PMFBY பயிர்க் காப்பீடு செய்வது எப்படி? பாதிப்பு கணக்கீட்டு முறை & காப்பீட்டுக் கட்டண விபரங்கள்!!




PMFBY பயிர்க் காப்பீடு செய்வது எப்படி? பாதிப்பு கணக்கீட்டு முறை & காப்பீட்டுக் கட்டண விபரங்கள்!!


விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வது எப்படி?


புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகள், பூச்சி, நோய் தாக்குதல்களால் வேளாண் பயிர் சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இது மாதிரியான இழப்பில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

 

பயிர் காப்பீடு மூலம் வருடாந்திர தோட்டக்கலை மற்றும் பணப்பயிர்கள் மற்றும் உணவு தானிய பயிர்களுக்கு காப்பீடு செய்துகொள்ளலாம் அதாவது நெல், கம்பு, சோளம், மக்காச்சோளம், ராகி, உளுந்து, பச்சை பயிறு, துவரை, நிலக்கடலை, எள், கரும்பு, பருத்தி, உருளைக்கிழங்கு, மிளகாய், வெங்காயம், இஞ்சி, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, வாழை போன்றவை அடங்கும்.

 


குறைந்தபட்ச மகசூலின் மதிப்புக்கு சமமான காப்பீட்டுத் தொகைக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் கூடுதலாக காப்பீட்டுத் தொகை (Actuarial Premium) செலுத்தி சராசரி மகசூலின் 150% மதிப்பு வரை காப்பீடு செய்து பயன் பெறலாம்.


தரநிலை மகசூல் அளவை விட கூடுதலாக காப்பீடு செய்யப்படும் தொகையை அதிகரிக்க விரும்பினால் அதற்கான கூடுதல் காப்பீட்டுக் தொகையை (Extra Premium at Actuarial rates) நிர்ணயிக்கும் கடைசி தேதிக்குள் செலுத்த வேண்டும்.

 

காப்பீட்டுக் கட்டண விவரம்

 

உணவு தானியம் மற்றும் எண்ணெய் வித்து உள்ளிட்ட வேளாண் பயிர்களுக்கு மொத்த பயிர் காப்பீட்டுத் தொகையில், விவசாயிகள் செலுத்த வேண்டிய காப்பீட்டுக் கட்டணமான பிரிமியத் தொகை காரீப், ராபி பருவ காலத்திற்கு ஏற்ப கட்டண விகிதம் மாறுபடும். 



இதன்படி ஏப்ரல் - செப்டம்பர் மாதம் வரையிலான காரீப் பருவத்திற்கு காப்பீட்டுத் தொகையில் 2 சதவீதமும், அக்டோபர் - மார்ச் வரையிலான ராபி பருவத்திற்கு 1.5 சதவீதம் பிரிமியம் செலுத்த வேண்டும். பணப்பயிரான கரும்பு, பருத்தி மற்றும் வருடாந்திர, பல்லாண்டு வரளக்கூடிய பயிர்களுக்கு காரீப், ராபி ஆகிய இரு பருவ காலத்திலும் 5 சதவீதம் பிரீமியாக செலுத்த வேண்டும்.

 

பயிர் காப்பீட்டுக்கான தகுதி


சொந்த நிலத்தில் விவசாயம் செய்வோர், குத்தகை நிலத்தில் சாகுபடி செய்வோர், இணை சாகுபடியாளர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க்கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறாத விவசாயிகள் என அனைத்து தரப்பு விவசாயிகளும் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

 

விருப்பம் உடைய விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் ஆகிய இடங்களில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யலாம்.

 


மேலும் தேவைப்படும் ஆவணங்களாக முன்மொழிவு படிவம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சிட்டா, அடங்கல் அல்லது விதைப்பு சான்று, வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல், ஆதார் அட்டை நகல் போன்றவற்றை இணைத்து பிரிமியத் தொகையை செலுத்தி, அதற்கான ரசீதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 


பயிர்க் காப்பீட்டுக்கான https://pmfby.gov.in/ என்கிற இணைய தளத்தில் விவசாயிகளே ஆன்லைனில் பயிர்க் காப்பீட்டுக்கு பதிவு செய்து கொள்ளலாம். பயிர்க் காப்பீடு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் தற்போதைய நிலை உள்ளிட்ட விபரங்களையும் இந்த இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

 

பாதிப்பு கணக்கீட்டு முறை


விவசாயிகளுக்கு காப்பீட்டு கட்டணத் தொகையில் வழங்கப்படும் அரசு மானியம் அவ்வப்பொழுது அறிவிக்கப்படும். பரவலான பாதிப்புக்கு இத்திட்டம் பகுதிவாரியான (Area Approach) அடிப்படையில் செயல்படுகிறது.


ஒவ்வொரு பயிருக்கும் வரையறுக்கப்பட்ட பகுதியில் இத்திட்டம் உள்ளது. வருவாய் கிராமங்களின் அளவில் தற்போது பயிர் காப்பீடு கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதன்படி, வருவாய் கிராமங்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு 5 இடங்களில் மகசூல் கணக்கீடு செய்யப்பட்டும்பின்பு சராசரி மகசூல் மதிப்பிடப்படும். 



ஒரு குறிப்பிட்ட பயிரின் உத்திரவாத மகசூல் என்பது கடந்த மூன்று அல்லது ஐந்து வருடத்தின் சராசரி மகசூலை, உறுதியளிக்கப்பட்ட நஷ்டஈட்டு விகிதத்தோடு (60%, 80%, 90%) பெருக்கும் போது கிடைக்கும் மகசூலின் அளவாகும். தரநிலை மகசூலை கணக்கிட நெற்பயிருக்கு 3 வருட சராசரி மகசூலும் இதர பயிர்களும் 5 வருட சராசரி மகசூலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.


தனி நபர் பயிர் காப்பீடு விவசாயிகளின் எதிர்பார்ப்பு


இந்தியாவில் காலநிலைக்கு ஏற்ற பயிர்காப்பீடு, மகசூல் அடிப்படையிலான பயிர் காப்பீடு என 2 வகைகள் உள்ளன. இவற்றில், தமிழகத்தில் விளைச்சல் அடிப்படையிலான பயிர் காப்பீட்டு முறை நடைமுறையில் உள்ளது. பயிர்க் காப்பீடு திட்டத்தில் பலவகையான நடைமுறைச் சிக்கல்களும் உள்ளன என்று கூறுகிறார்கள் விவசாயிகள்.

 


பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டம் மாநில அரசு பங்களிப்பு 49 சதவீதம், மத்திய அரசு பங்களிப்பு 49 சதவீத, விவசாயிகளின் பங்களிப்பு 2 சதவீதம் என்று இது உள்ளது. பயிர்க் காப்பீடு செய்யும் விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு கிடைப்பதில்லை. 


சேத மதிப்பை முன்பு பிர்கா (உள்வட்ட) அளவில் கணக்கிட்டனர். தற்போது, இது வருவாய் கிராம அளவில் கணக்கிடப்படுகிறது. இவைகளுக்கு பதிலாக, தனி நபர் பயிர்க் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான மகசூல் மற்றும் இழப்பும் இருப்பதில்லை.

 


மேலும், நாடு முழுவதும் காரீப், ராபி பருவ காலங்களின் அடிப்படையில் மகசூல் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த பருவ காலம் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது. குறிப்பாக, தமிழ்நாட்டின் பயிர் சாகுபடி காலம் மாறுபடும்


எனவே, மாநிலத்தில் நிலவும் காலநிலைக்கு ஏற்றவாறு காப்பீட்டு பருவ நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழையினால் அறுவடை முடிந்த மற்றும் அறுவடைக்கு தயாராக உள்ள நெற் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இது போன்ற நேரங்களில் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.


மேலும் படிக்க....


வாட்ஸ் ஆப்-ல் வானிலைத் தகவல்கள் 'மேக்தூத்' வானிலை தகவல்களை விவசாயிகள் எளிதில் பெறலாம்!!


கரும்பில் கரையான் மற்றும் வேர் புழு கட்டுப்பாடு விவசாயிகள் அறிய வேண்டிய முழு தொகுப்பு!!


நிலக்கடலைப் பயிரில் புரோடினியா புழுவின் தாக்குதல் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments