ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் மூலம் ஆடு மற்றும் கறவை மாடுகளுக்கான காப்பீட்டு பணி!!
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் மூலம் ஆடு மற்றும் கறவை மாடுகளுக்கான காப்பீட்டு பணி மதுக்கூர் வட்டாரம் ஒலயகுன்னம் மற்றும் புளியக்குடி கிராமங்களில் தேர்வு செய்யப்பட்ட 8 விவசாயிகளின் கறவை மாடுகள் மற்றும் மற்றும் ஆடுகள் கொள்முதல் மற்றும் காப்பீட்டு பணி முத்துப்பேட்டை சந்தையில் இன்று நடைபெற்றது.
வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வேளாண் அலுவலர் சாந்தி, துணை வேளாண் அலுவலர் அன்புமணி ஆகியோர் காப்பீட்டு பணிகளை ஆய்வு செய்தனர். வேளாண் உதவி அலுவலர்கள் சுரேஷ் தினேஷ் பூமிநாதன் மற்றும் கார்த்தி ஆகியோர் தத்தம் தொகுதிக்கு உட்பட்ட கிராம விவசாயிகளின் கறவை மாடு மற்றும் ஆடுகளை காப்பீடு செய்யும் பணியினை ஒருங்கிணைத்தனர்.
கால்நடைத்துறை மருத்துவர்கள் ரூபவாஹினி கார்த்திகேயன் சங்கர் மற்றும் இளவரசி ஆகியோர் கறவை மாடு மற்றும் ஆடுகளின் வயது மற்றும் அடையாளங்களை ஆய்வு செய்து காப்பீட்டு பணியினை மேற்கொண்டனர். சிசி திட்ட பணியாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பவித்ரா ஆகியோர் உடன் இருந்தனர் இன்றைய தினம் சந்தையில் ஆடு மாடு கொள்முதலுக்கான பணிகளை சந்தை மேலாளர் மார்க்கஸ் ஒருங்கிணைத்தார்.
சிறப்பு
கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்
ஈரோடு மாவட்டம், முடுக்கன்துறை ஊராட்சி, பவானிசாகர் ஒன்றியத்தில் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல், செயற்கை முறை கருவூட்டம் செய்தல், சினை பரிசோதனை செய்தல் மற்றும் சிறந்த கிடாரிக கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிற்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் கால்நடைப் பராமரிப்பு மேலாண்மைக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. இந்த முகாமில் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று கால்நடை சிகிச்சை முறைகளை பற்றிக் கற்றுக் கொண்டனர். மேலும் பொதுமக்களுக்கு தீவனப்பயிர் வளர்ப்புப் பற்றிய விழிப்புணர்வு செய்யப்பட்டது.
தடுப்பூசியின் முக்கியத்துவம் பற்றியும், கால்நடைப் பராமரிப்பு முறைகள்
பற்றியும் மருத்துவரின் உதவியுடன் பொதுமக்களுக்கு எடுத்து கூறினர். இம்முகாமானது முடுக்கன்துறை
மற்றும் சுற்றுப்புற கிராம பகுதி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இம்முகாம் அமைந்தது.
பயிர்
நடவு & கால்நடை பராமரிப்பு குறித்த வேளாண் ஆலோசனைகள்
சேலம் மாவட்ட உழவர்களுக்கு சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையம், மாவட்ட வேளாண் வானிலை மைய (DAMU) திட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெகதாம்பாள் மற்றும் s. பிரபாகரன் – (வேளாண் காலநிலை கண்காணிப்பாளர்) தெரிவித்ததாவது,
வாரத்தில் இரண்டு முறை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை
பயிர் நடவு முதல் அறுவடை வரை மற்றும் கால்நடை பராமரிப்பு குறித்த வேளாண் ஆலோசனைகளை மாவட்ட
வேளாண் வானிலை மையம் வழங்கி வருகிறது. இந்த வேளாண் ஆலோசனைகளை சேலம் மாவட்ட விவசாயிகள்
அனைவரும் பயன்படுத்தி பயன் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
விவசாயிகள் மேலும் தொடர்பிற்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம்
– 636 203, 0427 242 2550, 90955 13102, 70109 00282.
மேலும்
படிக்க....
தென்னை சாகுபடியில் நோய் மேலாண்மை மற்றும் பூச்சி மேலாண்மை வழி முறைகள்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...