Random Posts

Header Ads

கருப்புக்கவுனி நெல் இரகம் சாகுபடி பற்றிய முழு தொகுப்பு! வெற்றி கன்ட விவசாயியின் அனுபவங்கள்!!



கருப்புக்கவுனி நெல் இரகம் சாகுபடி பற்றிய முழு தொகுப்பு! வெற்றி கன்ட விவசாயியின் அனுபவங்கள்!!


கருப்புக்கவுனி நெல் இரகம் அதிக மகத்துவம் வாய்ந்த பாரம்பரிய நெல் இரகமாக கருதப்படுகிறது. இந்த இரகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது. இது சம்பா பருவத்திற்கேற்ற 145-150 நாட்கள் வயதுடைய நெல் இரகம் ஆகும்


கருப்புக்கவுனி கரிசல் மண் மற்றும் வறண்ட செம்மண் போன்றவற்றிக்கு உகந்தது. இதனை நேரடி விதைப்பு அல்லது நடவு முறையிலும் பயிர் பயிர் செய்ய முடியும். ஒரு ஏக்கருக்கு 2 கிலோ அளவிலான விதை நெல் போதுமானது. 



ஒரு ஏக்கருக்கு தேவையான விதை நெல்லை தேவையான அளவு தண்ணீரில் ஊற வைத்து பிறகு பிறகு விதைக்க வேண்டும். இதன் 1000 விதையின் எடை 32-35 கிராம்தான், மற்ற நெல் இரகங்களை இதனுடன் ஒப்பிடும்போது இது மிகவும் அதிகம். 5-6 தூர்கள் வரை வெடிக்கும் திறன் கொண்டது. 


இந்த நெல் இரகம் சாகுபடி செய்வதற்கு எவ்வித ரசாயன உரங்களும் பயன்படுத்த அவசியமில்லை. அங்கக வேளாண்மை முறையே நல்ல விளைச்சலை கொடுக்கக் கூடிய நெல் இரகமாகும். 


வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையம் புதுக்கோட்டை சார்பாக அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் விதமாக முதல்நிலை செயல்விளக்கத் திடல் அமைப்பதற்கு புதுக்கோட்டை மாவட்டம் கோவில் வீரக்குடியைச் சேர்ந்த முன்னோடி விவசாயியான கலைச்செல்வன் தேர்ந்தெடுக்கப்பட்டு பாரம்பரிய இரகமான கருப்புகவுனி சாகுபடி செய்ய வேளாண் துறையால்  ஊக்குவிக்கப்பட்டது. 



இவருக்கு மண்புழு உரம் ஏக்கருக்கு 100 கிலோ மற்றும் பேசில்லஸ் சப்டில்லிஸ், அசோஸ்பைரில்லம் 200 கிராம் போன்றவை வழங்கப்பட்டது. மேலும் இலை தழை கரைசல், மீன் அமிலம், பஞ்சகாவ்யா,  போன்ற இயற்கை வளர்ச்சி யூக்கிகளை அவரே தயார் செய்து பயன்படுத்தவும் பரிந்துரை செய்யப்பட்டது. 


நொச்சி, எருக்கு, பப்பாளி, நாவல் மற்றும் ஒடுவ இலைகளை மாட்டு கோமியத்தில் 15 நாட்கள் ஊற வைத்து தயாரிக்கப்படும் இலை தழை கரைசலைத் தெளிப்பதன் மூலம் இலைச்சுருள் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.


பப்பாளி காய்களை வெட்டி வரப்பின் ஓரம் வைப்பதன் மூலம் எலித் தொல்லையைக் கட்டுப்படுத்த முடியும் என கூறினார். மேலும் தண்டு துளைப்பான் பூச்சியின் தாக்கத்தைக் குறைக்க பஞ்சகாவ்யாவை பயன்படுத்தினார். மேலும் இந்த கருப்புக்கவுனி நெல் பயிரிட்டு ஏக்கருக்கு 1800 கிலோ தானிய மகசூல் மற்றும் 700 கிலோ வைக்கோலும் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

 

கவுனி இரகத்தின் பயன்கள்


கருப்புகவுனி செட்டிநாடு பகுதியில் நிகழ்ச்சிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு நெல் இரகமாகும். இது குறிப்பாக பொங்கல், பனியாரம் மற்றும் அல்வா போன்ற உணவு பொருட்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. கருப்பு கவுனியால் செய்த பலகாரம் குறிப்பாக விருந்தினர்களை கவுரவப்படுத்த பரிமாரப்படும் பலங்காரங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

 


கருப்புக் கவுனியின் மருத்துவப் பயன்கள்

 

உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் நிறைந்தது, உணவுக்குழாய் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. நீரிழிவு, புற்றுநோய், இதயநோய் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற முக்கிய பிரச்சனைகளிலிருந்து ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் பாதுகாக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்தது. அதிகமான நார்ச்சத்து மற்றும் இரும்புசத்து நிறைந்தது.

 


இவர் தன்னுடைய விவசாய அனுபவங்கள் குறித்து வம்பன் வேளாண் அறிவியல் நிலைய தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ப.சாந்தி மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.


மேலும் படிக்க....


நெல் தரிசில் பயறு வகை சாகுபடி செய்ய 50 சத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள் விநியோகம்!!


உளுந்து குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூபாய் 63 நிர்ணயம்! நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி செய்துடுவீர்!!


தென்னை சாகுபடியில் நோய் மேலாண்மை மற்றும் பூச்சி மேலாண்மை வழி முறைகள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments