீன் மாதிரிகளை சேமித்து நோய்க்கான அறிகுறிகளை ஆராய்ந்து தக்க மேலாண்மை முறைகளை கையாளலாம். உலர்மீன் (கருவாடு) உற்பத்தி செய்யும் மீனவர்கள் ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் 3 கிலோ மீன்களை உலரவைக்கலாம்.

 

அலங்கார மீன்கள்


அலங்கார மீன் வளர்ப்பவர்கள் மீன் தொட்டிகளை 1-2 பிபிஎம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலை கொண்டு சுத்தம் செய்வதால் மீன்களில் ஏற்படும் புரோட்டோசோவா நோய்களை தவிர்க்கலாம். மேலும் ஒட்டுண்ணி நோய் தாக்கத்தினை தவிர்க 1-3% உப்பு கரைசலை கொண்டு குளியல் சிகிக்சை அளிக்கலாம்.

 


தகவல் வெளியீடு


முனைவர் சு.கங்காதரன், முனைவர் ப,இரா.நிஷா, முனைவர் மா.சித்தார்த், முனைவர் மா.விமலாராணி, முனைவர் தி.செல்வராஜ், முனைவர் காயத்திரி சுப்பையா, முனைவர் க.தேவகி, முனைவர் கி.சிவகுமார், மா.ராஜேஸ் கண்ணன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், செங்கல்பட்டு. 99405 42371, 94428 38015, 85080 59752.


மேலும் படிக்க....

பருத்தி விலை உயர்வு 1 பொதி-170 கிலோ! அதிக நுகர்வு காரணமாக, உலகெங்கிலும் பருத்தியின் தேவை அதிகரிப்பு!!

விவசாயிகளே ஸ்பிரிங்ளர் அமைக்க ரூ.21,000 முதல் ரூ.23,500 வரையில் மானியம்!!

PMFBY பயிர்க் காப்பீடு செய்வது எப்படி? பாதிப்பு கணக்கீட்டு முறை & காப்பீட்டுக் கட்டண விபரங்கள்!!

மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments