தென்னை சாகுபடியில் நோய் மேலாண்மை மற்றும் பூச்சி மேலாண்மை வழி முறைகள்!!


தென்னை சாகுபடியில் நோய் மேலாண்மை மற்றும் பூச்சி மேலாண்மை வழி முறைகள்!!


மதுரை வேளாண் கல்லூரியைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவிகள் பூமிகா, பவதாரணி, பிரியதர்ஷனி, அஸ்வினி,  ஆவணி, பிளஸிஸ் கிஃப்டா, சின்றெல்லா ஆகியோர் அலங்காநல்லூரில் ஊரக பணி அனுபவ பயிற்சி திட்டப் படிப்பின் அடிப்படையில் பயின்று வருகின்றனர்.


அலங்காநல்லூர் வட்டாரம் பாலமேடு பகுதியில் விவசாயிகளுக்கு மாணவிகள் பவதாரணி மற்றும் பூமிகா ஆகியோரால் தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் TNAU தென்னை டானிக் வேர் ஊட்டுதல் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.



 TNAU தேங்காய் டானிக் 


தென்னைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி சீராக்கிகள் கலந்த டானிக். இலைகளின் குளோரோபில் உள்ளடக்கம் மற்றும் பசுமையை அதிகரித்து இலைகளின் ஒளிச்சேர்க்கைத் திறனை மேம்படுத்துகிறது. 


ஆரம்ப நிலையில் பொத்தான்/குரும்பை உதிர்வதைக் குறைக்கிறது. மேலும் பாளைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. மேலும் முக்கியமாக கொட்டைகளின் எண்ணிக்கை மற்றும் அளவை அதிகரிப்பதோடு 20 சதவீதம் வரை விளைச்சல் அதிகரிக்கும். 


மேலும் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சத்து அதிகரிக்கிறது. இது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் அழுத்தங்களை தாங்கும் தன்மை அதிகரிக்கும். தென்னை மரத்தின் தண்டிலிருந்து 3 அடி தூரத்தில் குழி அமைத்து மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிற பென்சில் அளவு அடர்த்தி கொண்ட வேரை தேர்வு செய்யவும். 



அதன் கடைசி பகுதியில் சாய்வான ஒரு வெட்டு தந்து அதன் நுனியை 200 மி.லி. டானிக் இருக்கும் ஒரு பாலித்தீன் பையினால் நுனி படுமாறு வைத்து கட்டி மண்ணை கொண்டு மூட வேண்டும். இதனை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 200 மி.லி. அளவில் வேர் ஊட்டல் செய்து வரலாம்.

 

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை 


தென்னையில் பல வகையான பூச்சி தாக்குதல் ஏற்பட்டாலும் கான்டாமிருக வண்டு, சிவப்பு பனை அந்துபூச்சி, எரியோபயிட் சிலந்தி, ஒத்தை புழு, செதில் பூச்சி ஆகியவை அதிகளவில் சேதாரம் ஏற்படுத்துபவை. இவற்றில் இருந்து தென்னையை பாதுகாக்க ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை தொழில்நுட்பத்தை கடைபிடிக்க வேண்டும்.

 

காண்டாமிருக வண்டு மேலாண்மை


இந்த வண்டுகளின் தாக்கம் ஆண்டு முழுவதும் இருந்தாலும் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அதிகமாக இருக்கும். நடுகுருத்து மட்டையின் இடுக்கில் இந்த வகை வண்டுகள் மடிப்புடன் வெளிவரும் குருத்து மட்டையை கடித்து உண்ணும். 



இந்த மட்டை குருத்தில் இருந்து வெளிவரும் போது விசிறி போல முக்கோணம் அமைப்பில் கத்திரித்து விட்டது போல் காணப்படும். இளங்கன்று தொடர்ந்து இந்த வகை பூச்சிகளால் பாதிக்கப்பட்டால் அந்த கன்று பட்டுபோய் காய்ந்து விடும். 


மேலும் வளர்ந்த மரத்தின் வளர்ச்சியும் குறையும். நடுக்குறுத்தில் இருந்து வெளி வரும் பூங்கொத்தையும் பாதிக்கும். மகசூல் குறையும். இதனை கட்டுப்படுத்த தென்னந்தோப்பில் எருக்குழி இருக்க கூடாது. பட்டுப்போன மரத்தையும் சேதமடைந்த பாகங்களையும் அந்த பகுதியில் இருந்து முழுவதுமாக அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும். 


வண்டுகளின் புழுக்களை பொறுக்கி அழித்து விடவேண்டும். விளக்கு பொறி வைக்கலாம். மெடாரைஜியம் அனிசோப்ளியே என்னும் பூஞ்சையை பயன்படுத்தி இந்த புழுக்களை அழித்து விடலாம். மேலும் 1 கிலோ ஆமணக்கு புண்ணாக்கை 5 லிட்டர் தண்ணிரில் கலந்து வைத்தால் அந்த வாசனைக்கு வரும் வண்டுகளை பிடித்து அழித்து விடலாம். 



குருத்து பகுதியில் வண்டுகள் தென்பட்டால் கூர்மையான கம்பியை கொண்டு குத்தி அழித்து விடலாம். ரைனோலூர் எனப்படும் பெரமோன் பொறியை பயன்படுத்தலாம்.

 

சிவப்பு கூண் வண்டு/சிவப்பு பனை அந்துப்பூச்சி 


2-3 மாதங்களான குரும்பைகளில் வெளிர் மஞ்சள் நிற முக்கோண வடிவ நிறமாற்றங்கள் காணப்படும். பின் பழுப்பு நிறமாக மாறி விழுந்து விடும். நீளவாக்கில் பல சிறிய வெடிப்புகளும் தோன்றுகின்றன. அதன்வழியே பிசின் போன்ற திரவம் வெளிப்படும். 


இதனால் காய்கள் பெருக்காமல் போயிடுவதோடு, அதன் உள்ளே இருக்கும் பருப்பின் கன அளவும் குறைந்து விடும். இதனை தடுக்க மரத்தில் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். 


பாதித்த பனைகளை அப்புறப்படுத்த வேண்டும். இந்த வண்டுகளை அழிக்க அவற்றை கவர 3 லிட்டர் கரும்பு சாறு, 5 கிராம் ஈஸ்ட், 5 மி.லி. அசிட்டிக் அமிலம் இவற்றுடன் நீளவடிவில் வெட்டப்பட்ட இலை மட்டை துண்டுகளை கலந்து ஒரு வாளியில் போட்டு ஏக்கருக்கு 30 என்ற அளவில் வைக்கலாம். பெர்ரோலூர் எனப்படும் பெரமோன் பொறியை பயன்படுத்தலாம். மேலும் அலுமினியம் பாஸ்பைட் மாத்திரைகளை மரத்திற்கு 2 என்ற வீதம் வைத்து மண்ணால் மூடி விடலாம்.

 


எரியோபயிட் சிலந்தி


இவை குரும்பைகளிலும் இளம் காய்களின் தொட்டுக்கு அடியிலும் மிருதுவான திசைகளில் இருந்து சாறை உறிஞ்சும். நீளவாக்கில் பல சின்ன வெடிப்புகள் தோன்றும். இவை பெரும்பாலும் 1 முதல் 9 மாதம் வரையிலான குரும்பைகளை தாக்கக்கூடியது. 


இதன் தாக்கம் கோடைகாலங்களில் அதிகமாக காணப்படும். இவற்றை தடுக்க சேதமடைந்த உதிர்ந்த குரும்பைகளை அழிக்க வேண்டும். இயற்கை பூச்சி விரட்டி கரைசலை பயன்படுத்தலாம். வேப்ப எண்ணெயுடன் பூண்டு கரைசலை படுத்தலாம்.

 

கருந்தலை புழு 


இலைகளின் அடிப்பகுதியில் இருந்தபிது கொண்டு பச்சையம் சுரண்டி உண்ணும். ஓலைகள் காய்ந்து பழுப்பு நிறத்தில் மாறி விடும். மெல்லிய நூலாம் படை கூடுகள் காணப்படும். இவற்றை அழிக்க மிகவும் பாதித்த ஓலைகளை தீயில் இட்டு கொளுத்தி அழிக்க வேண்டும்.

 


செதில் பூச்சி


இவை இலைகளிலும் ஓலைகளிலும் உள்ள சாறை உறிஞ்சி மஞ்சள் ஆகி நாளடைவில் காய்ந்து விடும். 30 மி.லி. இவற்றை கட்டுப்படுத்த வேப்பெண்ணையை 1 லிட்டர் நீரில் கலந்து தெளித்து வரலாம்.


தற்போது உள்ள சூழலில் தென்னையில் அதிகம் பிரச்சனை தர கூடிய பூச்சியாக இருப்பது ரூகோஸ் சூழல் வேலை ஈ. இவை இலைகளின் அடிபகுதியில் இருந்து கொண்டு சாறை உறிஞ்சும். 3 சதவீதம் வேப்ப எண்ணெய் தெளிக்கலாம். மஞ்சள் ஓட்டும் பொறிகளை வைக்கலாம். 


இதுமட்டும் இல்லாமல் என்கார்சியா ஹைட்டியர்சிஸ் போன்ற ஒட்டுண்ணிகள் மற்றும் கிரிப்டோலேமஸ் மாண்ட்ரூசியேரி போன்ற வேட்டை ஆடும் பூச்சிகளை பயன்படுத்தி அழிக்கலாம்.

 


மேலும் எலி, அணில் போன்றவற்றால் மகசூல் குறைகிறது. எலி பொறி போன்றவற்றை பயன்படுத்தலாம். அலுமினியம் பாஸ்பைட் மாத்திரைகளை மரத்திற்கு 2 என்ற வீதம் ஓட்டைகளில் வைத்து மண்ணை கொண்டு மூடவும்  இவற்றை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.

 

இது போன்ற ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழிமுறைகளை பின்பற்றி பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதோடு தென்னை வளர்ச்சியையும் மகசூலையும் அதிகரிக்கலாம்.


மேலும் படிக்க....


நெல்லில் குட்டைப்புல் நோய்ப் பரவும் விதமும், பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்!!


உளுந்து குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூபாய் 63 நிர்ணயம்! நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி செய்துடுவீர்!!


நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய இணையதளம் வாயிலாக முன்பதிவு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments