5000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கன மழையினால் பாதிப்பு! வேதனையில் விவசாயிள்!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில், சில தினங்களாக கொட்டிய கன மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் விளைநிலங்களில் சாய்ந்து மூழ்கி, முளைக்க துவங்கி உள்ளதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 1.57 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடத்துள்ளது. நெற்பயிரின் கதிர்கள் முற்றிய நிலையில், ஊடுபயிராக உளுந்து, பச்சை பயறு விதைகளை தெளித்து, அவை இளம் பயிராக வளர்ந்துள்ளன. கடந்த மாதம் துவங்கிய அறுவடை பணிகள், 40 சதவீதம் மட்டுமே நடைபெற்றுள்ளன.
இயந்திரங்கள் மூலமாக, விவசாயிகள் முழு வீச்சில் அறுவடை செய்து வரும் நிலையில், சில தினங்களாக பரவலாக கொட்டிய கன மழையினால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பருவம் தவறிய மழை காரணமாக, நாகை, கீழ்வேளூர், திருமருகல் ஒன்றியங்களில் 5,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் விளை நிலங்களில் சாய்ந்து நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
சங்கமங்கலம் கிராமத்தில், விளை நிலங்களில் மூழ்கிய நெற்கதிர்கள் முளை விட்டுள்ளன. மேலும், ஊடுபயிராக சாகுபடி செய்த உளுந்து, இளம் பயிராக துளிர் விட்டுள்ள நிலையில், தேங்கியுள்ள மழை நீரில் மூழ்கி அழுகி வருகிறது என்பது, விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
விவசாயியான விஜயகுமார் கூறியதாவது, கடந்த செப்டம்பர் மாதம், நேரடி விதைப்பு வாயிலாக சாகுபடி செய்துவந்தோம். ஐந்து மாதங்களாக இரவு, பகல் பாராமல், குழந்தையை வளர்ப்பது போல பயிர்களை பாதுகாத்து வந்தோம், அறுவடை நேரத்தில் இயற்கை எங்களை சோதித்து விட்டது என்றார்.
இன்னும் இரண்டொரு நாளில் அறுவடை செய்ய இருந்தோம். ஊடு பயிராக ஒரு ஏக்கருக்கு 10 கிலோ உளுந்து தெளித்தோம். வறட்சி பயிறு வகைகளான உளுந்து போன்றவை தான் விவசாயிகளை காப்பாற்றும். தற்போது அதுவும் அழுகி விட்டது. வட்டிக்கு கடன் வாங்கி, சம்பா பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து இருக்கிறோம்.
பயிர்களின் அறுவடையில் கிடைக்கும் வருமானத்தில்தான், விவசாய குடும்பங்களில் பல்வேறு சுப காரியங்கள் நடக்கும். வாங்கிய கடன்களையும் திருப்பி கொடுப்போம். நாங்கள் தற்பொழுது மிகவும் வருத்தத்தில் உள்ளோம்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல. செய்வதறியாது நிலையில் உருகுலைந்துளோம். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டுமெனவும், விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமெனவும் அவர் கூறினார்.
மேலும்
படிக்க....
கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை உடனடியாக வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது!!
பயறு வகைப் பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் தாக்கம் மற்றும் மேலாண்மை முறைகள்!!
PM கிசான் திட்டத்தின் கீழ் eKYC செய்யாதவர்கள் உடனே செய்து 11வது தவணை பெறுங்கள்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...