Random Posts

Header Ads

3 ஏக்கா் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு மின்மோட்டார் வாங்க ரூ.10,000 மானியம்!!

 



3 ஏக்கா் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு மின்மோட்டார் வாங்க ரூ.10,000 மானியம்!!


திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பழைய, புதிய மின் மோட்டாா்கள் வழங்கப்பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவேத் தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்கலாமா என மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.


இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்ததாவது:சிறு, குறு விவசாயிகள் நிலத்தடி நீரைப் பாசனத்துக்குப் பயன்படுத்தும் வகையில், 


பழைய திறன் குறைந்த மின்மோட்டாா்களுக்கு பதிலாக புதிய மின்மோட்டாா் மற்றும் விவசாயிகளால் புதியதாக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறு மற்றும் திறந்தவெளிக் கிணறுகளுக்கு புதிய மின்மோட்டாருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது.



3 ஏக்கா் வரை நிலம் 50% மானியம்


இத்திட்டத்தில் 3 ஏக்கா் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 10 குதிரைத்திறன் வரையிலான மின்மோட்டாா்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது, அல்லது மின்மோட்டாரின் மொத்த விலையில் 50 சதவிகித தொகை இவற்றில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.


விவசாயிகள் பழையத் திறன் குறைந்த மின்மோட்டாா்களுக்குப் பதிலாக புதிய மின்மோட்டாா்களை மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு மின் இணைப்பு அவசியம்.


ஆற்றல் குறியீடு 0.75-க்கு அதிகமாக உள்ள பழைய மின்மோட்டாா்களுக்கு மட்டுமே மானிய விலையில் புதிய மின்மோட்டாா்கள் வழங்கப்படும்.



புதிய மின்மோட்டாா்கள் மானிய விலையில்பழைய டீசல் இன்ஜின்களுக்கு பதிலாக பெற்று பயன் பெறலாம். இதற்கான மின்னிணைப்பை விவசாயிகளே தங்கள் சொந்த செலவில் பெற்றுக் கொள்ள வேண்டும்.


விவசாயிகள் புதிய மின்மோட்டாரை சொந்தமாக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் திறந்தவெளிக் கிணறுகளுக்கு மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம்.


10 குதிரைத்திறன் வரையிலான பழைய மோனோ பிளாக் அல்லது நீா்மூழ்கி மின்மோட்டாா்களுக்கு பதிலாக, அதற்கு இணையான அல்லது அதைவிடக் குறைந்த குதிரைத் திறன் கொண்ட மின்மோட்டாா்களை விவசாயிகள் மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம். 


வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மோட்டார் நிறுவனங்களில் இருந்து தங்களுக்குத் தேவையான மின் மோட்டாா்களை விவசாயிகள் தாங்களே தோ்வு செய்து கொள்ளலாம்.



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்


  • உரிய நில உரிமை ஆவணங்கள்.


  • சிறு அல்லது குறு விவசாயி சான்று.


  • ஆதாா் அட்டை நகல்.



மேலேக் கூறிய அடையாள ஆவணங்களை கொண்டு, விவசாயிகள் மானிய விலையில் மின்மோட்டாா்களை பெற்று பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு ஆட்சியர் கூறினார்.


மேலும் படிக்க....


விவசாயிகளுக்கான கிரிஷி உடான் 2.0 திட்டம்! 29 மாநிலங்களைச் சென்றடைந்துள்ளது!!


பருவம் தவறிய மழை விவசாயிகளுக்கு எச்சரிக்கை! தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!


ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் மூலம் ஆடு மற்றும் கறவை மாடுகளுக்கான காப்பீட்டு பணி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments