அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட செயலாக்க குழு கூட்டம்!!

 


அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட செயலாக்க குழு கூட்டம்!!


அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள மதுக்கூர் வடக்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட மதுக்கூர்வடக்கு கிராமத்தில் கிராம அளவிலான திட்ட செயலாக்க குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. 


கிராம திட்ட செயலாக்க குழுவானது கிராம ஊராட்சி மன்றதலைவரை தலைவராகவும் மக்கள் பிரதிநிதிகள் முன்னோடி விவசாயிகள் மற்றும் சுய உதவி குழுவின் பிரதிநிதிகளை உறுப்பினர்களாகவும் வேளாண்மை துறை உட்பட்ட 16 துறைகளின் அதிகாரிகளை உள்ளடக்கியும் உருவாக்கப்பட்டுள்ளது. 



ஒருங்கிணைப்பு அலுவலராக வேளாண் துறை உள்ளது இதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் மதுக்கூர் வடக்கு ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன் தலைமையில் கார்த்திகேயன் கவுன்சிலர் மற்றும் விஜயகுமார் துணை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் தர்மராஜ் மூர்த்தி நைனா முகமது திருஞானசம்பந்த மூர்த்தி மற்றும் சரஸ்வதி உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி வேளாண் அலுவலர் சாந்தி மற்றும் வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் ஆகியோர் வேளாண்துறை சார்பில் கலந்து கொண்டனர். வேளாண் உதவி இயக்குனர் கிராமத்தின் அடிப்படை விபரங்கள் மற்றும் அனைத்து விவசாயிகளின் அடிப்படை விபரங்களை சேகரிப்பதற்கான படிவங்களை விவசாயிகள் பதிவு செய்வதற்கான முறைகளைப் பற்றி எடுத்துக் கூறினார். 



வேளாண் அலுவலர் சாந்தி வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து மானியத் திட்டங்கள் பற்றி செயலாக்க குழு கூட்டத்தில் எடுத்துரைத்தார். வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் வேளாண் துறையின் திட்டங்களில் அனைத்து கிராமஅண்ணா மறு மலர்ச்சி திட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது பற்றி எடுத்துக் கூறினார். 



கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கைத்தெளிப்பான்கள் மற்றும் உளுந்து விதைகள் தென்னங்கன்றுகள் மற்றும் பவர் டில்லர்கள் மற்றும் கடப்பாறை மண்வெட்டி போன்றவை விவசாயிகளுக்கு அதிக அளவில் தேவைபடுவதாக தெரிவித்துள்ளனர். 


கிராம அளவு தேவையாக மூன்று குளங்களை தூய்மை செய்து கரை உயர்த்தி படித்துறை ஏற்படுத்தித் தரவும், முன்பே கட்டி தரப்பட்டு சிதிலம் அடைந்துள்ள நிலையில் உள்ள களங்களை சீர்படுத்தி தரவும் கிராம சாலைகள் அமைத்து விடவும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தடங்கலின்றி வழங்கிடவும் கேட்டுக்கொண்டனர். 



கூட்டத்தில் கலந்து கொள்ள விடுபட்ட விவசாயிகள் பஞ்சாயத்து அலுவலகத்தில் படிவத்தைப் பெற்றுக் கொண்டு தங்களுடைய அடிப்படை விவரங்களை உரிய ஆவணங்களுடன் வெள்ளிக்கிழமைக்குள் வழங்கிட வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டார். கூட்டம் மதுக்கூர் வடக்கு மாரியம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


தகவல் வெளியீடு


S.திலகவதி,

வேளாண்மை இணை இயக்குனர், மதுக்கூர்,

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


கருப்புக்கவுனி நெல் இரகம் சாகுபடி பற்றிய முழு தொகுப்பு! வெற்றி கன்ட விவசாயியின் அனுபவங்கள்!!


உளுந்து குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூபாய் 63 நிர்ணயம்! நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி செய்துடுவீர்!!


விவசாயிகளின் அடிப்படை விபரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு இடுபொருள் மானியத்தில் வழங்கல்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments