பருவம் தவறிய மழை விவசாயிகளுக்கு எச்சரிக்கை! தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!
இன்று முதல் வருகின்ற, 13ம் தேதி வரை, தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் தமிழக தென் மாவட்டங்களில், இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது.
சென்னையில்
இன்று வானம் மேக மூட்டமாக காணப்படும். அதிகபட்சம், 31 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் குறைந்தபட்சம்,
23 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் வெப்ப நிலை பதிவாகும் என தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் சில இடங்களில் வரும்,
12ம் தேதி மிதமான மழை பெய்யும்
மற்ற
இடங்களில் வறண்ட வானிலை நிலவும். வருகின்ற, 13ம் தேதி ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி,
கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில்,
லேசான மழை பெய்யும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பருவம் தவறிய மழை விவசாயிகளுக்கு எச்சரிக்கை
டெல்டா
மாவட்டங்களில் பருவம் தவறிய மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதால், அறுவடை பணிகளை விரைவாக முடிக்கும்படி,
விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில், 2021 அக்டோபர் முதல், சம்பா பருவ சாகுபடி காலம் துவங்கியது. இப்பருவத்தில், 12 லட்சம் ஏக்கருக்கு மேல் நடவுப்பணிகள் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டன.
நவம்பர் மாதம் வடகிழக்கு பருவ மழை கொட்டி தீர்த்தது. இதனால், மூன்று
லட்சம் ஏக்கர் வரை பயிர்கள் பாதித்தன. இந்த இடர்பாடுகளால், மறு நடவு செய்யும் பணிகளை,
விவசாயிகள் மேற்கொள்ளும் சூழல் ஏற்பட்டது.
சம்பா அறுவடை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மறுநடவு செய்யப்பட்ட பயிர்களின் அறுவடை நடந்து வருகிறது. நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக நெல் கொள்முதல் செய்வது தாமதிக்கிறது. அறுவடை செய்யாமல் பல விவசாயிகள் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. வேளாண் துறையினர் இம்மாதம் பருவம் தவறிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, தகவல் தெரிவித்துள்ளனர்.
எனவே,
இதனால் அறுவடை பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகளுக்கு, வேளாண் துறையினர் வாயிலாக ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
பருவம் தவறி மழை பெய்தால், அதனை பயன்படுத்தி பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடியை
மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும்
படிக்க....
ஒருங்கிணைந்தப் பண்ணை அமைக்க 50 விவசாயிகளுக்கு தலா ரூ. 45,000 மானியம்!
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ரூ.2.37 லட்சம் கோடி ஒதுக்கீடு மத்திய பட்ஜெட்டில் தகவல்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...