நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய இணையதளம் வாயிலாக முன்பதிவு!!
விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 2021-22ல் நெற்பயிரானது கார் பருவத்தில் ,1035 ஹெக்டேர் பரப்பிலும் சம்பா பருவத்தில் 21,487 ஹெக்டேர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டு சம்பா பருவ நெற்பயிரானது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
29 நெல் கொள்முதல் நிலையங்கள்
விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வாயிலாக தற்போது 29 நெல் கொள்முதல் நிலையங்கள் வத்திராயிருப்பு, இராஜபாளையம், காரியாபட்டி மற்றும் திருச்சுழி வட்டங்களில் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ளது.
எளிய முறையில் முன் பதிவு
விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்த நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய விவசாயிகளின் விபரங்களை www.tncsc.tn.gov.in அல்லது www.tncsc-edpc.in-ல் எளிய முறையில் முன் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் உள்ள உழவர் உள்நுழைவு பகுதியில் விவசாயிகள் கைபேசி எண்ணை பதிவு செய்து கடவுச்சொல் (OTP) உள்ளீடு செய்ய வேண்டும் பிறகு தோன்றும் திரையில் விவசாயியின் பெயர், ஆதார் எண், நிலத்தின் வகை, சர்வே எண், அடங்கல், நில இருப்பிட விபரம், நெல்லின் வகை, எதிர்பார்க்கப்படும் மகசூல், விற்பனை செய்ய விரும்பும் தேதி, உழவரின் வங்கிக் கணக்கு எண் போன்ற விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
விவசாயிகள் பதிவு
செய்த விபரங்களை அந்தந்த கிராம நிர்வாக அலுவலரால் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல்
அளிக்கப்படும் பிறகு கொள்முதல் செய்யப்படும் நிலையம், தேதி மற்றும் நேரம் ஆகிய விபரங்கள்
விவசாயிகளின் கைபேசிக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டு அதன்படி கொள்முதல் செய்யப்படும்.
நெல் கொள்முதல் விற்பனை விலை
நெல் விற்பனைநிலைய விலையானது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் சன்ன இரகம் குவிண்டாலுக்கு ரூ.2060/- எனவும், பொது இரகம் குவிண்டாலுக்கு ரூ.2015/- எனவும் தற்பொழுது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இணைய தளத்தில் பதிவு செய்த விண்ணப்பத்திற்கு ஒப்புதல் கிடைக்கப் பெற்றவுடன் தங்களது நெல்லை சிப்பம் 40 கிலோ நெல் மூட்டைகளாக அதிகபட்சம் ஒரு நாளைக்கு 250 மூட்டைகள் வரை விற்று பயன் பெறலாம்.
இம்மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 06.02.2022 வரை 6964.24 மெட்ரிக் டன் (1,74,106 மூட்டை) நெல் 1350 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எனவே வியாபாரிகளிடம் விற்பனை செய்வதைத் தடுத்து விவசாயிகள் மட்டுமே பயன்பெறும் நோக்கில் தற்போது இணைய வழியாக நெல் கொள்முதலுக்கு முன்பதிவு செய்யும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு
விருதுநகர் மாவட்ட விவசாயிகள் விரைந்து முன்பதிவு செய்து இச்சேவையினைப் பயன்படுத்தி சாகுபடி செய்த நெல்லை விற்பனை செய்து அதிக இலாபம் பெற்றுப் பயனடையுமாறும், மேலும் நேரடி நெல் கொள்முதல் தொடர்பாக மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விருதுநகர்.
தொடர்பு எண்: 94421 32016-ல் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும்
படிக்க....
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...