வேளாண்
இ-வாடகை நடவு இயந்திரங்கள் மற்றும் அறுவடைக்கு தேவையான டிராக்டர் இயந்திரங்களுக்கு
எவ்வாறு விண்ணப்பிப்பது?
வேளாண்மைப்
பொறியியல் துறையின் மூலமாக விவசாயிகள் பயன்பெறும் வகையில், நடவு இயந்திரங்கள் மற்றும்
அறுவடைக்கு தேவையான டிராக்டர் போன்றவை வாடகைக்கு வழங்கப்படும்.
வேளாண்
இயந்திரங்களை, விவசாயிகள் வீட்டிலிருந்தபடியே மிக சுலபமாக முன்பதிவு செய்துகொள்ளும்
வகையில் இ-வாடகை ஆன்லைன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை எவ்வாறு விண்ணப்பிக்கலாம்
என்ற, கூடுதல் விபரங்களை, இந்த பதிவில் பார்க்கலாம்.
இ-வாடகை
விண்ணப்பிக்கும் முறை
இ-வாடகைத்
திட்டத்தில் குறைந்த கட்டணத்தில், விவசாயிகள் பயன்பெற விரும்பினால் இயந்திரங்களைப்
பெற முன்பதிவு செய்திருக்க வேண்டும். விவசாயிகளின் அலைச்சலைத் தவிர்க்கும் வகையில்
வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு,
முதலில் 'உழவன்' செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில், முகப்பு பக்கத்தில் “வேளாண்
இயந்திரம் வாடகை மையம்” என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். தொடர்ந்து, “வேளாண் பொறியியல்
துறை இயந்திரங்கள் வாடகைக்கு” என்பதையும், தேர்ந்தெடுக்க வேண்டும் அதன் பிறகு “முன்பதிவு”
என்பதையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதையடுத்து
வேளாண் இயந்திரங்கள் வாடகை விபரம் இப்பொழுது திரையில் தோன்றும். அதனை தேர்வு செய்ய
வேண்டும், வேளாண் பணிக்கான இடத்தின் மாவட்டம், வட்டம், வட்டாரம், கிராமம், முகவரி,
நிலத்தின் புல எண், தேவைப்படும் தேதி, நேரம் ஆகிய விபரங்களைக் மிக சரியாக பூர்த்தி
செய்ய வேண்டும்.
இதையடுத்து திரையில் தேவைப்படும் இயந்திரங்களின் பட்டியல், காண்பிக்கப்படும். அதில், நமக்கு தேவைப்படும் இயந்திரத்தை தேர்வு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு தேவைப்படும் கால அளவிற்கு ஏற்ப வாடகை கட்டணம் விவரம் திரையில் தோன்றும்.
பின்னர், வாடகைக்கான நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளித்து, முன்பதிவை உறுதி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடதக்கது. முன்பதிவு விபரத்தினை சரிபார்த்த பின்னர், 'பணத்தை செலுத்துக' என்கிற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். அதில், எவ்விதமாக கட்டணம் செலுத்த வேண்டும்,
அதாவது நெட் பேங்கிங், கிரடிட் கார்டு மூலம் வாடகைக்
கட்டணத்தை செலுத்த வேண்டும். இதையடுத்து முன்பதிவிற்கான ஒப்புகைச் சீட்டை பதிவிறக்கம்
செய்து கொள்ள வேண்டியது, அவசியம். இவை அனைத்தையும் பூர்த்தி செய்த பின், நாம் தேர்வு
செய்த நாளில், தேர்வு செய்த பணியிடத்திற்கு இயந்திரம் அனுப்பப்படும்.
இ-வாடகை
செயலி விவரம்
இதனை
முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். இ-வாடகை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது, இ-வாடகை ஆன்லைன் செயலியின் மூலம், வேளாண்மைப் பொறியியல் துறையின்
அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை விவசாயிகள் உடனுக்குடன் தெரிந்து கொண்டு பயன்பெற முடியும்.
இதுதவிர, விவசாயப் பெருமக்கள், தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை இச்செயலியின் மூலம் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண் அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
படிக்க....
நெல் தரிசில் பயறு வகை சாகுபடி செய்ய 50% மானியத்தில் வேளாண் இடுபொருள்கள் விநியோகம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...