நெல் தரிசில் பயறு வகை சாகுபடி செய்ய 50 சத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள் விநியோகம்!!
சம்பா தாளடி அறுவடை
மாவட்டம் முழுவதும் சம்பா தாளடி அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது .நிறைவான இந்த சூழலை உழவர் பெருமக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் .
நடப்பு சம்பா பருவத்தில் மாநிலத்தில்
சுமார் 35 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது முழுவீச்சில்
அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன அறுவடை நிறைவடைவதற்கு முன் எஞ்சிய ஈரப்பதத்தை பயன்படுத்தி
பயறு வகைகள் சாகுபடியை முன்னெடுக்கலாம் .
நெல் அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்னர் ஏக்கருக்கு 10 கிலோ அளவில் உளுந்து பாசிப் பயறு போன்ற பயறு வகை விதைகளை தூவினால் இரண்டு மாத காலத்தில் ஏக்கருக்கு 300 முதல் 350 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
பயறு வகைகளை சாகுபடி செய்வதால் காற்றின் தழைச்சத்து மண்ணில் நிலைநிறுத்தப்படும். அதோடு பயிர் சுழற்சியால் தொடர்ச்சியாக சாகுபடி செய்யப்படும் பயிருக்குத் தேவைப்படும் உரஅளவு வெகுவாக குறைகிறது.
எனவே நெல் தரிசில் பயறு வகை சாகுபடியை முன்னெடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தின் உணவு உற்பத்தியை அதிகரிக்குமாறு மதுக்கூர் வட்டார உழவர் பெருமக்களை தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் இணை இயக்குனர் விவசாயிகளை கேட்டுக்கொண்டார்.
மேலும் விவசாயிகளுக்கு தேவையான ஆடுதுறை 5 மற்றும் வம்பன் 8 ரகங்கள் மதுக்கூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு ஒரு கிலோவுக்கு ரூபாய் 48 என்ற மானியத்தில் ஒரு ஆதார் கார்டுக்கு எட்டு கிலோ வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
பயறு வகை உற்பத்தியை அதிகரிக்க தேவையான ரைசோபியம் பாஸ்போ பாக்டீரியா போன்ற நுண்ணுயிர் உரங்களும் பயறு வகைநுண் சத்தும் 50 சத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது விவசாயிகள் காலத்தே இவற்றை வேளாண் விரிவாக்க மையங்களில் மானியத்தில் பெற்று குறைந்த செலவில் அதிக லாபமும் அதிக மண் வளமும் பெற வேளாண்மை இணை இயக்குனர் தஞ்சாவூர் ஜஸ்டின் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
மேலும் ஒலயகுன்னம் கிராமத்தில் தாளடி உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களையும் ஆய்வு செய்த பின்னர் வேளாண் துறை அலுவலர்கள் விவசாயிகளுக்கு ஏற்ற நேரத்தில் தொழில்நுட்பங்களையும் மானியத் திட்டங்களையும் சென்றடையும் வகையில் பணிபுரிய கேட்டுக்கொண்டார்.
வேளாண் உதவி அலுவலர் முருகேஷ்
வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி மற்றும் அட்மா திட்ட சுகிர்தா ஆகியோர் கள ஆய்வின்போது
உடனிருந்தனர்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை இணை இயக்குனர், மதுக்கூர்,
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும்
படிக்க....
தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் மண்நலம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...