Random Posts

Header Ads

விவசாயிகளுக்கு உழவு பணியை மேற்கொள்ள ஒரு ஏக்கருக்கு ரூ.400 என வாடகை நிர்ணயம்!!



விவசாயிகளுக்கு உழவு பணியை மேற்கொள்ள ஒரு ஏக்கருக்கு ரூ.400 என வாடகை நிர்ணயம்!!


விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மானாவாரி, கிணறு மற்றும் குளத்துப் பாசன விவசாயத்தில், நில உழவுப் பணியிலிருந்து அறுவடை வரையிலான பணிகளை இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் வகையில் வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்படுகிறது. 


விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையில் உழுவை இயந்திரம் 8 எண்களும், மண் தள்ளும் இயந்திரம் 2, ஜெசிபி இயந்திரம் 2, பொக்லைன் இயந்திரம் 1, தேங்காய் பறிக்கும் இயந்திரம் 1 எண்ணும் என்றளவில் அரசு நிர்ணயம் செய்த குறைந்த வாடகையில் வாடகைக்கு விடப்பட்டு வருகின்றது.

 


உழுவை இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/-க்கும், மண் தள்ளும் இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.970/-க்கும், ஜெசிபி இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.760/-க்கும், பொக்லைன் இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1660/-க்கும், தேங்காய் பறிக்கும் இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.650/-க்கும் (எரி பொருள் மற்றும் ஓட்டுநர் செலவு உட்பட) விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. 


மேலும் உழுவை இயந்திரங்களில் இணைப்பு கருவிகளாக, 2 சட்டிக் கலப்பை, 5 கொலுக் கலப்பை, 9 கொலுக் கலப்பை, சுழல் கொத்துக் கலப்பை, சோளத்தட்டை அறுவடை கருவி, நேரடி விதை விதைக்கும் கருவி, தென்னை தோகைகளை துகள்களாக்கும் கருவி, வாய்க்கால் வெட்டும் கருவி, வைக்கோல் வாரி, வைக்கோல் கட்டும் இயந்திரம் என பல்வேறு புதிய புதுமையான தொழில்நுட்பக் கருவிகளும், டிராக்டருடன் சேர்த்து ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- என்கிற குறைந்த வாடகையில் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.



விவசாயிகள் நேரடியாக உழவன் செயலி மற்றும் E-வாடகை செயலியினை பயன்படுத்தி தங்களுக்கு தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான வாடகையினை முன்பணமாக அதிகபட்சம் 20 மணி நேரத்திற்கு வங்கி அட்டை பரிவர்த்தனை மூலம் செலுத்தி பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 


சிறு பாசன திட்டத்தில் ஒரு பணியிடத்திற்கு ரூ.500/-க்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு நிலத்தடி நீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 


விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியரகம், விருதுநகர், திருவில்லிப்புத்தூர், இராஜபாளையம், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை மற்றும் சாத்தூர், 


வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, VPMM கல்லூரி எதிரில், திருவில்லிப்புத்தூர், தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க....


PM Kisan விதிகளில் மாற்றம் 11வது தவணை இனி இறந்த விவசாயிகளின் பெயரில் கிடைக்காது!!


3 ஏக்கா் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு மின்மோட்டார் வாங்க ரூ.10,000 மானியம்!!


உளுந்து குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூபாய் 63 நிர்ணயம்! நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி செய்துடுவீர்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments