கால்நடை விவசாயிகளுக்கு உதவும் புதிய கைபேசி செயலி! கால்நடைகளுக்கு காப்பீடும் பெறலாம்!!
கால்நடை
விவசாயிகளுக்கு உதவும் புதிய கைபேசி செயலி
நமது நாட்டில் 300 மில்லியன் அளவிற்கு கால்நடைகள் உள்ளன. இவற்றின் உரிமையாளர்கள் 90 சதவீதம் பேர் சிறு மற்றும் குறு விவசாயிகள் மட்டுமே. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ள இந்தப் பிரிவினர் பலர் படிக்காத விவசாயிகளே ஆவர், மேலும் போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத கிராமப் புறங்களில் வசிப்பவர்களாகவும் இருகின்றனர்.
இத்தகைய நடைமுறைச் சிக்கலில் சிறு மற்றும் குறு கால்நடை விவசாயிகளுக்கு உதவும் வகையில், கால்நடை பண்ணையை திறம்பட எளிதாக நிர்வாகம் செய்யவும் அவர்களுக்கு உதவும் வகையில் ஒரு புதிய கால்நடை செயலி உருவாக்கப்பட்டுள்ளது,
பல சிறு மற்றும் குறு விவசாயிகளின் நடைமுறை பிரச்சனைக்குரிய தீர்வுகளை உடனடியாக வழங்க, வளம் பெற்றுத் தரும் புதிய கால்நடை செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இப்புதிய கால்நடை செயலி ‘Dvara surabhi Index (DSI)’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இந்த செயலியை
தங்களின் ஆண்ட்ராயிட் கைபேசிகளில் பதிவு இறக்கம் செய்து கொண்டு கால்நடை விவசாயிகள் தங்கள்
கால்நடைகளின் புகைப்படங்களை இந்த செயலியில் பதிவேற்றம் செய்த சில நொடிகளில் அவர்கள் கால்நடைகளின்
பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படும்.
சென்ற வருடம் ஜூலை 2021 முதல் இயங்கி வரும் இந்த கால்நடை செயலியை நாடு முழுவதும் உள்ள 55,000 இக்கும் மேல் கால்நடை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இலவசமாக கால்நடை விவசாயிகளுக்கு இந்த கால்நடை செயலி தனது சேவைகளை வழங்கி வருகிறது.
கால்நடைகளுக்கு காப்பீடு பெறுவது
பல கால்நடை விவசாயிகள் தங்கள் கால்நடைகளின் உடல் நலம், அவற்றிற்கு வழங்கும் தீவனத்தின் அளவு மற்றும் தன்மை, கால்நடைகளுக்கு காப்பீடு பெறுவது, கால்நடை விவசாயிகளின் நிதி தேவைகளை சந்திக்க உதவுவது மற்றும் கால்நடை பண்ணை மேலாண்மை தீர்வுகள்,
புதிய கால்நடைகளை விலைக்கு வாங்கும்போது அவற்றுக்கு வழங்கும் கால்நடை
தீவனத்தை மேலாண்மை செய்ய உதவுவது போன்ற பல சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த புதிய கைபேசி செயலியை உருவாக்கியுள்ள “Dvara E-Dairy solution” என்ற சென்னையைத் தலைமையிடமாகக்
கொண்டு இயங்குகிறது. வேளாண் நிதி தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனம் நமது நாட்டின் சிறு மற்றும்
குறு விவசாயிகளுக்கு தனது தொழில்நுட்ப ரீதியான விரிவாக்க சேவைகள் வாயிலாக பொருளாதார
ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அதிகாரம் பெற பெரிதும் துணை புரிந்து வருகிறது.
நடைமுறை பிரச்சனைகள்
தமிழகம்
மற்றும் புதுச்சேரி கால்நடை விவசாயிகள் இந்த புதிய கால்நடை செயலியை பயன்படுத்தி தங்கள்
கால்நடை வளர்ப்பு, தீவன மேலாண்மை மற்றும் பண்ணை நிர்வாகத்தில் செயல்படுத்தி தங்களின்
நடைமுறை பிரச்சனைகள், தேவைகளை சந்தித்து குறைந்த காலத்தில் அதிக லாபம் பெறலாம்.
தகவல் வெளியீடு
முனைவர் தி.ராஜ் பிரவின், இணைப் பேராசிரியர், வேளாண் விரிவாக்கத்துறை, அண்ணாமலைப்
பல்கலைக்கழகம்.
மேலும்
படிக்க....
ஆடு வளர்ப்பதால் கிடைக்கும் பயன்கள் மற்றும் ஆடுகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!!
கால்நடைகளுக்கு உலர்புல் மற்றும் கலப்பு வகை உலர்புல் தயாரிக்கும் முறைகள்! முழு விபரம் இதோ!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...