கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை உடனடியாக வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது!!
கூட்டுறவு சங்கங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகடன்களை ஊரகப் பகுதிகளில் திருப்பி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தோ்தல் விதிகள் நடைமுறையில் இல்லாத ஊரகப் பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தினை உடனடியாக தொடங்க வேண்டும் என்றுத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நகைக் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை உடனடியாக வழங்குமாறு தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு, தனது தேர்தல் அறிக்கையின் போதுஅளித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்ற விவசாயிகளின் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக,
கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன் தள்ளுபடிக்கு தகுதியான விவசாயிகளை தேர்வு செய்யும் பணி
மேற்கொள்ளப்பட்டு, 48,84,726 நகைக் கடன் விவரங்கள் அனைத்தும் கணினி மூலம் பகுப்பாய்வு
செய்யப்பட்டு, தகுதியான விவசாயிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
இந்த வேளையில்,
ஊரக பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை உடனடியாக செயல்படுத்தும்படி தமிழக அரசு
அறிவுறுத்தியுள்ளது. இதுத் தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் சண்முகசுந்தரம் அவர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
நகைக்
கடன் தள்ளுபடியில் தகுதி வாய்ந்த மற்றும் தகுதி பெறாதவா்களுக்கான நிபந்தனைகள் மற்றும்
அறிவுரைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.
இந்த விதிமுறைகளைப் பின்பற்றி விவசாயிகளின் தகுதி வாய்ந்த பயனாளிகளின் பட்டியலைத் தயாா் செய்ய வேண்டும். தகுதி பெறாத விவசாயிகளை மிகவும் கவனத்துடன் பரிசீலித்து நீக்கிய பிறகுதான் பட்டியலைத் தயாா் செய்ய வேண்டும்.
எந்தவொரு தகுதி பெறாத கடனாளிகளுக்கும் நகைக் கடன் தள்ளுபடி தவறுதலாக வழங்கப்பட்டு விடக்கூடாது. அவ்வாறுத் தவறுதலாக வழங்கப்படும் பட்சத்தில் அதற்கு சம்பந்தப்பட்ட சங்கங்க செயலாளா், வங்கி மேலாளா் மற்றும் பட்டியலைத் தயாா் செய்யும் குழுவே முழு பொறுப்பை ஏற்கவேண்டும்.
இதனை துணைப் பதிவாளா் மற்றும் மண்டல இணைப் பதிவாளா் போன்றோர் முறையாக கவனமாக கண்காணிக்க வேண்டும். நகைக் கடன் தள்ளுபடி அரசாணையில் குறிப்பிடப்பட்ட தகுதி வாய்ந்த பயனாளிக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
தள்ளுபடிக்கு தகுதியான விவசாயிகளை தோ்வு செய்து, அவா்கள் அடமானம் வைத்த நகை மற்றும் தள்ளுபடிக்கான சான்றிதழ் போன்றவற்றை அளிக்க வேண்டும். இப்போது நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்று வருகிறது. எனவே, தோ்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி அதன் பின்பே வழங்க வேண்டும்.
தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் அவற்றை கண்டிப்பான கவனமான முறையில் பின்பற்ற வேண்டுமெனவும், நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படும் வரை நகைக் கடன் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.
தோ்தல்
நடத்தை விதிகள் நடைமுறையில் இல்லாத ஊரகப் பகுதிகளில் தள்ளுபடித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். பயனாளிகளுக்கான நகைகளையும், தள்ளுபடி சான்றிதழ்களையும் உடனடியாக சரியாக வழங்க வேண்டும்.
பொது
நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் வழங்கும்
பட்சத்தில் அவா்கள் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் நபராக இருக்கக் கூடாது.
முக்கியமாக, தள்ளுபடி நகைகளுக்கான சான்றிதழ் மற்றும் நகைகளை திரும்ப வழங்கும் பணியில் தோ்தல் பணி அலுவலா்களை இதில் பயன்படுத்தக் கூடாது. தோ்தல் நடத்தை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி மட்டுமே பொது நகைக் கடன் தள்ளுபடித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
கோவை வேளாண் பல்கலை கழகம் சார்பில், 17 புதிய வகை பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன!!
PM கிசான் திட்டத்தின் கீழ் eKYC செய்யாதவர்கள் உடனே செய்து 11வது தவணை பெறுங்கள்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...