Random Posts

Header Ads

பயறு வகைப் பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் தாக்கம் மற்றும் மேலாண்மை முறைகள்!!

 


பயறு வகைப் பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் தாக்கம் மற்றும் மேலாண்மை முறைகள்!!


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல்

 

தமிழ்நாட்டில் தற்போது பயறுவகைப் பயிர்களான உளுந்து மற்றும் பச்சைப்பயிறு பயிர்களில் மஞ்சள் தேமல் நோயின் தாக்கம் காணப்பட வாய்ப்புள்ளது. இந்த நோய் கீழ்காணும் முக்கிய அறிகுறிகளை உண்டாக்குகின்றது.


பாதிக்கப்பட்ட செடிகளில் உள்ள இளம் இலைகளின் மேல் மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றி பிறகு மஞ்சளும் பச்சையும் கலந்த மஞ்சள் தேமல் போல காணப்படும்.



புதிதாக உருவாகும் இலைகள், முழுவதுமாக மஞ்சள் நிறமாகி காணப்படும். பாதிக்கப்பட்ட செடிகள் வளர்ச்சி குன்றிக் காணப்படும். பாதிப்படைந்த செடிகளில் காய்களின் எண்ணிக்கை குறையும் மேலும், காயும் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.


இந்த நோய் நச்சுயிரி வகை (வைரஸ்) எனப்படும் உளுந்து மஞ்சள் தேமல் நச்சுயிரி மூலம் ஏற்படக்கூடிய நோய் ஆகும். இந்த நோய் பாதிக்கப்பட்ட செடிகள் வயல்களிலிருந்து மற்ற பாதிக்கப்படாத செடிகள் மற்றும் வயல்களுக்கு சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈக்களின் மூலம் பரவும் தன்மையுடையது.

 

இந்நோயை கீழ்கண்ட ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை முறைகளை கடைபிடித்து நன்கு கட்டுப்படுத்தலாம்


நோய் எதிர்ப்பு உளுந்து இரகங்களான வம்பன் 6, வம்பன் 8 மற்றும் வம்பன் 11 போன்ற ரகங்களை பயன்படுத்த வேண்டும்.


முதலாவதாக விதைகளை, ஒரு கிலோ விதைக்கு  2 கிராம் போராக்ஸ் மற்றும் 10 சதவீதம் நொச்சியிலைச்சாறு 300 ml கொண்ட கலவையில் குறைந்தது 30 நிமிடங்கள் ஊரவைத்து பிறகு 5ml இமிடாகுளோப்ரிட் 600 குளு என்ற அளவில் விதை நேர்த்தி செய்து பிறகு விதைக்க வேண்டும்.



நோய் எதிர் உயிர்க்கொல்லியான பேசில்லஸ் சப்டிலிஸ் என்ற பாக்டீரியா கலவையை எக்டருக்கு 2.5 கிலோ என்ற அளவில் நன்கு மக்கிய தொழுவுரம் 250 கிலோவுடன் கலந்து வயலில் இடவேண்டும்.


வயலில் வரப்பு பயிராக வரப்பைச் சுற்றி மக்காச்சோளப் பயிரினை 2 வரிசை வீதம்  பயிரிட வேண்டும். மஞ்சள் தேமல் நோய் நம் கண்களுக்கு தென்பட்டவுடன் ஒரு சில பாதிக்கப்பட்ட செடிகள் இருக்கும் வேளையில் அவைகளை உடனடியாக பிடுங்கி தீயிட்டு அழித்தல் வேண்டும்.


வயலில் எக்டருக்கு 12 என்ற வீதத்தில் மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை அமைத்து வெள்ளை ஈக்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் போராக்ஸ் மற்றும் 10 சத நொச்சி இலைச்சாறு கலந்த கரைசலை விதைத்த 30 நாட்களுக்குப்பிறகு தெளிக்க வேண்டும்.



நமது தேவைக்கேற்ப, நச்சுயிரிகளை பரப்பும் வெள்ளை ஈக்கள் அதிகம் தென்பட்டால் எக்டருக்கு 250 கிராம் அசிட்டாமிப்ரிட் 20 WP அல்லது 500ml மீத்தைல் டெமட்டான் 25 EC அல்லது 500 ml டைமீத்தோயேட் 30 நுஊ அல்லது 100 கிராம் தையோமீத்தாக்சம் 75 WG அல்லது 250 ml இமிடாக்குளோப்ரிட் 17.5 SL போன்ற பூச்சிக்கொல்லிகளில் இவற்றில் ஏதேனும் ஒன்றை தெளித்து அழிக்கலாம்.

 

மேற்கண்ட இந்த ஒருங்கிணைந்த நச்சுயிரி நோய் மேலாண்மை முறைகளை விவசாயிகள் கடைப்பிடித்து பயறுவகை பயிர்களை மஞ்சள் தேமல் நோயிலிருந்து பாதுகாக்குமாறு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு மையம் கேட்டுக்கொள்கிறது.


மேலும் படிக்க....


PM கிசான் திட்டத்தின் கீழ் eKYC செய்யாதவர்கள் உடனே செய்து 11வது தவணை பெறுங்கள்!!


கோவை வேளாண் பல்கலை கழகம் சார்பில், 17 புதிய வகை பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன!!


கருப்புக்கவுனி நெல் இரகம் சாகுபடி பற்றிய முழு தொகுப்பு! வெற்றி கன்ட விவசாயியின் அனுபவங்கள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments