PM கிசான் திட்டத்தின் கீழ் eKYC செய்யாதவர்கள் உடனே செய்து 11வது தவணை பெறுங்கள்!!
எந்த சிக்கலும் இல்லாமல் 11வது தவணை பெற விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன? தவணை தொகை எப்போது கிடைக்கும்? என்பன குறித்துத் தெரிந்து கொள்ளத் தொடர்ந்துப் படியுங்கள்.
ஆண்டுக்கு ரூ.6000
PM கிசான் திட்டத்தின் கீழ், நாட்டின் ஒவ்வொரு விவசாயியும் தகுதியுடையவர்களாகக் கருதப்பட்டு,
அவர்களுக்கு மத்திய அரசால் ஆண்டுக்கு ரூ.6000 நிதியுதவி மூன்று சம தவணைகளில் வழங்கப்படுகிறது.
அதாவது ஒரு தவணையில் ரூ. 2000 வழங்கப்படுகிறது.
இந்த தருணத்தில், கடந்த ஆண்டு, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் eKYC ஐ மத்திய அரசாங்கம் வாயிலாக கட்டாயமாக்கப்பட்டது.
ஆதார் அடிப்படையிலான OTP அங்கீகாரத்திற்காக, 'Formar Corner-ல்" உள்ள eKYC விருப்பத்தை கிளிக் செய்யவும், அதே நேரத்தில் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கு அருகில் உள்ள CSC மையங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அதிகாரப்பூர்வ இணையதளம் கூறியது.
PM
கிசான் திட்டத்தின் அடுத்த தவணையான 11வது தவணையை எந்த சிக்கலும் இல்லாமல் விவசாயிகள் பெற விரும்பினால்,
உடனடியாக உங்கள் eKYC ஐ முடிக்கவும். இவ்வாறு eKYC-யை பூர்த்தி செய்யாவிட்டால்,
11வது தவணை உங்கள் வங்கிக் கணக்கில் வராமல் போகும்.
இருப்பினும் சில பல காரணங்களால், நடைமுறைகளை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த eKYC தற்போது, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செயல்படுகிறது. எனவே eKYC செய்யாதவர்கள் உடனே செய்து கொள்வது நல்லது. இருப்பினும் PM கிசான் மொபைல் செயலி அல்லது லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரின் உதவியுடன் வீட்டில் அமர்ந்தபடியே இந்த வேலையை ஆன்லைனில் செய்து முடிக்கலாம்.
eKYC
ஐ எப்படி முடிப்பது?
முதலில் PM Kisan இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். வலது புறத்தில் 'Former Corner' உள்ள விருப்பத்தில், நீங்கள் eKYC இணைப்பைக் காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும்.
இதற்குப் பிறகு உங்கள் ஆதாரை உள்ளீடு தேடல் 'Button'-னை கிளிக் செய்யவும். தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். அனைத்தும் சரியாக இருந்தால், eKYC முடிக்கப்படும் அல்லது அது தவறானதாகக் காண்பிக்கப்பட்டால், நீங்கள் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
ஏப்ரல் 2022-ல் 11வது தவணை
அதிகாரிகளின் கூற்றுப்படி, அடுத்த தவணை அதாவது 11வது தவணை ஏப்ரல் 2022 முதல் வாரத்தில் வெளியிடப்படும். 10வது தவணை ஜனவரி 1, 2022 அன்று மாற்றப்பட்டது.
யாருக்குக்
கிடைக்காது?
அனைத்து நிறுவன நில உரிமையாளர்கள், அரசியலமைப்பு பதவிகளில் இருந்தவர்கள் மற்றும் தற்போது இருப்பவர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள்/ மாநில அமைச்சர்கள் மற்றும் மக்களவை/ மாநிலங்களவை/ மாநில சட்டப் பேரவைகள்/ மாநில சட்டப் பேரவைகளின் முன்னாள்/தற்போதைய உறுப்பினர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய மாநகராட்சி மேயர்கள், மாவட்ட பஞ்சாயத்துகளின் முன்னாள் மற்றும் தற்போதைய தலைவர்கள்.
மாதாந்திர ஓய்வூதியம் ரூ.10,000க்கு மேல் பெறும் ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள், மத்திய/மாநில அரசு அமைச்சகங்கள்/அலுவலகங்கள்/துறைகள் மற்றும் அதன் களப் பிரிவுகளான மத்திய அல்லது மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் கீழ் இணைக்கப்பட்ட அலுவலகங்கள்/தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அல்லது ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வழக்கமான பணியாளர்கள்.
கடந்த மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், CA & கட்டிடக் கலைஞர்கள் போன்ற வல்லுநர்கள், தொழில்முறை அமைப்புகளுடன் பதிவுசெய்து, நடைமுறைகளை மேற்கொள்வதன் மூலம் தொழிலை மேற்கொள்பவர்கள் போன்றவர்களுக்கு PM கிசான் நிதியுதவி கிடைக்காது.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும்
படிக்க....
PM கிசான்: இந்த விவரங்களை வழங்காமல் விவசாயிகள் 11வது தவணையைப் பெற மாட்டார்கள்!!
பட்ஜெட் 2022-இல் விவசாயிகளுக்கான Kisan நிதி தொகை அதிகரிக்கவில்லை! எந்தெந்த பயிர்களுக்கு MSP சலுகை!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...