அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் மானியத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம்!!
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட செயலாக்க குழு கூட்டம் வாடிய காடு கிராமத்தில் நடைபெற்றது அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள விக்ரமம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வாடிய காடு கிராமத்தில் கிராம அளவிலான திட்ட செயலாக்க குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.
கிராம திட்ட செயலாக்க குழுவானது கிராம ஊராட்சி மன்ற தலைவர் அவர்களை தலைவராகவும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் மற்றும் சுய உதவி குழுவின் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக கொண்டும் வேளாண்மை துறை உட்பட்ட 16 துறைகளின் அதிகாரிகளை உள்ளடக்கியும் இக்குழு உருவாக்கப்பட்டது.
ஒருங்கிணைப்பு அலுவலராக வேளாண் துறை உள்ளது இதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் விக்ரமம் ஊராட்சி மன்றதுணைதலைவர் பிச்சைமணி, காளிதாஸ் அன்பழகன், பெரமையன், சங்கர வடிவேல் வீரபாண்டியன், வருண்குமார் மற்றும் மகளிர், ஆண் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி வேளாண் அலுவலர் சாந்தி மற்றும் வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் ஆகியோர் வேளாண்துறை சார்பில் கலந்து கொண்டனர்.
வேளாண் உதவி இயக்குனர் கிராமத்தின் அடிப்படை விபரங்கள் மற்றும் அனைத்து விவசாயிகளின் அடிப்படை விபரங்களை சேகரிப்பதற்கான படிவங்களை விவசாயிகள் பதிவு செய்வதற்கான முறைகளைப் பற்றி எடுத்துக் கூறினார் வேளாண் அலுவலர் சாந்தி வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து மானியத் திட்டங்கள் பற்றி செயலாக்க குழு கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் வேளாண் துறையின் திட்டங்களில் அனைத்து கிராமஅண்ணா மறுமலர்ச்சி திட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது பற்றி எடுத்துக் கூறினார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கைத்தெளிப்பான் கள் மற்றும் உளுந்து விதைகள் தென்னங்கன்றுகள் மற்றும் பவர் டில்லர்கள் மற்றும் கடப்பாறை மண்வெட்டி போன்றவை விவசாயிகளுக்கு அதிக அளவில் தேவைபடுவதாக தெரிவித்துள்ளனர்.
கிராம அளவு தேவையாக வாடிய காடு பொது குளத்தினை தூய்மை செய்து கரை உயர்த்தித் தரவும், முன்பே கட்டி தரப்பட்டு சிதிலம் அடைந்துள்ள நிலையில் உள்ள களங்களை சீர்படுத்தி தரவும் கிராம சாலைகள் அமைத்து விடவும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தடங்கலின்றி வழங்கிடவும் கேட்டுக்கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்காத விடுபட்ட விவசாயிகள் பஞ்சாயத்து அலுவலகத்தில் படிவத்தைப் பெற்றுக் கொண்டு தங்களுடைய தேவையான அடிப்படை விவரங்களை உரிய ஆவணங்களுடன் வரும் வெள்ளிக்கிழமைக்குள் வழங்கிட வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டார். கூட்டம் வாடிய காடு அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இன்றைய தினம் கூட்டத்தில் திருச்சி தோட்டக்கலை கல்லூரி சேர்ந்த 6 மாணவிகள் ஓவியா, பவித்ரா, ரவீனா, பூஜா உள்ளிட்ட மாணவிகள் கலந்துகொண்டு தென்னை மரங்களில் ஊடுபயிராக காய்கறிகள் வளர்ப்பது பற்றியும் பழத்தோட்டங்கள் அமைப்பதின் முக்கியத்துவம் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை இணை இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
விவசாயத்தில் மண்வளம் மிகவும் இன்றியமையாதது! பயறு வகை பயிரிட்டு மண்வளம் காக்கலாம்!!
விவசாயிகளுக்கு உழவு பணியை மேற்கொள்ள ஒரு ஏக்கருக்கு ரூ.400 என வாடகை நிர்ணயம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...