விவசாயத்தில் மண்வளம் மிகவும் இன்றியமையாதது! பயறு வகை பயிரிட்டு மண்வளம் காக்கலாம்!!



விவசாயத்தில் மண்வளம் மிகவும் இன்றியமையாதது! பயறு வகை பயிரிட்டு மண்வளம் காக்கலாம்!!


பயறு வகை பயிரிட்டு மண்வளம் காக்கலாம்


சிவகங்கை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அ.வளர்மதி வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, நெல் சாகுபடியினை தொடர்ந்து பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்து அதிக மகசூலும், அதிக வருமானமும் பெறுவதோடு மண் வளமும் பாதுகாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

 

விவசாயத்தில் மண்வளம் மிகவும் இன்றியமையாதது. மண்ணிலுள்ள 16 வகையான சத்துகள் பயிர் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றில் முதன்மையான கரிமச்சத்தினை தொழுஉரம் இட்டு மண்வளம் காக்க வேண்டும். தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்கள் முதல்நிலை சத்துக்களாகும். இவைகள் முறையே யூரியா, சிங்கிள் சூப்பர் பாஸ்பேட், மூரேட் ஆப் பொட்டாஸ் ஆகிய உரங்கள் இடுவதால் இவைகளின் பற்றாக்குறை சரிசெய்யப்படுகிறது. 



இரண்டாம் நிலை சத்துகளான கால்சியம், மெக்னீசியம் மற்றும் சல்பர் ஆகியவை பேரூட்டச் சத்துக்களாகும். நுண்ணூட்ட சத்துகளான இரும்பு, ஜிங்க், மாங்கனீசு, காப்பர், போரான், குளோரின், மாலிப்டினம் ஆகியன மிகவும் குறைவான அளவுகளில் தேவைப்படுபவை. 


இருப்பினும் பயிரின் வளர்ச்சி, பூச்சி நோய் எதிர்ப்புதிறன், அதிக மகசூல் போன்ற காரணிகளுக்கு அடிப்படையான சத்துக்களாகும். கலப்பு உரங்கள், ஜிப்சம் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் இடுவதன் மூலம் பேரூட்டம் மற்றும் நுண்ணூட்ட சத்துக்களின் குறைபாட்டினை சரி செய்யலாம்.

 

நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தற்சமயம் அறுவடை நிலையில் உள்ள நெல்லினை அறுவடை செய்யும் முன் அல்லது அறுவடையின் போதே கூட பயறு வகை பயிர்களை விதைக்கலாம். 



இதன் மூலம் பாசன நீரின் தேவை குறைவதோடு நெல் சாகுபடிக்கென இடப்பட்ட உரங்களை பயன்படுத்தி பயறு வகை பயிர்களான தட்டை பயறு, பாசி பயறு மற்றும் உளுந்து ஆகியன நன்கு வளரும். பயறு வகை பயிர்களின் வேர் முடிச்சுகளில் உள்ள பாக்டீரியங்கள் காற்றிலுள்ள தழைச்சத்தினை ஈர்த்து மண்ணில் நிலை நிறுத்தும் தன்மையுடையவை. 


ஆகவே பயிர் வளர்ச்சியின் போதே மண்ணில் நைட்ரஜன் சத்தினை மண்ணில் நிலைநிறுத்துவதால் மண்ணின் வளம் அதிகரிப்பதோடு பயிருக்கு இடவேண்டிய உரச் செலவு குறைக்கப்படுகிறது. மேலும் களைஎடுக்கும் பணி மற்றும் உழவுப்பணி செய்ய வேண்டிய செலவு மற்றும் நேரம் மிச்சப்படும்.

 

பயறு வகை பயிர்களுக்கு பூக்கும் தருணத்தில் 2 சத டிஏபி கரைசல் தெளிப்பதன் மூலம் திரட்சியான, அதிக எண்ணிக்கையிலான காய் பிடிப்பும் இருக்கும். அதற்கு 4 கிலோ டிஏபியினை 20 லிட்டர் தண்ணீரில் ஊர வைக்கவேண்டும். 



மறுநாள் வடிகட்டி, வடிநீரினை 180 லிட்டருக்கு கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்க வேண்டும். மேலும் வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடைக்கும் பயறு நுண்ணூட்டத்தினை ஏக்கருக்கு 5கிலோ வீதம் இடுவதால் சீரான வளர்ச்சி, அதிகமான பூக்கும் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது.

 

எனவே விவசாயிகள் நெல் சாகுபடியினை தொடர்ந்து பாசன நீரின் இருப்பை கொண்டு பயறு வகை பயிர்களை சாகுபடி செய்து கூடுதல் வருமானம் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


மேலும் படிக்க....


விவசாயிகளுக்கு உழவு பணியை மேற்கொள்ள ஒரு ஏக்கருக்கு ரூ.400 என வாடகை நிர்ணயம்!!


5000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கன மழையினால் பாதிப்பு! வேதனையில் விவசாயிள்!!


கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை உடனடியாக வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments