வாட்ஸ் ஆப்-ல் வானிலைத் தகவல்கள் 'மேக்தூத்' வானிலை தகவல்களை விவசாயிகள் எளிதில் பெறலாம்!!



வாட்ஸ் ஆப்-ல் வானிலைத் தகவல்கள் 'மேக்தூத்' வானிலை தகவல்களை விவசாயிகள் எளிதில் பெறலாம்!!


வேளாண்மையில் வானிலையின் பங்கு இன்றியமையாததாகும். ஏனெனில் பயிர் காலத்தில் நிலவும் தட்பவெப்ப சூழலே மூன்றில் இருமடங்கு மகசூலை நிர்ணயிக்கும் தன்மைகொண்டது. சரியான பயிரை, அதற்குரிய நிலத்தில் விதைத்து, தக்க தருணத்தில் பயிர் மேலாண்மை செய்துவந்தால் மட்டுமே மகசூலை பெருக்க முடியாது. 


பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை வெப்பநிலை, சூரிய ஒளி, மழையளவு, காற்றின் ஈரப்பதம் மற்றும் காற்றின் வேகம் போன்ற வானிலை சார்ந்த காரணிகளை பொறுத்தே அமைகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வளரும் தாவரங்களை நிர்ணயிக்கும் முக்கியமான காரணி வெப்பநிலை மட்டுமே. 



காற்றின் வேகமும் திசையும் பயிர் வளர்ச்சியில் முக்கிய பங்காக இருக்கிறது. காற்றின் ஈரப்பதம் பயிரின் நீர் உபயோகத்தில் நேரடியாகவும் இலை வளர்ச்சி, ஒளிச்சேர்க்கை, மகரந்தசேக்கை, பூச்சி, நோய் தாக்குதல் மற்றும் விளைச்சல் ஆகியவற்றில் மறைமுகமாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். 


இந்த இயற்கை கொடையை மாற்றி அமைப்பது என்பது முடியாத ஒன்று. அதனால் பயிர் மேலாண்மைக்கு தேவையான காலநிலைக் காரணிகளைப் பற்றிய தகவல்களை அவை சார்ந்த பயிர் ஆலோசனைகளை உடனுக்குடன் விவசாயிகளுக்கு தெரிவிப்பதன் மூலம் காலநிலை பேரிடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பினை முக்கூட்டியே அறிந்து குறைக்க முடியும்.

 

இந்திய வானிலை மையம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம், மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையத்துடன் இணைந்து மாவட்ட வானிலை பிரிவுகளை உருவாக்கியுள்ளது. 



இந்த மாவட்ட வானிலை பிரிவுகள் வாரத்திற்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அடுத்து வரக்கூடிய ஐந்து நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தகவல்கள் மற்றும் வானிலை சார்ந்த ஆலோசனைகளை மாவட்ட அளவில் வழங்கி வருகிறது. 


மாவட்ட அளவிலான வானிலை தகவல்களை விவசாயிகள் மேக்தூத் (MEGHDOOT) செயலி வழியாக பெறலாம். அல்லது உழவன் (Uzhavan) செயலி வழியாக பெற முடியும். வட்டார அளவிலான வானிலை தகவல்களை விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையத்தின் வாட்ஸ் ஆப் மூலமாகவும் பெற முடியும்.


வானிலை சார்ந்த ஆலோசனைகளை விவசாயிகள் சரிவர தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் பயிர்களில் நீர் மேலாண்மை, களை கட்டுப்பாடு, பூச்சி, நோய் மற்றும் உர மேலான்மை பணிகளை தக்க தருணத்தில் செய்வதன் மூலன் அதிகப்படியான சாகுபடி செலவுகளை குறைக்க முடியும். 


விவசாயத்தில் ஏற்படும் பெரிய அளவிலான இழப்புகளான பருவம் தவறி பெய்யும் மழை, வறட்சி மற்றும் பெருவெள்ளம் போன்றவற்றை தவிர்ப்பதற்கு வானிலை முன்னறிவிப்பு மிகவும் அவசியமாகிறது. மேலும் கால்நடைகளை தாக்கும் பருவகால நோய்க்கான தடுப்பூசிகளை முன்கூட்டியே செலுத்துவதன் மூலம் கால்நடைகளை நோய் தொற்றிலிருந்து கால்நடைகளை பாதுகாக்கலாம்.

 


மேகத் தூத் ( MEGHDOOT ) செயலியை பதிவிறக்கம் செய்யும் முறை


விவசாயிகள் தங்களின் ஆன்ராய்டு போனில் கூகுள் பிளே ஸ்டோரில் MEGHDOOT என்ற மொபைல் ஆப் போனில் நிறுவவும். அதன்பின்னர் 'மேகத் தூத்' செயலில் தாங்கள் சைன் ஆப் செய்து பெயர், மாவட்டம், மொபைல் எண் மற்றும் விருப்ப மொழி போன்றவற்றை தேர்வு செய்து பதிவிடவும். 


இத்தகவல்கள் நிரந்தரமாக தங்களின் ஆன்ராய்டு போனில் சேமிக்கப்படுவதால் அடுத்த ஒவ்வொரு முறையும் உள்நுழைந்து தங்களது மாவட்டத்தின் அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தகவல்கள் மற்றும் அவை சார்த்த வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை அறிவியல் மற்றும் மீன்வள அறிவியல் ஆலோசனைகளை பெற்று பயனடையலாம். மேலும் இந்த செயலில் கடந்த ஐந்து நாட்களாக மாவட்டத்தில் நிலவிய வானிலை தகவலைப் பெற்றுக்கொள்ள முடியும்.

 

வட்டார அளவிலான வானிலை தகவல்களைப் பெற காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், செங்கல்பட்டின் வாட்ஸ் ஆப் எண்ணில் (99405-42371) பெறலாம். மற்ற மாவட்ட விவசாயிகள் அந்தந்த மாவட்ட வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகுவதன் மூலன் வானிலை தகவல்களை  தகவலைப் பெற்றுக்கொள்ள முடியும்.

 


தகவல் வெளியீடு


முனைவர் சு.கங்காதரன், தொழில்நுட்ப வல்லுநர், முனைவர் ப,இரா.நிஷா, பேராசிரியர் மற்றும் தலைவர், மா.ராஜேஸ்கண்ணன், வானிலைக் கண்காணிப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், செங்கல்பட்டு. 99405 42371, 94428 38015, 85080 59752.

 

மேலும் படிக்க....


PM Kisan விதிகளில் மாற்றம் 11வது தவணை இனி இறந்த விவசாயிகளின் பெயரில் கிடைக்காது!!


விவசாயத்தில் மண்வளம் மிகவும் இன்றியமையாதது! பயறு வகை பயிரிட்டு மண்வளம் காக்கலாம்!!


கரும்பில் கரையான் மற்றும் வேர் புழு கட்டுப்பாடு விவசாயிகள் அறிய வேண்டிய முழு தொகுப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments