கரும்பில் கரையான் மற்றும் வேர் புழு கட்டுப்பாடு விவசாயிகள் அறிய வேண்டிய முழு தொகுப்பு!!
கரும்பில்
கரையான் மற்றும் வேர் புழு கட்டுப்பாடு
சிவகங்கை
மாவட்டம், மானாமதுரை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ரா.பத்மாவதி, கரும்பில் கரையான்
மற்றும் வேர் புழு தாக்குதலும் மகசூல் மற்றும் தரம் குறைய காரணமாக இருப்பதால் அதன்
அறிகுறிகள் தென்பட்டவுடன் பின்வரும் கட்டுப்பாட்டு முறைகளை கையாண்டு மகசூல் இழப்பை
குறைக்கலாம் எனவும் தெரிவித்தார்.
கரையான்
அறிகுறிகள்
நடவு
செய்த கரணைகள் சரியாக முளைக்காமல் இருக்கும். முதலில் வெளிப்புற இலைகள் மஞ்சள் நிறமாக
மாறி காய்ந்து போகும் பின்பு உட்புற இலைகளும் காய்ந்துவிடும். இறுதியில் முழுக்குருத்தும்
காய்ந்து, இழுக்கும் போது கையோடு வந்து விடும். விதைக் கரணைகளில் உட்புறத் திசுக்களின்றி
கரையான் மண் காணப்படும். கரும்பு சோகையின் ஓரங்களில் அரை வட்டமாக கரையான் கடித்தது
போல காணப்படும்.
கரையான் கட்டுப்பாடு
கரையான் மருந்தினை மண்ணில் இட்ட பின்பு குறைவாக நீர் பாய்ச்ச வேண்டும். வயல் மற்றும் வரப்புகள் நிரம்ப தண்ணீர் கட்டுவதன் மூலம் கரையான் தாக்குதலை தவிர்க்கலாம். விதைக்கரணையை நடுவதற்கு முன்பு இமிடாகுளோபிர்டு 70றுளு 0.1 சதம் நனைத்து நட வேண்டும்.
சேதம் அதிகமாக காணப்பட்டால்
பின்வரும் ஏதாவது ஒரு மருந்தை ஹெக்டருக்கு தெளிக்கலாம். குளோரோட்ரோனிபுரோல் 18.5 ளுஊ
500 மிலி (அ) இமிடாகுளோப்ரிட் 7.8மூ ளுடு – 350 மிலி (அ) தயோமீதாக்ஸம் 75மூ ளுபு
-160 கிராம் (அ) குளோர்பைரிபாஸ் 20மூ நுஊ -750 மிலி
வேர்
புழு அறிகுறிகள்
பாதிக்கப்பட்ட கரும்புகள் வேரற்று கீழே சாய்ந்து விடும். வேர் மற்றும் அடிக்குருத்து பகுதியில் பெரும் சேதம் விளைவிக்கும். பாதிக்கப்பட்ட கரும்பினை இழுத்தால் எளிதில் வந்துவிடும். நுனிப்பகுதி முழுதும் காய்ந்து விடும். இலைகள் மஞ்சள் நிறமடைந்து வாடி சருகுபோன்று மாறிவிடும்.
வேர் புழு கட்டுப்பாடு
அறுவடை முடிந்த பின் ஒரு முறை ஆழமான உழவு செய்ய வேண்டும். ஜுன் மாதத்தில் 4-5 முறை உழுவதன் மூலம் மண்ணில் உள்ள புழுக்கள் மற்றும் முட்டை வெளியே வரும்.
அதனை பறவைகள் கொத்தி தின்னும்.
வயலில் எப்பொழுதும் ஈரத்தன்மை இருக்குமாறு வைத்திருக்க வேண்டும். கார்போபியூரான் 3பு
25 கி.கி/ஹெ பயன்படுத்த வேண்டும். விளக்குப் பொறிகள் 20 பொறி/ஹெ என்று 7-8 நாட்கள்
தொடர்ந்து வைக்கவும்.
மேலும்
படிக்க....
பயறு வகைப் பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் தாக்கம் மற்றும் மேலாண்மை முறைகள்!!
ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் மூலம் ஆடு மற்றும் கறவை மாடுகளுக்கான காப்பீட்டு பணி!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...